Tamilnadu

விவாகரத்து பெற்ற கிரிக்கெட் வீரர்கள் பட்டியலில் இணையும் ஹர்திக் பாண்டியா.... கசிந்த பல உண்மைகள்....

Hardik Pandya
Hardik Pandya

சினிமா வட்டாரங்களில் பிரபலங்களுக்கிடையே ஏற்படும் காதல் மற்றும் திருமணங்கள் பற்றி தெரிந்து கொள்வதற்கு எந்த அளவிற்கு ரசிகர்களிடையே ஒரு ஆர்வத்தை கிளப்புகிறதோ அதே அளவிற்கு கிரிக்கெட் வீரர்களின் காதல் கதையையும் திருமணம் குறித்த செய்தியையும் அறிந்து கொள்வதிலும் மிகுந்த ஆர்வமாக உள்ளனர். அப்படி கிரிக்கெட் வீரர்களின் வாழ்க்கையை எடுத்துக் கொண்டால் முதன் முதலில் கண்முன்னே வந்து நிற்பது சச்சினும் அவருடைய மனைவி அஞ்சலியும்தான் ஏனென்றால் அஞ்சலி தன்னைவிட 5 வயதில் மூத்தவர் என்பதையும் பொருள்படுத்திக் கொள்ளாமல் காதலித்து சச்சின் திருமணம் செய்து கொண்டார். மேலும் தற்போது வரை ஒரு அழகான வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர் இவர்களை தொடர்ந்து அடுத்ததாக டோனி மற்றும் சாக்ஷியின் ஜோடி அனைவராலும் ரசிக்கக்கூடிய ஒரு ஜோடியாகும்.


சாக்ஷி வந்த பிறகு தோனிக்கும் உலக கோப்பை கிடைத்தது. மேலும் பல நேரங்களில் தோனியின் முன்னேற்றத்திற்கும் சாக்ஷி உறுதுணையாக இருந்து வருகிறார். இவர்களைப் போன்று அனைவராலும் ரசித்து பார்க்கக்கூடிய மற்றொரு ஜோடி யார் என்றால் விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா ஜோடிதான்! ஏனென்றால் இவர்களின் காதல் கதை முழுக்க முழுக்க செய்திகளிலும் தூக்கம் வலைதளத்திலும் அதிக அளவில் பேசப்பட்டு பிறகு திருமணத்தில் முடிந்து தற்போது அவர்களுக்கு வாமிகா என்ற பெண் குழந்தை உள்ளது. இவர்களின் வரிசையிலேயே அடுத்ததாக மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா மற்றும் நட்டாஷா ஸ்டான்கோவிச் ஜோடி திருமணம் செய்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது ஆனால் எதிர்பாராத விதமாக தற்போது இருவரும் பிரிந்து இருப்பதாக ஒரு பேச்சு உலா வருகிறது. அது மட்டும் இன்றி தங்களைக் குறித்தும் தாங்கள் பிரிந்து விட்டதாக எழுகின்ற வதந்திக்கும் இருதரப்பிலிருந்தும் மறுப்பும் தெரிவிக்கப்படவில்லை அதிகாரப்பூர்வமாக பிரிந்து விட்டோம் என்று அறிவிப்பும் இதுவரை இல்லை இதனால் இவர்களது ரசிகர்கள் பெரும் குழப்பத்திலும் எதிர்பார்ப்பிலும் உள்ளனர். 

இவர்கள் மட்டுமின்றி எப்படி சினிமா உலகில் நட்சத்திரங்கள் திருமணம் செய்து கொண்டு பிறகு விவாகரத்து பெறுவது தற்போது அதிகமாகி வருகிறதோ அதே மாதிரி கிரிக்கெட் உலகிலும் கிரிக்கெட் வீரர்கள் திருமணம் செய்து கொண்டு பிறகு விவாகரத்தும் பெற்றுள்ளனர் அப்படி விவாகரத்து பெற்றவர்களின் தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது. அதன் முதலாவதாக தனது தோழியான நிகிதா பஞ்சாரா வை தினேஷ் கார்த்திக் காதலித்த திருமணம் செய்து கொண்டார் பிறகு முரளி விஜய் உடன் நிகிதா வஞ்சனாவிற்கு இருந்த உறவுமுறை காரணமாக அவர்களின் இந்த திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தது. இதை அடுத்து தான் ஸ்குவாஷ் வீராங்கனியான தீபிகா பல்லிகலுடன் காதல் வயப்பட்டு 2015ல் திருமணம் செய்து கொண்டார். இவர்களைத் தொடர்ந்து கிரிக்கெட் வீரரான ஷிவர் தவான் 2012 பேஸ்புக் மூலமாக அறிமுகமான ஆஷா முகர்ஜியை காதலித்து திருமணம் செய்து கொண்டார் ஆனால் அவர்களது உறவும் பாதியிலேயே முடிவு பெற்று விவாகரத்தில் முடிந்தது. 

மேலும் இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி 2018 ஆம் ஆண்டு தனது மனைவி ஹசின் சஹானை பிரிந்துவிட்டார். அதோடு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான வினோத் காம்ப்ளி - நோயெல்லா லீவிஸ் தம்பதி, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன் - நவ்ரீன் தம்பதி, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி - ரிது சிங், தம்பதி, மனோஜ் பிரபாகரன் - சந்தியா தம்பதி, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங்கின் தந்தை யோகராஜ் சிங் - ஷப்னா, ஜவஹர்லால் ஸ்ரீநாத் - ஜோத்ஸனா தம்பதி என பல கிரிக்கெட் வீரர்களின் திருமணங்கள் பாதியிலேயே விவாகரத்தை சந்தித்துள்ளது. இந்த வரிசையில் தற்போது முன்னணி மற்றும் பிரபல ஜோடிகளாக விளங்குகின்ற ஹர்திக் பாண்டியா மற்றும் நடாஷாவும் இணைவார்களோ என்ற வகையில் பேச்சு எழுந்துள்ளது.