Tamilnadu

ஏன் இராயபுரத்தின் செல்லப்பிள்ளையாக அமைச்சர் ஜெயக்குமார் கொண்டாடப்படுகிறார் இதோ அதற்கான காரணங்கள்!!

Minister jayakumar
Minister jayakumar

முதல் முதலாக ராயபுரம் சட்டமன்ற தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக 1991 ம் ஆண்டு வெற்றி பெற்று சட்டசபைக்கு செல்கிறார் ஜெயக்குமார் அஅதற்கு முன்பு ராயபுரம் தொகுதியில் நிலவிய முக்கிய பிரச்சனைகள்.. ஒன்றல்ல இரண்டல்ல..


மழைபெய்தால் இடுப்பளவு தண்ணீர் தேங்கி நிற்கும் மக்களின் இயல்பு வாழ்க்கையே மாறிவிடும்...கழிவு நீர் செல்ல வசதி கிடையாது, வீடு கடைகள் முன்பு அப்படியே தேங்கி நின்று சுகாதாரா சீர்கேட்டினை உண்டாக்கும்..முறையாக சாலை வசதி கிடையாது, எங்கு பார்த்தாலும் குண்டும் குழியுமான சாலைகள்...நிர்வாக ரீதியாக பல பிரச்சனைகள் என்றால் தொகுதியில் ரவுடிசம் தலைவிரித்து ஆடியது தினமும் வியாபாரிகளிடம் மாமூல் கேட்டு தொல்லை, கட்ட பஞ்சாயத்து 

 நில அபகரிப்பு என நாளுக்கு நாள் மோசமான நிலையில் இருந்தது ராயபுரம் தொகுதி..எங்கு பார்த்தாலும் குடிசை பகுதிகள், மின் சாரம் இருப்பதே கேள்வி குறியாக இருந்து.... ஆனால் 1991 -ம் ஆண்டு சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்ற நாள் முதல் தனது அதிரடியான கள பணியை தொடங்கினார்.. முதலில் வியாபாரிகள், தொகுதி மக்கள் நிம்மதியாக வாழ நேரடியாக தானே களத்திற்கு சென்று சட்டம் ஒழுங்கை நிலை நாட்டி கட்ட பஞ்சாயத்து, நில அபகரிப்பு, மாமூல் கேட்டு தொல்லை செய்த ரவுடிசத்தை ஒழித்தார்.

முறையாக மழைநீர் வடிகால் வாரியம் அமைத்து மழை நீர் சாலைகளில் தேங்காமல் மக்கள் இயல்பு வாழ்கை பாதிக்கப்படாமல் நடவடிக்கை எடுத்தார்,குடிசை பகுதிகள் நிறைந்த தனது தொகுதியில் குடிசை மாற்று வாரியம் மூலம் வீடுகள் கிடைக்க முன்னின்று உதவினார்.

ராயபுரத்தில் போக்கு வரத்து பாதிப்பு உண்டான நிலையில் சுற்றுவட்ட மேம்பலாம், மின்ட் பாலம், ஸ்டான்லி சுரங்கபாதை அமைத்து நகரின் போக்குவரத்து பாதிப்பை சரி செய்து தொகுதி மக்களின் குறைகளை நீக்கினார்.

மீனவர் நலனை பொறுத்தமட்டில் காசிமேடு மீன் துறைமுகத்தில் 100 கோடி செலவில் பல்வேறு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன, மீனவர்கள் மழையிலும் வெயிலிலும் இருந்து வியாபாரம் செய்வதை கருத்தில் கொண்டு சர்வதேச தரத்தில் மீன் மார்க்கெட் கட்டி கொடுக்கப்பட்டுள்ளது.

மீனவர் நல வாரியம் மூலம் கடந்த ஆண்டு 1000 வீதம் மூன்று முறை 3000 ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளது.கொரோனா காலத்தில் அம்மா உணவகம் மூலம் மூன்று வேலையும் சொந்த செலவில் உணவு வழங்கியது, கொரோனா பெரும் தொற்று காலத்தில் 52 ஆயிரம் குடும்பங்களுக்கு நேரடியாக சென்று அரிசி, சர்க்கரை, ஆட்டா எனஅத்தியாவசிய பொருள்களை சொந்த செலவில் வழங்கி இருக்கிறார் ஜெயக்குமார்.

இது போன்று பல்வேறு நலத்திட்ட பணிகளை முன்னின்று செய்த காரணத்தால் தான் எப்போதும் ராயபுரம் தொகுதியின் ராஜா என்பதை ஒன்றல்ல இரண்டல்ல 4 முறை தொடர்ச்சியாக வெற்றி பெற்று நிரூபித்துள்ளார்.. இந்த முறையும் வெற்றி பெற்று 5 வது முறையாக தொடர் வெற்றியை அமைச்சர் ஜெயக்குமார் பதிவு செய்வார் என்பதில் எந்த மாற்றமும் கிடையாது.