Cinema

சூப்பர் ஸ்டார் அவரு... அவரையா கவுண்டமணி இப்படி சொன்னாரு...?

superstar
superstar

சினிமாவில் ஆக்ஷன் சீன்களும், காதல் சீன்களும் எவ்வளவு அளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறதோ அதே அளவிற்கு திரைப்படம் பார்க்கும் அனைவரையும் சிரிக்க வைப்பதற்கு காமெடியும் மிகவும் முக்கியமானதாகும். திரைப்படம் என்றாலே மக்கள் பொழுது போக்குவதற்காக பார்க்கும் ஒன்றாக இருந்து வருகிறது. அவ்வாறு அவர்கள் பார்க்கும் திரைப்படங்களில் காமெடிகள் கலந்திருந்தால்தான் அந்த திரைப்படம் அவர்களின் மனதில் நீங்காத இடத்தைப் பெற்று நல்ல வரவேற்பை பெறும் என்பது அனைவரின் கருத்தாகவும் இருந்து வருகிறது. இவ்வாறு காமெடி காட்சிகளில் நடிப்பதற்கான காமெடி டாக்டர்கள் பலர் இன்று உருவாகிக்கொண்டே தான் உள்ளனர். 


ஆனால் 90'ஸ் கிட்ஸ்களின் ஃபேவரட் காமெடி ஆக்டர் ஆக இருந்து வந்தவர் தான் கவுண்டமணி!! இவர் 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரிட் காமெடியனாக மட்டுமல்லாமல் தற்போது உள்ள 2k கிட்ஸ்களின் ஃபேவரட் ஆகவும் மாறி வருகிறார். இவரின் காமெடிகள் அனைத்தும் தற்போது உள்ள இளைஞர்கள் அவர்களின் நண்பர்களை கலாய்க்கும் விதமாகவும் அமைந்திருப்பதால் இன்றைய இளைஞர்கள் கவுண்டமணியின் காமெடிகளை அதிக அளவில் விரும்பி பார்க்கின்றனர். மேலும் கவுண்டமணி அதிக அளவில் செந்திலுடன் சேர்ந்து காமெடி சீன்ஸ்களில் நடித்திருப்பார். இவர்கள் இருவரின் காம்போ எப்போதுமே சூப்பர் ஹிட் ஆக தான் அமைந்திருக்கிறது. கவுண்டமணி எல்லா காமெடி சீன்களிலும்  செந்திலை வைத்து கலாய்ப்பது போலவே அமைந்திருக்கும். 

இது போன்ற காமெடி  வேறு எந்த காமெடியன்களும் பண்ணாத அளவிற்கு இவர்கள் இருவரின் காம்போ எப்போதுமே சூப்பராக இருக்கும். மேலும் கவுண்டமணியின் "காந்த கண்ணழகி, உனக்கு நான் மினிஸ்ட்ரியில இடம் பார்த்து இருக்கேன்!!" என்பதுபோல ஒரு காட்சியில் நடித்திருப்பார். அதில் அவரை பூக்குளியில் இறங்குவது என அழைத்து தீ மிதிக்க அழைத்து செல்வது போல அந்த காட்சி அமைந்திருக்கும். இந்த காமெடி இன்றளவும் கூட அனைவரும் விரும்பி பார்க்கும் ஒன்றாக அமைந்து வருகிறது. மேலும் காந்த கண்ணழகி என்ற வார்த்தையை வைத்து தற்பொழுது சிவகார்த்திகேயன் நடித்த நம்ம வீட்டு பிள்ளை என்னும் திரைப்படத்தில் கூட பாடல் ஒன்று அமைந்திருந்தது. இவ்வாறு கவுண்டமணி இப்போது திரைப்படங்களில் அதிக அளவில் நடிக்காவிட்டாலும் கூட அவரின் பல காமெடிகள் இன்றளவும் மக்களால் அதிக அளவில் வரவேற்பை பெற்று வருகிறது என்று கூறலாம்!! 

இந்த நிலையில் கவுண்டமணி பற்றி ஒருவர் கூறும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. ஒண்ணா இருக்க கத்துக்கணும் எனும் திரைப்படத்தில் கவுண்டமணி சுடுகாட்டில் வெட்டியான் வேலை பார்க்கும் கேரக்டரில் நடித்திருந்தார் என்று அந்த வீடியோவில் அவர் கூறியுள்ளார். வெட்டியானாக நடிப்பதற்கு பலரும் யோசிப்பார்கள் ஆனால் கவுண்டமணி மிகவும் துணிச்சலாக  அந்த திரைப்படத்தில் நடித்தார்!! முதலில் அந்த திரைப்படத்திற்கு 25 நாள் கால் சீட்டு கொடுத்தார்கள்!! பிறகு 40 நாள் கொடுத்தார்கள்!! இப்போது ஒரு நாளைக்கு 2 லட்சம் வரை வாங்குவார் என வீடியோவில் அவர் கூறினார்.

மேலும் ஏவிஎம் ஸ்டுடியோ தயாரிப்பில் எஜமான் திரைப்படம் எடுக்கும் பொழுது கவுண்டமணியிடம் கேட்டுள்ளனர். 15 நாட்கள் ஒரு நாளைக்கு ஒரு லட்சம் என்ற விதத்தில் 15 லட்சம் என்று சொல்லி உள்ளனர். ஆனால் கவுண்டமணி ஐம்பது லட்சம் கேட்டுள்ளார். என 50 லட்சம் கேட்கிறீர்கள் என்று கேட்ட பொழுது, அதற்கு கவுண்டமணி சரி நான் 15 லட்சம் வாங்கிக் கொள்கிறேன்!! ஆல் ரஜினி கேரக்டரை நான் பண்ணுகின்றேன்!!! ரஜினியை என்னுடன் காமெடியனாக போட்டுவிடுங்கள் என்று மக்களாக பதில் சொல்லியுள்ளார்!! இது குறித்த வீடியோ தற்பொழுது இணையத்தில் வைரலாகி பார்ற அந்த மனுஷன் அப்பவே அப்படித்தான்!! என்பது போல கமெண்ட்களும் எழுந்து வருகிறது