24 special

அதிர வைக்கும் பகீர் புள்ளிவிவரங்கள்! துடிதுடித்து இற*கும் பெண்கள் திமுகவுக்குக் காத்திருக்கும் மரண அடி

PMMODI,MKSTALIN
PMMODI,MKSTALIN

தமிழகத்தில் "ஒவ்வொருவரையும் பின்தங்க விடமாட்டேன்" என்கிற கவர்ச்சிகரமான வாசகங்களுடன் சந்துக்கு சந்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தாலும், யதார்த்த நிலைமை அதற்கு நேர்மாறாக இருப்பதைச் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு அப்பட்டமாக வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. தமிழக மக்கள் இன்று எதிர்பார்ப்பது வெற்று விளம்பரங்களை அல்ல, மாறாகத் தங்களின் மற்றும் தங்கள் குடும்பத்தினரின் பாதுகாப்பைத்தான். ஆனால், துரதிர்ஷ்டவசமாகத் தமிழகம் இன்று ரத்தக் கரையோடுதான் விடிந்து கொண்டிருக்கிறது என்பதற்கு நாளுக்கு நாள் பெருகிவரும் பழிக்குப்பழி கொலைகளும், தென்மாவட்டங்களில் தொடரும் சாதிய ரீதியிலான கொடூரத் தாக்குதல்களும் சாட்சியாக உள்ளன. குறிப்பாக, பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் மாநிலத்தின் மனசாட்சியை உலுக்கி வருகின்றன. 

தேர்தல் நெருங்கும் வேளையிலாவது அரசு விழித்துக்கொள்ளும் என நம்பிய மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. நாமக்கல்லில் ஏழு வயது சிறுமி, விளாத்திக்குளத்தில் பிளஸ் 2 மாணவி, திருவள்ளூரில் இளம்பெண் என அடுத்தடுத்து அரங்கேறிய கொடூரங்கள் தமிழகத்தைப் பாதுகாப்பற்ற மாநிலமாக மாற்றியுள்ளன. புள்ளிவிவரங்களைப் பார்க்கும்போது அதிர்ச்சி மேலிடுகிறது; திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற 2021-ல் 4,415 ஆக இருந்த குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், 2022-ல் 4,906 ஆகவும், 2024-ல் சுமார் 6,975 ஆகவும் உயர்ந்துள்ளது வேதனைக்குரியது. கடந்த நான்கரை ஆண்டுகளில் மட்டும் சுமார் 20,877 குழந்தைகளின் வாழ்வு சிதைக்கப்பட்டுள்ளது தகவல்கள் தெரிவிக்கிறது. 


இது திமுக அரசின் நிர்வாகத் தோல்வியையே பறைசாற்றுகிறது. அதைவிடக் கொடுமை என்னவென்றால், கடலூர் பக்கிரிசாமியில் தொடங்கி கிருஷ்ணகிரி பெரியநாயகம் வரை ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்களே இத்தகைய பாலியல் குற்றங்களில் தொடர்ந்து சிக்கி வருவதுதான். அரக்கோணம் தெய்வச் செயல் மீதான புகார்கள் எல்லாம் ஆளும் கட்சியில் இருப்பவர்கள் காமுகர்களா அல்லது காமுகர்கள்தான் கட்சியை நடத்துகிறார்களா என்ற அச்சத்தை மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது. அண்ணா பல்கலைக்கழகப் பேராசிரியர்களைக் காப்பாற்றுவதாகட்டும் அல்லது தவறு செய்யும் அதிகாரிகளுக்குத் துணை போவதாகட்டும், ஒட்டுமொத்தத் தமிழகத்தையும் சீரழிவின் விளிம்பிற்கு ஸ்டாலின் அரசு தள்ளியுள்ளது. 

முதல்வர் சமூக ஊடகப் பிரபலங்களுடன் பொழுதுபோக்கிக் கொண்டிருக்கும் வேளையில், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டிய டிஜிபி பதவியைக் கூட நிரந்தரமாக நிரப்ப முடியாமல், பொறுப்பு டிஜிபியைக் கொண்டு காலம் தள்ளுவது நிர்வாகச் சீர்கேட்டின் உச்சம். பொறுப்பு டிஜிபியுடன் முதல்வர் கலந்து பேசிப் பல மாதங்கள் ஆகிறது என்ற தகவல் அதிகார வர்க்கத்தையே அதிர வைக்கிறது.  இரும்புக்கரம் கொண்டு குற்றங்களை ஒடுக்குவேன் என்று சொன்ன வாக்குறுதி இன்று துருப்பிடித்துப் போய்விட்டது என்பதும், அந்தத் துருப்பிடித்த இரும்புக்கரத்தால் தமிழகம் சீரழிந்து கிடக்கிறது என்பதும் மறுக்க முடியாத நிதர்சனமான உண்மை