24 special

என்னது ஒரு மணி நேரத்தில் 500 முதல் 2000 தேங்காய்கள் உரிக்க முடியுமா??? இதுக்கும் மிஷினா....?

COCONUT
COCONUT

முதலில் இருந்த உலகத்தில் வாழ்ந்த மனிதர்கள் எல்லோரும் அதிக அளவில் தங்களின் உடல் உழைப்பை பயன்படுத்தி அவர்களின் அன்றாட வேலைகளை செய்து வந்தார்கள். இவ்வாறு அன்றாடம் மனிதர்களை செய்யும் வேலைகள் அதிக அளவில் நேரங்களை எடுத்துக்கொண்டு வந்தது. அவ்வாறு அதிக நேரங்கள் எடுத்து செய்யும் வேலைகளிலும் கூட மனிதர்கள் சில விஷயங்களை செய்ய மறக்கின்றனர் அல்லது ஏதாவது ஒரு தவறு நடந்துவிடுகிறது. இதனால் அவர்கள் செய்த தவறினை சரி செய்வதற்கு மேலும் கொஞ்சம் நேரம் எடுத்துக் கொண்டு அந்த வேலையை செய்து வந்தனர். இப்படி மனிதர்கள் செய்யும் வேலைகள் ஏதாவது ஒரு வகையில் நேரத்தை எடுத்துக் கொள்ளும் அல்லது ஏதேனும் மறந்து விடுவர் அல்லது சிறிய தவறு ஏதும் நடப்பதற்கு வாய்ப்புகள் அதிகம் இருந்தது. அது மட்டுமல்லாமல் சில வேலைகளை தனி ஒருவராக செய்துவிட முடியாத காரணங்களும் இருந்தது. சில குறிப்பிட்ட வேலைகளை செய்வதற்கு இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் தேவைப்படும் நேரத்தில் அங்கு பல நபர்களை பணியில் அமர்த்த வேண்டி இருந்தது.


இதனால் பலர் வேலை வாய்ப்பை அடைந்து அதனால் அவர்களின் வாழ்வில் அடுத்த நிலைக்கு சென்று கொண்டிருந்தனர். ஆனால் இன்றைய உலகில் மனிதனின் உழைப்பு என்பது மிகவும் குறைந்த வேலையில் மட்டுமே உள்ளது. அதிகப்படியான வேலைகளில் பெருமளவு இயந்திரங்களின் பயன்களே அதிகரித்துக் கொண்டு வருகிறது. நாடு வளர்வதைப் போலவே இயந்திரங்கள் பற்றிய அறிவியல் அறிவோம் மக்களிடையே வளர்ந்து கொண்டே வருகிறது. இதனால் புதுப்புது இயந்திரங்கள்  சந்தையில் அறிமுகமாகி கொண்டேதான் உள்ளது. சில தொழில்களில் பலர் செய்யும் வேலைகளை ஒரே ஒரு இயந்திரம் செய்து முடித்து விடுகிறது. மேலும் அதை எடுத்துக் கொள்ளும் நேரமும் குறைவாகவே உள்ளது. இதுபோன்ற இயந்திரங்கள் அதிக அளவில் எந்த தவறும் என் வேலையில் செய்வதில்லை மேலும் எந்த வேலையும் மறப்பதும் கிடையாது. எப்போதாவது ஒருமுறை மட்டும் தான் பழுது ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. அதனைப் பார்க்கும் முதலாளிகளோ இந்த இயந்திரத்தை வாங்கி விட்டு, இதற்காக வைத்திருக்கும் தொழிலாளர்களை  நிறுத்திவிட்டால் அவர்களுக்கு கொடுக்கும் சம்பளம் மிச்சம் ஆகும் என்று நினைக்கின்றனர்.

சமீபத்தில் கூட இது போன்று பல இயந்திரங்கள் சந்தையில் அறிமுகப்படுத்தப்படுகிறது. துணி துவைப்பதற்கு, பாத்திரம் விளக்குவதற்கு என்று ஆரம்பித்து தற்போது காற்றில் இருந்து தண்ணீர் எடுக்கும் இயந்திரம், பெரிய பெரிய மரக்கட்டைகளை அறுப்பதற்கு பயன்படுத்தும் இயந்திரங்கள், கட்டிடங்களை தானே கட்டும் வண்டிகள் போன்றவை வரை சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இது போன்ற இயந்திரங்கள் பெரிய வேலைகளை கூட மிகவும் சாதாரணமாக செய்து முடித்து விடுகிறது. இதனால் மக்களிடையே பெருமளவு வரவேற்பு பெற்று வருகிறது. தற்போது இதுபோன்று இயந்திரமும் பயன்படுத்தப்பட்டு வருவது இணையத்தில் வைரலாகி கொண்டு உள்ளது!! அந்த வகையில் முன்பெல்லாம் அறுவடை செய்யப்பட்ட தென்னங்காய்கள் உரிப்பதற்கு மனிதர்கள் அதிகம் நேரம் எடுத்து கஷ்டப்பட்டு உரித்தெடுப்பார்கள். இதற்கென பலர் பணியிலும் அமர்த்தப்பட்டு இருப்பர். ஆனால் தற்போது இந்த தேங்காய் உரிப்பதற்கு என்று ஒரு நவீன இயந்திரம் அறிமுகமாகியுள்ளது. இந்த இயந்திரம் ஒரு மணி நேரத்தில் 500 முதல் 2000 வரை தேங்காய்களை உரிக்குமாம்!! இந்த இயந்திரம் முழுமையாக மின்சாரத்தினால்  இயக்கப்படுவதாகும். இது மனிதர்களின் வேலையை குறைப்பது மட்டுமல்லாமல் நேரத்தையும் குறைக்கின்றது. தற்போது இந்த இயந்திரம் குறித்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது!!