24 special

சென்னை மேயர் "பிரியா" சர்ச்சை திமுக தலைமை அதிரடி முடிவு!

Chennai mayor priya
Chennai mayor priya

சென்னையின் முதல் பெண் பட்டியல் சமுதாயத்தை சேர்ந்த மேயர் என்ற புகழை பெற்றவர் பிரியா, இவரது குடும்பம் நீண்ட திமுக பாரம்பரியம் கொண்டது என்பதாலும் அமைச்சர் சேகர் பாபுவின் பரிந்துரையின் பெயரில் பிரியாவிற்கு சென்னை மேயருக்கானா வாய்ப்பு கிடைத்ததாக கூறப்பட்டது.


இந்த சூழலில் பிரியா சென்னை மேயராக பதவி ஏற்ற நாள் முதலே சர்ச்சைகள் தொடங்கின முதலில் பிரியா ஒரு கிறிஸ்தவர் என பாதிரியார் ஒருவர் பாராட்டு தெரிவிக்க கடும் சர்ச்சை உண்டானது, சென்னை மேயர் பதவி இந்து மதத்தை சார்ந்த பட்டியல் சமுதாயத்திற்கு மட்டுமே ஒதுக்கப்பட்ட நிலையில் பிரியாவின் தேர்வே செல்லாது என போர்க்கொடி தூக்கினர் இந்து அமைப்புகள்.

உடனடியாக சுதாரித்து கொண்ட மேயர் பிரியா நான் இந்து என்று கூறியதுடன் கோவில் கோவிலாக சென்றார் அத்துடன் ஸ்டிக்கர் பொட்டுக்களுக்கு பதில் நெற்றியில் குங்குமம் வைத்து வலம் வந்தார்.

இந்த சர்ச்சையை தொடர்ந்து அடுத்ததாக அம்மா உணவகங்கள் குறித்து வாய் திறந்தார் பிரியா? பல இடங்களில் அம்மா உணவகங்கள் மூடப்பட்டு இருப்பதாக மேயர் பிரியா தெரிவிக்க அது கடும் சர்ச்சையாக மாறியது.

அப்போதே திமுக தலைமை செய்தியாளர் சந்திப்பை குறைத்து கொள்ள அறிவுறுத்தி இருந்ததாம் இந்த சூழலில் தற்போது மீண்டும் சர்ச்சையில் சிக்கி இருக்கிறார் பிரியா, பிரியா விளம்பரங்களுக்கு அதிக முக்கியதுவம் கொடுக்கிறார் எனவும் அவரை பற்றிய செய்திகள் தினமும் வரவேண்டும் என இரண்டு முன்னணி யூடுப் நிறுவனங்களுடன் சேர்ந்து செயல்படுவதாக திமுக தலைமைக்கு புகார் சென்று இருக்கிறது.

இதையடுத்து முக்கியமான அமைச்சர் ஒருவர் மூலம் மேயருக்கு பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகிறதாம், மக்களவை தேர்தல் வர முழுமையாக 1 வருடம் மட்டுமே உள்ளது, மழை காலம் வேறு நெருங்கி வருகிறது, அடுத்து ஒரு பெரிய மழை பெய்தால் சென்னை என்ன ஆகும் என தெரியவில்லை முதலில் சென்னையின் உள் கட்டமைப்பு குறித்து ஆலோசனை செய்யுங்கள், பிறகு ஊடகத்திற்கு பேட்டி, போட்டோவிற்கு போஸ் கொடுக்கலாம் என வாங்கு வாங்கி இருப்பதாக கூறப்படுகிறது.

இதை அடுத்து அடக்கி வாசிக்க சென்னை மேயர் முடிவெடுத்து இருக்கிறாராம்.  நான் என் பணியை  சரியாக செய்து கொண்டு இருக்கிறேன் வேண்டும் என்றே சிலர் என்னை பற்றி தவறான தகவலை பரப்புகிறார்கள் அவர்களை முறைப்படி சந்திப்பேன் எனவும் பிரியா கூறிவருவதாக சென்னை மேயர் வட்டாரங்கள் கூறுகின்றன.

திமுகவை சேர்ந்த முன்னணி அமைச்சர்கள் பலரே ஊடகங்களுக்கு பேட்டி கொடுப்பது இல்லை ஏன் தங்களை பற்றிய செய்திகள் முதல் பக்கத்தில் வர நினைப்பது இல்லை காரணம், அரசியலில் எந்த அளவு விளம்பரம் கிடைக்கிறதோ அந்த அளவு எதிர்ப்பை சந்திக்க வேண்டி இருக்கும் அப்படி இருக்கையில் பிரியா அரசியல் முன் அனுபவம் இல்லை என்பதை அவரது செயல்பாடுகள் நிரூபிப்பதாக மூத்த அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

ஒரு போட்டோ சூட் மேயர் ப்ரியவை மீண்டும் சர்ச்சையில் இழுத்துவிட்டு இருக்கிறது இதில் இருந்து பிரியா எவ்வாறு மீள போகிறார் என்பதை பொறுத்து இருந்துதான் பார்க்கவேண்டும்.