24 special

ஹைதராபாத்துக்கு ஆப்பு வைத்த சென்னை பவுலர்ஸ்கள்... திரில் வெற்றி படைத்த சிஎஸ்கே..!

CSK vs SRH
CSK vs SRH

தொடர்ந்து இரண்டு போட்டிகளில் சோபிக்காமல் வந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நேற்று நடந்த ஹைதராபாத் அணியுடன் விளையாடி அபாரமான வெற்றியை பறித்து பாயின்ஸ்டேபிளில் திருப்பத்தை கொடுத்துள்ளது. சென்னை அணி சரியான கம்பெக்கை கொடுத்தது ரசிகர்களை கொண்டாட்டத்தில் தள்ளியுள்ளது.


லக்னோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் 210 ரன்கள் குவித்தும் வெற்றி முடியாமல் இதே சேப்பாக்கம் மைதானத்தில் கடந்த வாரத்தில் சிஎஸ்கே தோற்றது. அதுமட்டுமில்லாமல் கடந்த வாரம் சன்ரைஸ் அணியை எக்ஸ்போஸ் செய்தது ஹைதராபாத் அணி பின்னடைவாக அமைந்துவிட்டது. அதே தோல்வியுடன் நேற்று சென்னையில் சென்னை மற்றும் சன்ரைஸ் அணியும் மோதின. முதலில் டாஸ் வென்ற ஹைதராபாத்  டீம் கேப்டன் கமின்ஸ் பௌலின்கை தேர்வு செய்தார். அதன் படி சென்னை அணி தொடக்க வீரர்களாக களமிறங்கிய ரஹானே மற்றும் சென்னை அணி கேப்டன் ருதுராஜ் இருவரும் களமிறங்கி மாஸாக விளையாடிய ரஹானே சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தார்.

நிதானமாக விளையாடிய கேப்டன் ருத்துராஜ் மற்றும் மிச்சல் பொறுமையாக விளையாடி இருவரும் 40 ரன்களை அசால்ட்டாக கடந்தனர். மிச்சல் இதுவரை ஒரு போட்டியிலும் 50 ரன்களை எடுக்காமல் திணறி வந்த நிலையில் நெற்றி நிதானமாக விளையாடி 50 ரன்களை கடந்து சென்னை அணிக்கு ஷ்கோரை குவித்தார். ஒருபக்கம் ருதுராஜும் அதிரடியாக விளையாடி 98 ரன்களுக்கு அவுட் ஆகினார். அதன் பிறகு களமிறங்கிய ஆறு சாமி என்றழைக்கப்படும் சிவம் துபே நான்கு சிக்ஸர்களை பறக்கவிட்டார். வழக்கம்போல் கடைசியில் களமிறங்கிய தோனி ஒரு பவுண்டரி அடித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். சென்னை அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 212 ரன்கள் குவித்தது.

பின்னர் கடின இலக்கை துரத்திய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் அதிரடியாக தொடங்கிய டிராவிஸ் ஹெட் 13 ரன்களில் ஆட்டமிழக்க, அன்மோல்ப்ரீத் சிங் கோல்டன் டக் முறையில் ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து அபிஷேக் சர்மாவும் 15 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன் பிறகு வந்தவர்களும் பெரியதாக அடித்து ஆடமுடியாமால் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து சிஎஸ்கே அணியின் பௌவுலிங்கில் தடுமாறிய ஹைதராபாத் அணி அடுத்தடுத்து விக்கெட் கொடுத்து 134 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஐபிஎல் வரலாற்றில் அதிகபட்ச ரன்களை குவித்த ஹைதராபாத் அணி நேற்று அனைத்து விக்கெட்டுகளையம் இழந்தது ரசிகர்களை சோகத்தில் தள்ளியது.

இந்தப் போட்டியில் சிஎஸ்கே வெற்றி பெற்றதன் மூலமாக புள்ளிப்பட்டியலில் 6ஆவது இடத்திலிருந்து தற்போது 3ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 3ஆவது இடத்திலிருந்து 4ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் இணையத்தில் ஹைதராபாத் பிரியாணி நேற்று சென்னைக்கு இறையானது என கலாய்த்து வருகின்றனர். மேலும், ஹைதராபாத்தை பெங்களூரு அணி மற்றும் சென்னை அணி சரியான ரிவெஞ் கொடுத்துள்ளது என்றும் அடுத்ததாக சென்னைக்கு பங்காளி அணியான மும்பை அணி எப்படி ஹைதராபாத் அணிக்கு ரிவெஞ் கொடுக்கும் என்பதை பொறுத்து பார்ப்போம். சேப்பாக்கம் மைதானம் சென்னை அணி தனது கோட்டையாக வைத்துள்ளது அங்கு நேற்று வெற்றிபெற்று தனது கொடியை பறக்கவிட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.