24 special

உங்கள் எதிரியை கண்டு இனி நீங்கள் அஞ்சாமல் நிம்மதியாக வாழ வேலவன் அருள் புரிகின்ற கோவில் பற்றி உங்களுக்கு தெரியுமா?

MURUGAN TEMPLE
MURUGAN TEMPLE

நவீன உலகத்தில் பல சாதனைகளையும், பல வகையில் நமது வாழ்க்கை தரத்தையும் உயர்த்தி கொண்டாலும் போட்டிகளும் பொறாமைகளும் நிறைந்த உலகமாகவே உள்ளது. ஏனென்றால் இந்த உலகத்தை நவீன உலகம் என்று கூறுவதை விட போட்டிகள் நிறைந்த உலகம் என்று கூறுவதே சிறந்தது என்று சிலர் கூறுகிறார்கள்... ஒருவர் நேர்மையாக தனது தொழிலையும் தனது பணியையும் செய்து வந்தாலும் அவர்களை எப்படியாவது தன்வழிக்கு கொண்டு வர வேண்டும் என பல வழிகளை அவரது எதிரிகள் கையாளுகிறார்கள். மேலும் அப்படிப்பட்ட எதிரிகளால் அவரது உயிருக்கே சில நேரம் ஆபத்துகள் ஏற்படுகிறது. இதனால் பல நேரங்களில் நேர்மையாக வாழ்பவர்கள் தன் குடும்ப நலனையும் தன் நலனையும் கருத்தில் கொண்டு அவர்களுடன் போட்டி போடுவதை விடுத்து அமைதியாகி விடுகிறார்கள், இருப்பினும் தனக்கு ஒருவர் எதிரியாக மாறிவிட்டால் நிச்சயம் அவர்கள் நிம்மதியாக வாழ விட மாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 


இப்படி எதிரிகளை நினைத்து நிம்மதியாக வாழ முடியாமலும் அவர்கள் எந்த நேரத்தில் என்ன செய்வார்கள் என ஏற்படும் அச்சத்தை நீக்கி நிம்மதியாக வாழ்வதற்கு நாகப்பட்டினம் மாவட்டம் சாயாவனம் என்ற ஊரில் உள்ள சாயாவனேஸ்வரர் திருக்கோவிலில் உள்ள வேலவனை வழிபட வேண்டும் என்று கூறப்படுகிறது. கோச்செங்கண்ணன் என்கின்ற சோழ மன்னன் கட்டிய பல மாட கோவில்களில் இந்த மாடக்கோவிலும் ஒன்றாகும்!  மேலும் இக்கோவிலின் மூலவராக சிவபெருமான் அருள் பாலிக்கிறார். மேலும் இந்த திருத்தலத்தின் பெருமையாக ஒரு புராணக்கதை உள்ளது. அதாவது 63 நாயன்மார்களில் ஒருவரான இயற்பகை நாயனார் மற்றும் அவரது மனைவியும் சிறந்த சிவபக்தர்கள். அவர்களது சிவபக்தியை உலகிற்கு எடுத்துக்காட்ட சிவன் விரும்பியதால் சிவனடியார் போன்று வேடமிட்டு இவர்களது இல்லத்திற்கு ஒருமுறை சிவன் வந்துள்ளார். 

மேலும் இயற்பகையாரிடம் "கேட்டவற்றையெல்லாம் இல்லை என்று கூறாமல் நீ அள்ளிக் கொடுப்பவனாக இருக்கிறாய் என்பதை நான் அறிவேன் அதனால் உனது மனைவியை என்னுடன் அனுப்பி வை" என்று கூற இயற்ப்பகையாறும் தன் மனைவியை அனுப்பி வைக்கிறார் அதோடு, "நான் உனது மனைவியை அழைத்துச் செல்வதால் உனது உறவினர்கள் எங்களை தாக்கவும் வெறுப்புக் கொள்ளவும் நேரிடும்! அதனால் எங்கள் இருவருக்கும் நீ ஊர் எல்லை வரை பாதுகாப்பாக வர வேண்டும்" என்று கூற அவரும் சிவனடியாருக்கும் தன் மனைவிக்கும் பாதுகாப்பாக அவர்கள் பின்னால் வாள் ஏந்தி வருகிறார். சுற்றத்தவர்கள் அனைவரும் சிவனடியாரை தடுக்க இயற்பகையார் அவர்களை எல்லாம் தடுத்துள்ளார். இதனை அடுத்து ஊர் எல்லை வந்தவுடன் 'நான் உன் மனைவியுடன் சென்று கொள்கிறேன் நீ திரும்பலாம்" எனக் சிவனடியார் கூற அதன்படியே இயர்பகையாறும் தன் ஊர் பக்கம் திரும்பும் பொழுது திடீரென்று சிவனடியார் அங்கிருந்து மறைந்து உமையவளுடன் தோன்றி 'நீ உனது துணைவியாருடன் இந்த பூவுலகில் பலகாலம் சிறப்புடன் வாழ்ந்து என் திருவடி வந்து சேர்க" என்று கூறினார் அதன்படியே இந்த திருத்தலத்திலேயே நாயனார் வாழ்ந்து முக்தி அடைந்துள்ளார். 

முன்னதாக எதிரிகள் மீதான கொண்ட பயத்தில் இருந்து விலகி நலம் பெறுவதற்கு இந்த திருத்தலத்திலே உள்ள முருகப்பெருமானை வழிபட வேண்டும் என்று கூறப்படுகிறது. ஏனென்றால் இந்த தளத்தில் தான் முருகப்பெருமான் வில்லேந்தி போருக்கு புறப்படும் பொழுது சத்ரு சம்ஹார மூர்த்தியாக காட்சி தருகிறார். மேலும் இந்த முருகனின் வலது காலில் சிவனால் கொடுக்கப்பட்ட வீர கண்டரமணியும் கட்டப்பட்டுள்ளது. எதிரிகளை அழிப்பதற்காக சக்தி முருகனுக்கு கொடுத்த வேல் எப்படியோ அதே போன்று தான் சிவன் முருகனுக்கு கொடுத்த வீரகண்டர மணி அதனால் எதிரி பயம் இருப்பவர்கள் இந்த தளத்தில் உள்ள முருகப்பெருமானை வழிபட்டு சங்கடங்களை சமாளிக்கும் தைரியங்களை பெறலாம் என்பது நம்பிக்கையாகும்!