
2026 தமிழக சட்டப்பேரவை தேர்தல் களம் இப்போது உச்சகட்ட பரபரப்பை எட்டியுள்ளது. குறிப்பாக நேற்று (மார்ச் 15, 2026) தேர்தல் ஆணையம் ஏப்ரல் 23-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என்று அறிவித்த சில மணிநேரங்களிலேயே, கள நிலவரம் மற்றும் கருத்துக்கணிப்புகள் பற்றிய விவாதங்கள் சூடுபிடித்துள்ளன.
கடந்த 2021-ல் 'விடியல் தரும் ஆட்சி' என்கிற முழக்கத்தோடு அரியணை ஏறிய திமுக, ஐந்தாண்டுகள் முடிவடையும் வேளையில் மக்களிடையே கடும் அதிருப்தியைச் சந்தித்து வருவதுகருத்துக்கணிப்பு முடிவுகளில் தெள்ளத்தெளிவாகத் தெரிகிறது. ஊடகங்களை வளைத்துப் போட்டு, கோடிக்கணக்கில் பணத்தை வாரி இறைத்து தங்களுக்குச் சாதகமாக பிம்பத்தை உருவாக்க முயலும் திமுகவின் 'பி.ஆர்' அரசியல் இந்த முறை எடுபடவில்லை
தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தனியார் ஊடகங்கள் வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பு முடிவுகள் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. தற்போதைய ஆளுங்கட்சியான திமுகவுக்கு இந்த முடிவுகள் பின்னடைவாகவும், பிரதான எதிர்க்கட்சியான அதிமுக மற்றும் அதன் கூட்டணிக்கு மிகப்பெரிய ஊக்கமாகவும் அமைந்துள்ளன. திமுக அரசு மீதான விமர்சனங்களும், நிர்வாகக் குறைபாடுகளும் இக்கருத்துக்கணிப்பில் எதிரொலிப்பதாகத் தெரிகிறது.
இதுவரை தேர்தல் தேதி அறிவிக்காதவரை கருத்துக்கணிப்பு நிறுவனங்கள் ஆளுங்கட்சிக்குச் சாதகமாக முடிவுகளைத் தந்து வந்தன. ஆனால், தற்போதைய சூழலில் நம்பகத்தன்மையைநிலைநாட்ட வேண்டிய கட்டாயத்தில் உள்ள நிறுவனங்கள், கள யதார்த்தத்தை வெளிப்படையாகப் போட்டு உடைத்துள்ளன. திமுக கூட்டணி 35% வாக்குகளுக்குத் தள்ளப்படும் அதே வேளையில், அதிமுக கூட்டணி 45% வாக்குகள் வரை பெற்று எழுச்சி காண்பது ஒரு மிகப்பெரிய அரசியல் மாற்றத்தின் அறிகுறியாகும்.
அதிமுக கூட்டணி 45 சதவீதத்திற்கு அதிகமான வாக்குகளை பெறும், திமுக கூட்டணி 35 சதவீத வாக்குகளை பெறும், விஜய் 12 சதவீத வாக்குகளை பெறுவார், சீமான் 8% வாக்குகளை பெறுவார். என கருத்து கணிப்புகள் வெளியாக ஆரம்பித்துள்ளது தேர்தல் தேதி அறிவித்த சில மணிநேரங்களில் அதிமுக பாஜக கூட்டணிக்கு சாதகமாக இருக்கிறது.
அதிமுக கூட்டணி (NDA): 114 முதல் 127 இடங்களைக் கைப்பற்றி ஆட்சியைப் பிடிக்கும் நிலையில் முன்னிலையில் உள்ளது. இது கடந்த தேர்தலை விட அதிமுகவுக்கு மிகப்பெரிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.திமுக கூட்டணி (DMK+): 104 முதல் 114 இடங்களை மட்டுமே பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஆளுங்கட்சியாக இருந்து நூற்றுக்கும் குறைவான இடங்களுக்குச் சுருங்கும் நிலை திமுகவுக்கு ஒரு எச்சரிக்கை மணியாகவே பார்க்கப்படுகிறது.
