Politics

#BREAKING தமிழகத்தில் அழுத்தமாக கால் பதிக்கிறது பாஜக வெளியானது கருத்து கணிப்பு முடிவு!! எத்தனை தொகுதி கிடைக்கும் !!

#BREAKING தமிழகத்தில் அழுத்தமாக கால் பதிக்கிறது பாஜக வெளியானது கருத்து கணிப்பு முடிவு!! எத்தனை தொகுதி கிடைக்கும் !!
#BREAKING தமிழகத்தில் அழுத்தமாக கால் பதிக்கிறது பாஜக வெளியானது கருத்து கணிப்பு முடிவு!! எத்தனை தொகுதி கிடைக்கும் !!

வரும் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறவுள்ள தமிழக சட்டமன்ற தேர்தலை ஒட்டுமொத்த நாடும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. பாஜக ஆட்சிக் கட்டிலில் அமராத ஒருசில மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று.  இந்த சூழலில் அதிமுக உடன் கைகோர்த்து பாஜக சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்கிறது.


கடந்த மக்களவை தேர்தலில் இந்த கூட்டணி தோல்வியை சந்தித்தாலும் மிகுந்த நம்பிக்கையுடன் மீண்டும் கைகோர்த்துள்ளன. சசிகலாவால் அதிமுகவிற்கு ஆபத்து நேரிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழலில் தேர்தல் நெருங்கும் வேளையில் அரசியலில் இருந்து ஒதுங்கிக் கொண்டார். இது ஆளுங்கட்சிக்கு சாதகமாக பார்க்கப்பட்டது இந்த நிலையில் பாஜக 20 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடுகிறது.

பாஜக போட்டியிடும் தொகுதிகளின் கள நிலவரம் வெற்றி வாய்ப்பு குறித்து ரைடன் மற்றும் 24airads நிறுவனம் நடத்திய இரண்டாம் கட்ட கருத்து கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன, இதன்படி பாஜக உறுதியாக கோவை தெற்கு, அரவக்குறிச்சி, மதுரை வடக்கு, நாகர்கோவில், திருநெல்வேலி, இராமநாதபுரம் உள்ளிட்ட  7இடங்களில் வெற்றி பெரும் எனவும், துறைமுகம், தாராபுரம், விருதுநகர், தளி ஆகிய இடங்கள் இழுபரியாக இருப்பதாக அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

மேலும் கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் பாஜக கூட்டணி கட்சிகளின் பலன் இப்போது முழுமையாக பாஜகவிற்கு கிடைத்து வருவதால் பாஜக தேர்தலில் முன்னிலை பெற்று வருவதாகவும் கடந்த வாரம் 5 இடங்கள் என இருந்த பாஜக வெற்றி வாய்ப்பு இரண்டு தொகுதிகள் கூடுதலாக அதிகரித்து இருப்பதாக அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இந்த கருத்து கணிப்பு முடிவுகள் தமிழகத்தில் பாஜக அழுத்தமாக கால் பதிப்பதை உறுதி செய்துள்ளன, வளரும் கட்சியாக தமிழகத்தில் அறியப்படும் பாஜக விரைவில் தடம் பதித்த கட்சியாக தமிழகத்தில் தேர்தலுக்கு பிறகு உருவெடுக்கும் நிலை தற்போது அதிகரித்துள்ளது.