24 special

ஆவுடையப்பணை அலறவிட்ட வெள்ளையங்கிரி! எல்லாம் ஈசன் திருவிளையாடல்...

shivan temple
shivan temple

சிவனே மழையாகவும் தென் கயிலை என்றும் அழைக்கப்படுகிற ஒரு புனித தலம் வெள்ளையங்கிரி மலை! இம்மலை மேகங்கள் சூழ அடுக்கடுக்காக அமைக்கப்பட்டிருக்கும் ஏழு மலைகளைக் கொண்டது. அதோடு இம்மலையில் ஏறி உச்சியில் இருக்கும் சிவனை தரிசித்து விட்டு வந்தால் நமக்கு கிடைக்காத பயன்களும் கிடைக்கும் என்றும் அருமையான இயற்கை சூழலை ரசிக்கலாம் என்றும் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி இந்த மழையை ஏறி இறங்குவது என்பது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல என்பதும் சமீப காலமாக வெளியாகும் செய்திகள் மூலம் புலப்பட்டு வருகிறது. ஏனென்றால் இந்த வெள்ளியங்கிரி மலையில் ஏறி சில இளைஞர்களும் 30 முதல் 35 வயதுடையவர்களும் இறந்ததாக செய்திகள் வெளியாகி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 


இந்த நிலையில் தனியார் தொலைக்காட்சியில் பிரபல தொகுப்பாளராக செயல்பட்டு வரும் ஆவுடையப்பன் வெள்ளியங்கிரி மலைக்கு சென்று வந்துள்ள தனது அனுபவத்தை தெரிவித்துள்ளார். முன்னதாக இவர் கடவுள் மறுப்பு மற்றும் தந்தை பெரியார் போன்ற கருத்துக்களை அதிகமாக முன்வைப்பவர் இந்த நிலையில் சமூக வலைதளம் மற்றும் வெள்ளையங்கிரி மலையில் ஏற முற்பட்டு இறந்தவர்களின் செய்தியை பார்த்து இந்த மலைக்கு ஒரு முறை ஏறி வர வேண்டும் என்ற விருப்பத்தில் வெள்ளையங்கிரி மலைக்குச் சென்றுள்ளார். அங்குதான் இவருக்கு புரிந்துள்ளது வெள்ளையங்கிரி மலையின் உண்மை நிலவரம், அதாவது வெள்ளியங்கிரி-எல்லாருக்குமானது அல்ல...சில நாட்களுக்கு முன்பு வெள்ளியங்கிரி மலைக்குச் சென்று இருந்தோம்..வெள்ளியங்கிரிக்கு என்னுடைய முதல் பயணம் அது..ஏழு மலைகள் எனச் சொன்னதும் மலைப்பாய் இருந்தது உள்ளபடியே பெரிய சவாலாகத் தான் அமைந்ததது..அதுவும் மலை ஏறத்தொடங்கியது மதியம் என்பதால் வெய்யிலின்  தாக்கத்தில் உடல் De-Hydration ஆக மெதுவாகவே நடக்கத்தொடங்கினோம். 

இன்று Influencer Digital Market பெரிதாக இருக்கிறது,2025-இல் 2,500 கோடியாக இருக்கும் என்கிறது ஒரு ஆய்வு..பலர் இது போல வீடியோக்களை நம்பி ஈசி என  நினைத்து வெள்ளிங்கிரி மலை ஏறுவதற்கு வந்துவிடுகிறார்கள்..இப்படி Digital influencers தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் இந்த நேரத்தில் வீடியோக்களில் சிலர் முழுமையாக தகவல்களை சொல்லாமல் விடுவதனால் பின்விளைவுகள் பலருக்கு மோசமானதாக அமைந்துவிடுகிறது..பலருக்கு நாட்பட்ட சர்க்கரை நோய்,உயர் ரத்த அழுத்தம்,இதயப்பிரச்சனை என நிறையப் பிரச்சனைகள் இருக்கிறது பலருக்கு அங்கு வந்தே தெரிகிறது..அவர்கள் மற்றவர்கள் நடக்கிறார்கள் நாமும் நடப்போம் என சரியான ஓய்வு இல்லாமல் நடக்க முயற்சி செய்யும் பொழுது..அது உயிருக்கே ஆபத்தாய் முடிந்துவிடுகிறது...மருத்துவர்கள் ஆலோசனை ஏதும் இன்றி இது போல மலை ஏற வருகிறார்கள்-காரணம் தவறாக வழிநடத்தப்படும் சில வீடியோஸ்..இது வரை மலை ஏறி நிறைய நபர்கள் மூச்சுவிடச் சிரமப்பட்டு மலையில் இறந்து இருக்கிறார்கள்.நாங்கள் போன சில நாட்களுக்கு முன்பு கூட அது நடந்து இருக்கிறது..முதல் முறை பலருக்கும் நிச்சயம் 6-8மணி நேரம் வரை கூட ஆகலாம் மேல ஏற!  நீங்கள் ஏறியபடியே கீழே இறங்க வேண்டும்..அங்கு தான் சிக்கல்.மேலே செல்லும் போது இருக்கும் ஜோஸ் நிச்சயம் கீழே இறங்கும் பொழுது இருக்காது.

இங்கே தான் உங்கள் உடலை வருத்தி இறங்கும் பொழுது உங்கள் உடலில் பிரச்சனை வருகிறது. ஓய்வு எடுத்து துாங்கி எழுந்து வர ஒதுங்கு இடம் எல்லாம் கிடையாது..பலர் கையோடு  பழைய Banners,Bedsheet எடுத்து செல்லுவதால் கிடைக்கும் இடத்தில் துாங்கி எழுந்துவிடுகிறார்கள்..6,7 மலையில் உள்ள Climate நீங்கள் கணிக்கவே முடியாது. முதல் ஐந்து மலைகள் வெய்யில் வாட்டி வதைக்கும்,அடுத்து ஆறு & ஏழுவாது மலை குளிர்வாட்டி வதைக்கும்.. அங்கு சரியான குளிர்தாங்க கூடிய உடை இல்லாமல் சென்றால் கதை அவ்வளவு தான்..முக்கியமாக நான் குறிப்பிட நினைத்தது மற்ற கோவில் தலங்கள் போல வெள்ளியங்கிரி அல்ல.. நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருப்பவரகள் செல்ல வேண்டிய இடம் அது.அல்லது மருத்துவரை ஒரு முறை ஆலோசனை கேட்டுக்கொள்ளுங்கள்..அவசர உதவி என்றால் கூட மேலே இருந்து கீழே போனில் தொடர்புகொண்டு உதவி கேட்டால் கீழே இருந்து மேல டோலி அனுப்புவார்கள்.இது தான் நடைமுறை..ஆர்வமிகுதியில் முயற்சி செய்யக்கூடாத இடம் வெள்ளியங்கிரி என்று தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதற்கு சமூக வலைத்தளங்களில் பதிவிடப்பட்ட வீடியோக்கள் நம்பி சென்ற ஆவுடையப்பனுக்கு வெள்ளியங்கிரி மலையில் ஈசன் தன் வேலையை காட்டி விட்டார் என்று கமெண்ட்கள் பறக்க விடப்படுகிறது நெட்டிசன்களால்..