24 special

சின்னம் விவகாரம்... சீமானுக்கு தம்பிகள் வைக்கப்போகும் செக்...

Seaman,chinnam
Seaman,chinnam

கடந்த சில நாட்களுக்கு முன்பு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்கள் மத்தியில் கரும்பு விவசாயிகள் சின்னத்தை தொடர்ந்து தேர்தல் ஆணையம் எங்களுக்கு தர மறுத்து வருகிறது இதற்கு பாஜகவும் அண்ணாமலையும்தான் காரணம் என்ற வகையில் குற்றம் சாடி இருந்தார். அதோடு மழை வெள்ள பாதிப்பின் பொழுது இது குறித்த விண்ணப்பங்களை தேர்தல் தலைமைக்கு முன்வைக்க மறந்து விட்டேன் என்ற கருத்தையும் முன் வைத்திருந்தார் சீமான். இதனை அடுத்து சீமானின் குற்றச்சாட்டை பத்திரிக்கையாளர்கள் கோவை விமான நிலையத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையிடம் கேட்ட பொழுது, நாம் தமிழர் கட்சி அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக இருந்திருந்தால் நிச்சயமாக நிரந்தர சின்னம் கிடைத்திருக்கும் அவர்கள் முறையாக விண்ணப்பிக்காமல் சின்னம் கிடைக்காமல் இருந்ததற்கு நானா பொறுப்பு அதற்கு யாரு காரணம்? இது யாரின் தவறு ஒவ்வொரு முறையும் விண்ணப்பித்த பிறகே சின்னத்தை பெற வேண்டும் ஆனால் சீமான் அதை செய்யவில்லை! சீமான் விண்ணப்பிக்காமல் இருப்பதற்கு நானா காரணம் அல்லது நான் தான் அவரை தடுத்தேனா? 


இவ்வளவு காலமாக தேர்தலில் போட்டியிட்டு வரும் நாம் தமிழர் கட்சி ஏன் அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக மாறவில்லை என்று நீதிமன்றமே கேட்டுள்ளது அவரே சொல்கிறார் அலட்சியத்தில் விண்ணப்பத்தை கொடுக்கவில்லை என்று! இதனால் நாம் தமிழர் கட்சிக்கு சின்னம் கிடைக்காததற்கும் பாஜகவிற்கும் என்ன சம்பந்தம் என்ற கேள்விகளை சரமாரியாக முன் வைத்தார். இது நாம் தமிழர் கட்சி தரப்பிற்கு பின்னடைவாக பார்க்கப்பட்டது. மேலும் இதனால் சமூக வலைதளங்களில் சீமான் குற்றச்சாட்டிற்கு விமர்சனங்களும் எழுந்தது, 

இதனை அடுத்து தலைமை தேர்தல் ஆணையத்திடம் சின்னம் கோரி நாம் தமிழர் கட்சியின் விண்ணப்பித்த பொழுது இந்த சின்னம் ஏற்கனவே கர்நாடகாவை சேர்ந்த பாரதிய பிரஜா ஜக்யதா கட்சிக்கு முன்னுரிமையின் அடிப்படையில் கரும்பு விவசாயி சின்னம் வழங்கப்பட்டு விட்டதாக தேர்தல் ஆணையம் கூறியது. இதனால் கடுப்பேறிய சீமான் டெல்லி உயர் நீதிமன்றத்தில் இது குறித்த வழக்கை தொடர்ந்தார். 

அதோடு இந்த வழக்கை டெல்லி உயர்நீதிமன்றம் விசாரித்தது. ஆனால் டெல்லி உயர்நீதிமன்றம் சீமான் எதிர்பார்த்த பதிலை கொடுக்கவில்லை! மாறாக நாம் தமிழர் கட்சி என்பது தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சி இல்லை என்பதால் சீமான் கரும்பு விவசாய சின்னத்தை நிரந்தரமாக நாம் தமிழர் கட்சிக்கு ஒதுக்கி தர வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்க முடியாது என்ற வகையிலும் முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை என்ற அடிப்படையில் கரும்பு விவசாய சின்னம் ஏற்கனவே கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ஒரு கட்சிக்கு ஒதுக்கிடப்பட்டுவிட்டது இந்திய தேர்தல் ஆணையம் விதிமுறைகளை பின்பற்றிய கரும்பு விவசாயி சின்னத்தை ஒதுக்கீடு செய்துள்ளது, அதனால் கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்பட்டதில் முறைகேடு நடந்திருப்பதாக சீமான் முன்வைத்த முறைகேடுகள் நடைபெறவில்லை என்று கூறி டெல்லி உயர் நீதிமன்றம் சீமானின் மனுவை தள்ளுபடி செய்தது. 

இப்படி ஆரம்பத்தில் அசால்டாக சீமானே விட்ட விவகாரம் தற்போது அவர்களுக்கே பெரும் பின்னடைவையும் விமர்சனத்தையும் ஏற்படுத்தி விட்டது அதுமட்டுமல்லாமல் சமூக வலைதள பக்கம் சென்றால் இதே விவகாரத்தை முன்வைத்து சீமானை பல நெடிசன்கள் பங்கம் செய்து வருகிறார்கள். அந்த வகையில் இளம் பெண் ஒருவர், சீமான் அண்ணா உங்க கிட்ட ஒரு கேள்வி, ஆட்சிக்கு வந்து விட்டால் அதை பண்ணி விடுவேன் இதை பண்ணி விடுவேன் என்று கூறுகிறீர்கள் அதைக் கேட்பதற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது ஆனா நீங்கள் உங்களுடைய கட்சி சின்னத்தையே புதுப்பிக்க மறந்து விட்டீர்கள் அதனால் மக்கள் எப்படி நம்புவார்கள் ஆட்சிக்கு வந்த பிறகு நீங்கள் கூறிய அனைத்தையும் மறக்காமல் செய்வீங்கன்னு!! என்று பேசி வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார் இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது மேலும் சின்னத்தை வைத்து பாஜகவை விமர்சிக்கலாம் என்று நினைத்த சீமானுக்கு அதே சின்ன விவகாரம் சீமானிற்கே எதிர்வினைகளை கொடுத்து விட்டதே என்ற விமர்சனங்களும் இதற்கு எழுந்துள்ளது. 

இதுமட்டுமில்லாமல் இனி இவரை நம்பி பிரயோஜனமில்லை நாம் தனி பாதையை தேர்ந்தெடுக்கலாம் என சீமான் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் முடிவெடுத்ததாக வேறு சில தகவல்கள் கசிகிறது....