24 special

முதலில் உங்கள் வீட்டை ஒழுங்குபடுத்துங்கள்..! பாகிஸ்தானை கண்டித்த இந்தியா !

india pakistan
india pakistan

புதுதில்லி : அமெரிக்கா மெக்சிகோ எல்லையை பற்றியோ சீனா தைவான் மற்றும் ஜப்பான் எல்லைகளை பற்றியோ வடகொரியா தென்கொரியா எல்லைகளை பற்றியோ வாய்திறவாத உலக சமூகம் மற்றும் ஊடகங்கள் இந்திய எல்லைகள் பற்றி எப்போதும் பாடம் எடுக்கும். சமீபத்தில் சீனா அருணாசலப்பிரதேசம் தன்னுடையது என வரைபடம் வெளியிட்டிருந்தது.


அதேபோல கூகிள் உட்பட சில இந்திய பத்திரிக்கைகள் கூட ஜம்மு காஷ்மீர் பாகிஸ்தானுடையது என குறிக்கும் வகையில் வரைபடம் வெளியிட்டு சர்ச்சைகளில் சிக்கின. இந்நிலையில் ஜம்மு மற்றும் காஷ்மீர் யூனியன் பிரதேசங்களில் எல்லைநிர்ணய நடவடிக்கை தொடர்பாக பாகிஸ்தான் தேசிய சட்டமன்றத்தில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்தை கேலிக்கூத்து என இந்திய வெளியுறவுத்துறை மறைமுகமாக கிண்டலடித்துள்ளது.

மே 12 அன்று பாகிஸ்தான் தேசிய சட்டமன்றத்தில் இந்த மாத தொடக்கத்தில் வெளியிடப்பட்ட எல்லை நிர்ணய ஆணையத்தின் அறிக்கையை நிராகரிக்கும் தீர்மானத்தை நிறைவேற்றியது. அந்த அறிக்கையில் "ஜம்மு காஷ்மீர் பிராந்தியத்தின் பெரும்பான்மையாக வாழும் இஸ்லாமியர்களை சிறுபான்மையாக மாற்றுவதையும் காஷ்மீர் மக்களை ஓரங்கட்டவும் அவர்களின் உரிமையை பறிக்கவும்,

அவர்களின் அதிகாரத்தை பறிக்கவும் பிஜேபியின் அரசியல் மற்றும் தேர்தல் நோக்கங்களை முன்னெடுப்பதை தனது நோக்கமாக கொண்டுள்ளது. இதனால் இந்த சட்டமன்றம் அந்த அறிக்கையை நிராகரிக்கிறது" என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நேற்று இந்த தீர்மானத்திற்கு பதிலடி கொடுத்த இந்திய வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் அரிந்தம் பாக்சி "பாகிஸ்தானின் சட்டவிரோத மற்றும் கட்டாய ஆக்கிரமிப்பில் உள்ள இந்திய பகுதிகள் உட்பட இந்தியாவின் உள்விவகாரங்களில் தலையிட அல்லது அதைப்பற்றி உச்சரிக்கவோ பாகிஸ்தானுக்கு உரிமையில்லை. யூனியன் மற்றும் லாடாக்கின் முழுப்பகுதியும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாகவே இருந்துவருகிறது. 

தங்கள் சொந்தவீட்டை ஒழுங்காய்க்காமல் பாகிஸ்தான் தலைமை இந்தியாவின் உள்விவகாரங்களில் தொடர்ந்து தலையிடுவதும் அடிப்படையில்லாத ஆத்திரமூட்டும் இந்திய எதிர்ப்பு பிரச்சாரத்தில் ஈடுபடுவதும் வருத்தமளிக்கிறது. பாகிஸ்தானின் செயல்கள் கேலிக்கூத்தாகவே உள்ளது" என வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் அரிந்தம் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.