24 special

கேப்டன் விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது குறித்து பிரேமலதா சொன்ன தகவல்..!

Premalatha Vijayakanth
Premalatha Vijayakanth

கடந்த சில மாதங்களுக்கு முன் மத்திய அரசு மறைந்த கேப்டன் விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது வழங்குவதாக அறிவித்த நிலையில் கடந்த வாரம் நடந்த விருது வழங்கும் விழாவில் விஜயகாந்த் பெயர் இடம் பெறவில்லை என்பது பெரும் சர்ச்சையானது. இந்நிலையில், இன்று பிரேமலதா விஜயகாந்த் பத்மபூஷன் விருது குறித்து இனிப்பான செய்தியை கொடுத்துள்ளார்.


தேமுதிக நிறுவன தலைவரும், நடிகருமான விஜயகாந்த் கடந்த வருடம் இறந்தது பலரையும் சோகத்தில் ஆழ்த்தியது. மொத்த திரையுலக நட்சத்திரமும், லட்சக்கணக்கான பொதுமக்களுக்கு கலந்து கொன்டு அஞ்சலி செலுத்தினர். பிரதாமர் மோடி தமிழகத்திற்கு வந்த போதும் கேப்டன் குறித்து பபுகழாரம் சூட்டினார். அதனை தொடர்ந்து சமீபத்தில் மத்திய அரசு சார்பாக பத்மபூசன் விருது அறிவிக்கப்பட்டது. ஆனால், தேமுதிக பாஜக கூட்டணியில் இருந்து விலகி அதிமுக உடன் கூட்டணி மேற்கொண்டதால் பத்ம பூஷன் விருது கொடுப்பதில் தாமதம் ஏற்படுவதாக கூறப்பட்டது.

கடந்த வாரம் டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் பத்ம விருதுகள் வழங்கும் விழா பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது. நடைபெற்ற விழாவில் விஜயகாந்துக்கு பத்ம பூஷன் விருது வழங்கபடவில்லை என்பது பேசு பொருளாக மாறியது. இந்நிலையில், இன்று சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் தண்ணீர் பந்தல் திறந்து வைத்த அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார்.

வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் பொதுமக்களின் கஷ்டத்தை தீர்க்க தமிழ்நாடு முழுவதும் தேமுதிக சார்பாக தண்ணீர் பந்தல் தொடங்கப்படும் என கூறினார். தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் தேர்தல் பணிக்காக ஒரு மாதம் விருதுநகரில் தங்கி இருந்து தேர்தல் பணிகளை செய்திருந்தார். மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த்திற்கு பத்மபுஷன் விருது வழங்குவதற்கான எதாவது அழைப்பு வந்ததாக என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், வரும் 9 தேதி மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு பத்மபுஷன் விருது வழங்கப்பட உள்ளது. அதற்கான அழைப்பு நேற்று தான் எங்களுக்கு வந்தது. இந்த நிகழ்வில் கலந்து கொள்ள நானும், விஜயபிரபாகரனும் செல்ல இருப்பதாக பிரேமலதா கூறினார். 

முன்னதாக, பாஜகவுடன் கூட்டணியை தேமுதிக கூட்டணியயை ஏற்படுத்தவில்லை அதன் காரணமாகவே விஜயகாந்த்க்கு பத்மபூஷன் விருது வழங்கப்படவில்லையா என பலரும் கேள்வி எழுப்பினர். சமுக வலைதளங்களிலும் மத்திய அரசு மீது பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது. ஆனால், மத்திய அரசு அதற்கான நேரம் வரும்போது கொடுக்கும் என கூறிவருகின்றனர்.