
திமுக ஆட்சி காலமான 2006 - 2011 இடைப்பட்ட காலத்தில் உயர் கல்வித் துறை அமைச்சராக இருந்த பொன்முடி வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அவர் மீதும் அவரது மனைவி விசாலாட்சி மீதும் சொத்துக்குவிப்பு வழக்கு லஞ்ச ஒழிப்பு துறையால் பதியப்பட்டது அந்த வழக்கு விசாரணை 2016ல் ஒரு முடிவை எட்டியது, அதாவது விழுப்புரம் நீதிமன்றம் இந்த வழக்கில் போதிய ஆதாரங்கள் இல்லை என்று பொன்முடி மற்றும் அவரது மனைவியின் வரையும் விடுதலை செய்தது இதனை அடுத்து இந்த விசாரணையை மறு ஆய்வு செய்த சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இந்த வழக்கை மீண்டும் கையில் எடுத்து மறு விசாரணைக்கு உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து விசாரிக்கப்பட்ட இந்த வழக்கின் தீர்ப்பு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு நடைபெற்றது அதில் இரு தரப்பு வாதங்களையும் கேட்டுக் கொண்ட நீதிபதி ஜெயசந்திரன் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி இருவரையும் விடுதலை செய்த விழுப்புரம் நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்ததோடு டிசம்பர் 21ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று தீர்ப்பளித்தார் இதனை அடுத்தே அவரது பதவி நீக்கப்படுவதாக தமிழக அரசு தரப்பில் அறிவிப்பு வெளியாகி இருக்க வேண்டும் ஆனால் வெளியாகாமல் இருந்தது.
இதனை தொடர்ந்து பொன்முடி மற்றும் விசாலாட்சி இருவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆஜராகினர், அதோடு நீதிபதி ஜெயச்சந்திரன் இந்த வழக்கில், இருவருக்கும் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும் இரண்டு பேருக்கும் தலா ரூபாய் 50 லட்சம் அபராதத்தையும் விதித்தார், மேலும் இவ்விருவர் மீதும் விதிக்கப்பட்டுள்ள தண்டனையை குறித்து மேல்முறையீடு செய்வதற்கு 30 நாட்களுக்கு தண்டனை நிறுத்தி வைக்கப்படுவதாகவும் கூறினார். இதனை அடுத்து சென்னை நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்த பொன்முடி தரப்பு அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவியின் வயது மற்றும் உடல் நிலையை கருத்தில் கொண்டு வாதங்கள் முன்வைக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து பொன்முடி சரணடைவதற்கு தற்போது விலக்கு அளிக்கப்பட்டுள்ளது, ஆனால் முன்னாள் அமைச்சர் பொன்முடி விழுப்புரத்தில் நடந்த இளைஞர் அணி சுடர் ஓட்டத்தில் உரத்த குரலில் கோஷம் எழுப்பி அந்த நடை பயணம் முழுவதும் திடமாக நடந்து வந்தார்.
அதற்குப் பிறகு கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற திமுக இளைஞரணி இரண்டாவது மாநாட்டில் கலந்து கொண்டு திடமாக அமர்ந்து இருந்ததும் தற்பொழுது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பொன்முடி தனது வயது மற்றும் உடல் நிலையில் குறைபாடு இருப்பதாகவும் அதனால் சரணடைவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்றும் வாதங்கள் முன்வைக்கப்பட்ட வந்த நிலையில் அதன் வெளிப்பாடாக உச்ச நீதிமன்றமும் இதற்கு விலக்கு அளித்தது ஆனால் தற்பொழுது பொன்முடி இரண்டு நிகழ்ச்சிகளிலும் திடமாக கலந்து கொண்டு உரத்த குரலில் பேசியதையே ஆதாரமாகக் கொண்டு பொன்முடியை சரணடைய வைக்க வேண்டும் என்று எதிர் தரப்பில் இருந்து தரவுகள் உச்சநீதிமன்றத்தில் கொண்டு செல்வதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் பொன்முடி விரைவில் சரணடைந்து சிறை தண்டனை பெறுவார் என்றும் கூறப்படுகிறது. இப்படி பாடுபட்டு வாங்கிய உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை நாமே கெடுத்து விட்டோமே என்று பொன்முடி தரப்பு வருத்தத்தில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

 
                                             
                                             
                                            