
தமிழ் திரை உலகில் வசூல் மன்னனாக உள்ள நடிகர் விஜய் 2009ல் தனது ரசிகர் நற்பணி மன்றத்தை மக்கள் இயக்கம் என்கிற ஒரு அரசியல் சார்ந்த கட்சி அமைப்பாக மாற்றினார். இருப்பினும் நடிகர் விஜய் அரசியலுக்கு நேரடியாக வருவாரா என்ற கேள்வியும் வரும் ஆனா வராது என்பது போன்ற நகைச்சுவை வாக்கியத்திற்கு பொருந்தும் வகையில் நடிகர் விஜயின் அரசியல் பிரவேசம் இருந்து வருகிறது. 
ஆனால் தற்பொழுது விஜய்யின் மக்கள் இயக்கம் அரசியல் சார்ந்த பல நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது இரண்டு மாதங்களுக்கு முன்பு நடப்பாண்டில் பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்களைப் பெற்ற முதல் மூன்று மாணவ மாணவிகளை தொகுதி வாரியாக தேர்ந்தெடுத்து அவர்கள் அனைவருக்கும் தனது வாழ்த்துக்களையும் பரிசுகளையும் வழங்கினார் அதுமட்டுமின்றி அவரது அமைப்பு தரப்பிலும் மக்களுக்கு தொண்டாற்றும் பல அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. இருப்பினும் நடிகர் விஜய் சினிமாவில் இன்னும் நடித்துக் கொண்டுதான் இருக்கிறார் ஆனால் அவரது திரைப்படங்களின் இசை வெளியீட்டு விழாவை தனது ரசிகர்களுக்கு இவர் கொடுக்கும் அட்வைஸ் மற்றும் மறைமுக பிரச்சாரம் போன்று நடத்தி வருகிறார் என்றும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. 
இந்த நிலையில் நடிகர் விஜய் புஸ்ஸி ஆனந்த் என்பவரை தனது இயக்கத்தின் பொதுச் செயலாளராக நியமித்து அவர் மூலமாகவே அமைப்பிற்கு தேவையான தகவல்களையும் மக்கள் இயக்கம் எந்த நேரத்தில் எந்தெந்த நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் அடுத்து என்ன திட்டத்தை கையில் எடுக்க வேண்டும் மக்களுக்கு என்ன நலப் பணிகள் செய்ய வேண்டும் என்ற அனைத்தையும் தெரிவித்து வருகிறார். இதனால் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த விஜய்க்கும் அந்த அமைப்பின் நிர்வாகிகளுக்கும் பாலமாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் இவருக்கு உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் நடிகர் விஜய் நேரில் சென்று அவரை சந்தித்து வந்ததும் செய்திகளில் வெளியானது. மேலும் இந்த வாரத்தில் சென்னையில் பெய்த கனமழையில் சென்னை மக்கள் அனைவருக்கும் நிவாரண பணிகளை வழங்க நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கத்தின் நிர்வாகிகளை களத்தில் இறங்கும்படி உத்தரவிட்டதை அடுத்து மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் மக்கள் இயக்க நிர்வாகிகள் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் விஜயின் உத்தரவை ஏற்று மக்களுக்கு உதவி செய்து விஜய்க்கு நல்ல பேர் வாங்கி தருவதாக நினைத்துக்கொண்டு அவரது மக்கள் இயக்கம் நடிகர் விஜய்க்கு கெட்ட பெயரை ஏற்படுத்தி விட்டது. 
அதாவது விஜயின் மக்கள் இயக்கம் சார்பில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது ஆனால் ஒருவர் மக்களுக்கு உணவுகளை வழங்கினால் மற்றொருவர் கையில் விஜய்யின் புகைப்படத்தை ஏந்தி கொண்டு நின்றனர். இதைவிட அருமையான வீடியோ வெளியாகி வைரலாக பரவுகிறது, அதாவது விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் சென்னை ஆர் கே நகர் கொருக்குப்பேட்டை பகுதியில் குப்பையை அகற்றுவது போன்று கீழே இருக்கும் குப்பையை மேலே நகர்த்தி வைத்தார் அதோடு குப்பை கொட்ட பட்ட இடங்களில் ப்ளீச்சிங் பவுடரை போட்ட அவர் அந்த கவர் குப்பையையும் அப்படியே சாலையில் போட்டது பலரால் விமர்சனத்தை பெற்று வருகிறது. முன்னதாக சமீபத்தில் நடைபெற்ற லியோ வெற்றி விழாவில் நடிகர் விஜய் நாட்டில் எந்த இடத்தில் நல்லது செய்தாலும் அதை நம்ம பசங்க தான் செய்யணும் என்கிற ஆசை எனக்கு இருக்கிறது என கூறி தனது ரசிகர்களுக்கு உத்வேகம் கொடுத்தார் ஆனால் அந்த உத்வேகம் இப்படி ஒரு விளைவு ஏற்படுத்தி உள்ளது என்ற விமர்சனமும் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 
இதனால் தனது பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்தை நடிகர் விஜய் அழைத்து நல்லது செய்கிறேன் என்று கெட்ட பெயர் வாங்கி கொடுக்கிறீர்கள், இருக்க இஷ்டம் இருந்தால் இருங்கள் இல்லை என்றால் கிளம்புங்கள் என விஜய் அவரை கடிந்து கொண்டதாகவும் இதனால் புஸ்ஸி ஆனந்த் கவலையில் இருப்பதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளது.

 
                                             
                                             
                                            