
அயோத்தியில் பிரமாண்டமாக கட்டிய ராமர் கோவில் குடமுழுக்கு விழா அடுத்த வாரம் நடைபெறவுள்ளது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கவுள்ளார். இந்த நிகழ்ச்சிகாகா உலகம் முழுவுதும் அழைப்பிதழ் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் அனைத்து கட்சி அரசியல் தலைவர்களும் பங்கேற்கவும் அழைப்பிதழ் கொடுக்கப்பட்ட்டது. அப்போது காங்கிரஸ் தலைமை மட்டும் கலந்துகொள்ள போவதில்லை என்று அறிக்கை வெளியிட்டது. அக்கட்சியின் மாநில நிர்வாகிகள் நேற்று கலந்துகொண்டதால் காங்கிரஸ் தலைவர் சற்று விரக்த்தி அடைந்துள்ளதாம்.
உத்தர பிரதேசத்தின் அயோத்தியில் ஸ்ரீராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை சார்பில் பிரமாண்ட ராமர் ராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இதன் கும்பாபிஷேக விழா ஜன. 22ம் தேதி நடக்கவுள்ளது. விழா ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகின்றன. விழாவில் பங்கேற்க நாடு முழுதும் உள்ள அரசியல் கட்சி தலைவர்கள் முக்கிய பிரமுகர்கள் உட்பட ஏராளமானோருக்கு அயோத்தி ராமர் கோவில் நிர்வாகம் சார்பில் அழைப்பிதழ் வழங்கப்பட்டு வருகிறது. கிராமம்தோறும் மக்களுக்கும் அழைப்பிதழ் கொடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை சென்னையில் இருந்து இலவச ரயில் சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல் விமான சேவைகளும் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த கோவில் கும்பாபிஷேக விழா முடிந்தவுடன் வெளிநாட்டு மக்கள் அனைவரும் வருகை தருவார்கள் என எதிரிபார்க்கப்படுகிறது. அனைத்து கட்சி தலைவர்களும் அரசியலாக பார்க்காமல் மக்களோடு மக்களாக கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டது. அப்போது, காங்கிரஸ் தலைமை விழாவை புறக்கணிப்பதாக அறிவித்தனர். இதனால் மக்கள் கோபத்தில் உள்ளனர், இந்த விழாவுக்கு எதிராக ராகுல் காந்தி பாதயாத்திரையை தொடங்கினார். இந்த விளவிலாவை புறக்கணிக்க காரணம் சிறுபான்மையினர் ஒட்டு எங்கு கிடைக்காதோ என்ற நிலையிலும், மத்தியில் இருக்கும் பாஜக தான் செய்துவருகிறது அதனால் கலந்துகொள்ளவில்லை என முடிவெடுத்தனர்.
ஆனால், இந்த கோவில் மத்திய அரசால் கட்டப்படவில்லை அறக்கட்டளையின் மூலமே கட்டப்படுள்ளது. விழாவிற்கு சென்றால் சிறுபாண்மையின மக்கள் ஒட்டு இழந்துவிடுவோம் என்றால் இந்து மக்கள் ஒட்டு வேண்டாமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் மகர சங்கராந்தியான நேற்று உத்தர பிரதேச மாநிலத்தின் காங்கிரஸ் தலைவர் அஜய் ராய் அயோத்தி ராமர் கோவிலுக்கு சென்று வழிபட்டார். முன்னதாக அவர் சரயு நதியில் புனித நீராடி வழிபட்டார். இதுதவிர அக்கட்சியின் சட்டசபை .தலைவர் ஆராதனா மிஸ்ரா அம்மாநில பொறுப்பாளர் தீரஜ் குர்ஜார் கட்சி நிர்வாகிகள் பலர் உடன் வந்தனர். இதேபோல் காங். மூத்த தலைவர்கள் தீபேந்தர் சிங் ஹூடா அவினாஷ் பாண்டே விமானம் வாயிலாக அயோத்திக்கு சென்று வழிபட்டனர்.
இதனால் காங்கிரஸ் தலைமை இவர்கள் மீது கோபத்தில் உள்ளதாம், ஏற்கனவே இண்டியா கூட்டணியில் உள்ள தலைவர்களும் கலந்து கொள்ள மாட்டோம் என் தெரிவித்தனர். இதேபோல் தமிழகத்தை பொறுத்தவரை இருக்கட்சிகளும் கலந்துகொள்வது இரு மனதாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.