
பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு செல்லவேண்டாம் என அமெரிக்கா அரசு தரப்பு எச்சரிக்கை விடுத்ததை ஒட்டு மொத்த இந்தியாவிற்கு செல்லவேண்டாம் என கூறியது போன்றும், மேலும் பாலியல் அச்சுறுத்தல் இந்தியாவில் இருப்பதால் இந்தியாவிற்கே செல்லவேண்டாம் என அமெரிக்கா தெரிவித்ததாக சில தமிழக சாட்டிலைட் ஊடகங்கள் முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க பார்த்துள்ளனர்.
இதுகுறித்து அமெரிக்க தரப்பு வெளியிட்ட முழு அறிக்கை பின்வருமாறு : பயங்கரவாதம் மற்றும் மதவெறி வன்முறை காரணமாக பாகிஸ்தானுக்கான பயணத்தை மறுபரிசீலனை செய்யுமாறு அமெரிக்க குடிமக்கள் வலியுறுத்தப்பட்டாலும், இந்தியாவுக்குச் செல்பவர்கள் குற்றம் மற்றும் பயங்கரவாதம் காரணமாக அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அமெரிக்கா இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கான இரண்டு மற்றும் மூன்று பயண ஆலோசனைகளை வெளியிட்டுள்ளது.
பயங்கரவாதம் மற்றும் உள்நாட்டுக் கலவரம் காரணமாக ஜம்மு காஷ்மீர் செல்ல வேண்டாம் என்றும், இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் ஆயுத மோதல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால், அமெரிக்க குடிமக்கள் ஜம்மு காஷ்மீருக்குச் செல்ல வேண்டாம் என்றும் திங்களன்று இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ளும் அமெரிக்கர்களுக்கு வழங்கிய அறிவுரையில் அமெரிக்க வெளியுறவுத்துறை வலியுறுத்தியுள்ளது.
"பலாத்காரம் இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் குற்றங்களில் ஒன்று எனவும் பாலியல் வன்கொடுமை போன்ற வன்முறை குற்றங்கள் சுற்றுலா தளங்களிலும் பிற இடங்களிலும் நிகழ்ந்துள்ளன" என்றும் அது கூறியது.
சுற்றுலா தலங்கள், போக்குவரத்து மையங்கள், சந்தைகள் அல்லது வணிக வளாகங்கள் மற்றும் அரசு வசதிகளை குறிவைத்து பயங்கரவாதிகள் சிறிய அல்லது எச்சரிக்கை இல்லாமல் தாக்குதல் நடத்தலாம் என்பதால் கவனமாக பயணம் மேற்கொள்ள வேண்டும் எனவும்.,
கிழக்கு மகாராஷ்டிரா மற்றும் வடக்கு தெலுங்கானாவிலிருந்து மேற்கு மேற்கு வங்கம் வழியாக கிராமப்புறங்களில் உள்ள அமெரிக்க குடிமக்களுக்கு அவசரகால சேவைகளை வழங்க அமெரிக்க அரசாங்கத்திற்கு குறைந்த திறன் உள்ளது, ஏனெனில் அமெரிக்க அரசாங்க ஊழியர்கள் இந்த பகுதிகளுக்கு பயணிக்க சிறப்பு அங்கீகாரம் பெற வேண்டும் என்று அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
அதாவது இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்ளும் அமெரிக்கர்கள் காஷ்மீர் சுற்றுலா தளத்திற்கு செல்வது பாதுகாப்பாக இருக்காது எனவும் இந்தியா பாகிஸ்தான் எல்லையை ஒட்டி பயணம் மேற்கொள்பவர்கள் கவனமாக இருக்கவேண்டும் என்று பொதுவாக அனைத்து நாடுகளின் வெளியுறவுத்துறையும் வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளும் அந்தந்த நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுப்பது போன்றே அமெரிக்க வெளியுறவுத்துறையும் அறிவுறுத்தி இருந்தது.
ஆனால் தமிழகத்தை சேர்ந்த சில சாட்டிலைட் ஊடகங்கள் எந்தவித முழுமையான தகவலும் இல்லாமல் இந்தியாவில் பாலியல் குற்றங்களை காரணமாக காட்டி பயணம் இந்தியாவிற்கே செல்ல அமெரிக்கா எச்சரிக்கை விடுத்து இருப்பதாக தங்கள் பாணியில் திரித்து செய்தியை வெளியிட்டுள்ளன.
அமெரிக்க அறிக்கையில் குறிப்பிட்ட மகாராஷ்டிரா, தெலுங்கானா, மேற்கு வங்கம், ஜம்மு காஷ்மீர் என அனைத்து மாநிலங்களிலும் யார் ஆட்சியில் இருப்பது என எந்த தமிழக ஊடகங்களும் வெளியில் சொல்லவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில்
நிலவும் அரசியல் பின்னணி குறித்தும்
முக்கிய தகவல் குறித்தும் மாறுப்பட்ட
கோணத்தில் சிறப்பு தகவல்களை அரசியல் குறித்து முழுமையான
தகவல்களை TNNEWS24
DIGITAL, YOUTUBE பக்கத்தில் பதிவு
செய்கிறோம் மறக்காமல் SUBSCRIBE செய்து இணைந்து இருக்கவும்.https://www.youtube.com/channel/UCm2LP-0vMz0jFK1BKCbrfHA
