India

#BREAKING குஜராத் மாநில காந்தி நகர் உள்ளாட்சி தேர்தல் தலைகீழாக மாறிய வெற்றி வாய்ப்பு !!

Gandhi nagar
Gandhi nagar

காந்திநகர்: குஜராத் தலைநகர் காந்திநகர் மாநகராட்சித் தேர்தல் வாக்குப்பதிவு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது. ஆளும் பாஜக, எதிர்க்கட்சியான காங்கிரஸ் உள்ளிட்டவையோடு ஆம் ஆத்மி கட்சியும் இத்தேர்தலில் களம் இறங்கியது அங்கு மும்முனைப் போட்டி நிலவுகிறது மாநகராட்சியில் உள்ள 11 வார்டுகளுக்கு 284 மையங்களில் வாக்குப்பதிவு நடைபெற்றது.


இதில், நான்கு மையங்கள் மிகவும் பதற்றமானவை என்றும், 144 மையங்கள் பதற்றமானவை என்றும் குஜராத் மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவித்தது, மேலும், 44 கவுன்சிலர் பதவிகளுக்கு முக்கியக் கட்சிகளான பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சி, பகுஜன் சமாஜ், தேசியவாத காங்கிரஸ் என மொத்தம் 162 வேட்பாளர்கள் களம் கண்டனர்.

முதலமைச்சர் பூபேந்திர படேல் பதவியேற்ற பின் நடைபெறும் முதல் தேர்தல் இது என்பதால், இத்தேர்தல் மீது பெரும் எதிர்பார்ப்பு நிலவியது இத்துடன், தாரா (THARA) மற்றும் ஓக்கா (OKHA) மாநகராட்சிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. இதில் வழக்கத்திற்கு மாறாக ஆளும் கட்சியான பாஜக அபார வெற்றி பெற்றுள்ளது.

44 இடங்களுக்கு நடைபெற்ற  தேர்தலில் ஆளும் கட்சியான பாஜக 41 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது, எதிர்க்கட்சியான காங்கிரஸ் 2 இடத்திலும், 1 இடத்தில் ஆம் ஆத்மி கட்சியும் வெற்றி பெற்றுள்ளன எதிர்க்கட்சிகள் இல்லாத நிலை உருவாகியுள்ளது, பிரதமர் மோடியின் சொந்த மாநிலம் என்பதால் இந்த எதிர்பார்ப்பு அதிகரித்து காணப்பட்டது.

ஆளும் கட்சி சொந்த மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நேரத்தில் எதிர்ப்பை சந்திக்கும் நிலை உருவாவது வழக்கம் அதிலும் கடந்த 25 ஆண்டுகளாக குஜராத்தில் பாஜக ஆட்சி செய்த மாநிலத்தில் பல்வேறு எதிர்ப்பையும் மீறி உள்ளாட்சி தேர்தலில் பாஜக வெற்றி பெறுவது தேர்தல் முடிவுகளை தலைகீழாக மாற்றியுள்ளது.