24 special

ட்விட்டர் CEO வுக்கு ஷாக் கொடுத்த எலான் மஸ்க்..!

twitter
twitter

மியாமி : டெஸ்லா கார் நிறுவனத்தின் தலைவரும் உலகபணக்காரர்களில் ஒருவருமான எலான் மஸ்க் ட்விட்டரை வாங்கிவிட்டதாக செய்திகள் பரவி வந்த நிலையில் ஒப்பந்தத்தை தள்ளிபோடுமாறு எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்திடம் கூறியுள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது.


ட்விட்டர் நிறுவனத்தின் 9.27 சதவிகித பங்குகளை வைத்திருந்த எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை தான் வாங்க விரும்புவதாக தெரிவித்தார். அதைத்தொடர்ந்து ட்விட்டர் நிறுவனத்திற்கும் எலானுக்கும் நடந்த பலகட்ட பேச்சுவார்த்தைகளுக்கு அடுத்து 44 பில்லியன் டாலர்களுக்கு ட்விட்டர் நிறுவனத்தை வாங்கவிருப்பதாக எலான் மஸ்க் அறிவித்தார்.

அதுதொடர்பான நிர்வாகவிற்பனை பணிகள் நடைபோற்றுக்கொண்டிருக்கும் வேளையில் ஒப்பந்தத்தை தள்ளிப்போடும்படி எலான் கூறியுள்ளது ட்விட்டர் நிறுவனத்திற்கு அதிர்ச்சியை உண்டுபண்ணியுள்ளது. மியாமியில் நேற்று நடந்த சம்மிட்டில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார் எலான். இதுகுறித்து அவர் கூறுகையில்,

ட்விட்டர் நிறுவனத்தை நான் வாங்கும் முன்பு பல நிபந்தனைகள் விதித்திருந்தேன். மேலும் அந்நிறுவனத்திடம் அறிக்கைகள் கேட்கப்பட்டிருந்தன. அதில் ட்விட்டரில் உலவும் போலி கணக்குகள் பற்றிய அறிக்கையும் ஒன்று. தற்போதைய சந்தைநிலவரப்படி ட்விட்டரின் சந்தைமதிப்பு எட்டு சதவிகிதம் அளவில் சரிந்துள்ளது. இந்த ஒப்பந்தம் 39 மில்லியன் டாலருக்கு கூட முடிக்கப்படலாம்.

ஆனால் அதுவல்ல பிரச்சினை. ட்விட்டரில் போலிக்கணக்குகள் மற்றும் ஸ்பேம் பாட்டுகள் வெறும் 5 சதவிகிதம் மட்டுமே உள்ளது என நேற்றுமுன்தினம் நிறுவனத்தரப்பு தெரிவித்தது. ஆனால் CEO வுடனான எனது சந்திப்பில் 20 சதவிகிதம் போலிக்கணக்குகள் இருப்பதாக கூறினார். எனக்கு உண்மையான அறிக்கை தெரியப்படுத்தப்பட வேண்டும். 

எனது தொழில் நேர்மையாக இருக்கவேண்டும் என நான் விரும்புகிறேன். முன்னுக்குப்பின் முரணான தகவல்கள் எனக்கு கவலையை தருகிறது. 20 சதவிகிதம் போலிக்கணக்குகள் இருப்பதாக கூறிய ட்விட்டர் CEO பொதுவெளியில் அதை சொல்ல  மறுக்கிறார். அதனால் முழு அறிக்கையும் வெளிப்படுத்தப்படும் வரை எனது ஒப்பந்தத்தை நிறுத்திவைக்கிறேன். நான் கூறிய பின்னர் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கலாம்" என மியாமியில் நடந்தகூட்டத்தில் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

மேலும் நேற்று  முன்தினம் ட்விட்டரில் இருந்து விலகிய ஒரு அதிகாரி இடதுசாரிகள் அந்நிறுவனத்தில் நிறைந்திருப்பதாகவும் வலதுசாரிகளுக்கு எதிராக பணியாளர்களை செயல்படசொல்லியும் இடதுசாரிகளுக்கு ஆதரவாக செயல்பட சொல்லி வற்புறுத்தியும் வருவதாக வீடியோ ஒன்று வெளியிலிட்டிருந்தார். அது சமூக வலைத்தளங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது.