Tamilnadu

ஐந்து மாநில தேர்தல் "கரையான்" புற்று பரவல்.. பளிச் என பதில் சொன்ன பானு கோம்ஸ்..!

Banu
Banu

ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகி பரபரப்பை உண்டாக்கின 5-ல் நான்கு மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளது, காங்கிரஸ் கட்சி போட்டியிட்ட 5 மாநிலங்களிலும் படு தோல்வி அடைந்துள்ளது. ஆட்சியில் இருந்த பஞ்சாப் மாநிலத்தை ஆம் ஆத்மீ கட்சியிடம் பறி கொடுத்துள்ளது காங்கிரஸ்.


பாஜக ஆட்சியில் இருந்த உத்திர பிரதேசம், உத்ரகாண்ட், மணிப்பூர், கோவா ஆகிய மாநிலங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது, உத்திர பிரதேச தேர்தல் 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக பார்க்க படும் சூழலில் அங்கு மீண்டும் பாஜக ஆட்சியை பிடித்து இருப்பது எதிர்க்கட்சிகளின் கனவை கனவாகவே மாற்றியுள்ளது.

இந்த சூழலில் ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் குறித்து கருத்து தெரிவித்துள்ளார் பானு கோம்ஸ் இது குறித்து அவர் தெரிவித்தது பின்வருமாறு :- உ.பி மக்கள் தெளிவாகவும்,  உறுதியாகவும் மீண்டும் தங்களை தற்காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

எதிர்ப்புகளையும், உருவாக்கப்பட்ட வெறுப்புகளையும்  தாண்டிக் கடந்திருக்கும் தெளிவான யோகி அலை  யோகியின் சமரசங்கள் அற்ற நிர்வாகத்திற்கான மக்களின் அங்கீகாரம்,Congratulations Yogi Ji.கோவா, மணிப்பூர், உத்தரகாண்ட் என்று அனைத்திலும் மோடியின் காவி அலை.

எல்லை மாநிலமான பஞ்சாபின் நிலை தான் சொல்வதற்கில்லை. பஞ்சாப்  டெல்லி போல  ஒரு பெருநகரத்திற்கான  நிர்வாகத்தின் ஒரு பகுதி மட்டுமே அல்ல. கெஜ்ரி ஒளிந்து கொள்ள இயலாது. வர இருக்கும் 5 வருடங்கள் பஞ்சாபியர்களுக்கும் அனுபவ பாடத்தை கொடுக்கும்.

யானைக்கும், இறக்கும் தருவாயில் இருக்கும் வயதான முதலைக்கும்  நடக்கும் சண்டையில்...கரையான் புற்று தடுப்பாரின்றி பரவிக்  கொண்டிருக்கிறது என குறிப்பிட்டுள்ளார் பானு கோம்ஸ், கரையான் புற்று என ஆம் ஆத்மீ கட்சி குறித்து தனது கருத்தை பதிவு செய்துள்ளார் பானு கோம்ஸ்.