
திருபுவனத்தை அடுத்திருக்கும் அடைக்கலம் காத்த அய்யனார் கோயிலில் காவலாளியாக இருந்த 27 வயது இளைஞர் அஜித்குமார் செய்த குற்றம்தான் என்ன? கோயிலுக்கு வந்த வயதான பெண்மணிக்குச் சக்கர நாற்காலி கொடுத்து உதவியதோடு, அவரைக் காரில் அழைத்துக்கொண்டு வந்த பேத்தி கேட்டுக்கொண்டதன் பேரில், அந்தப் பெண் ஓட்டிவந்த காரை பார்க் செய்ய உதவினார் என்பதுதான்.
`காரில் வைத்திருந்த பணத்தையும் பத்துப் பவுன் நகையையும் காணவில்லை' என்று அந்தப் பெண்கள் வாய்மொழியாகக் கொடுத்த புகாரை அடுத்து, விசாரணை என்ற பெயரில் போலீசார் மிக கொடுமையான சித்திரவதை செய்து அஜித்குமாரின் உயிரையே பறித்துவிட்டனர். இதில் கொடூரமான நகைமுரண் என்னவென்றால், அந்தப் பெண்கள் கோயிலுக்கு வருவதற்கு முன்பு ஒரு ஸ்கேன் சென்டருக்குச் சென்று அங்கே நகைகளைக் கழற்றி வைத்தவர்கள், அங்கிருந்து கிளம்பும்முன்பு நகைகள் இருக்கின்றனவா என்பதைச் சரிபார்க்கவில்லை என்பதுதான்.
மேலும் அஜித் குமார் மரண வழக்கில், அவர்ருக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட எப்.ஐ.ஆர் விவரங்கள் வெளியாகியுள்ளன. இதில், நிகிதா ஏற்கனவே கூறியிருந்த தகவலுக்கும் எப்.ஐ.ஆரில் உள்ள விவரங்களுக்கும் ஏகப்பட்ட முரண்கள் இருப்பது தெரியவந்துள்ளது. அஜித் குமார் ஒருவரை மையப்படுத்தியே நிகிதா புகாரளித்து இருப்பதும் தெரியவந்துள்ளது. இவ்வாறு மொத்த தரப்பும் அஜித் குமார் வழக்கை இழுத்து மூடுவதற்ககு தான் பார்க்கிறார்கள்.
அஜித்குமாரின் அலறல் சத்தம், சுற்றியிருந்த வியாபாரிகள், பொதுமக்கள் பலரையும் குலைநடுங்கச் செய்திருக்கிறது. எட்டிப்பார்க்கப் போனவர்களையும் மிரட்டி விரட்டியிருக்கிறது தனிப்படை. தண்ணீர் கேட்ட அஜித்குமாருக்கு, மிளகாய்ப்பொடியை வாயில் போட்டு தண்ணீரை ஊற்றியிருக்கிறார்கள். தொடர்ந்து தனிப்படை காட்டிய மிருகத்தனத்தால், மாலை 6 மணிக்கு மேல் நிலைகுலைந்துபோன அஜித்குமார், மாட்டுக் கொட்டகையிலேயே சரிந்து விழுந்திருக்கிறார். சிறுநீருடன் ரத்தமும் மலமும் வெளியேறி யிருக்கின்றன. அப்போதுதான் அடிப்பதை நிறுத்தியிருக்கிறார்கள். திடீரென நிசப்தமானவுடன், ஓடிப்போன பொதுமக்கள் அஜித்குமாரை ஆட்டோவில் தூக்கிப்போட்டு கிளினிக்குக்குக் கொண்டு செல்ல, உடன் தனிப்படையும் சென்றிருக்கிறது. ஆனால், ஆட்டோவிலேயே அஜித்குமாரின் உயிர் பிரிந்துவிட்டது. இந்த மிக கொடூரமான சம்பவம் தமிகத்தை உலுக்கியுள்ளது.
இதற்கிடையில் அதிமுக ஆளும் கட்சியாக இருந்தபோது திடீர் போராளிகளான நடிகர்கள் எல்லாம் இப்போது வாயை திறக்காமல் இருக்கிறார்கள் என்பதை எல்லோருடைய குற்றச்சாட்டுமாக இருக்கிறது. இந்த சமயத்தில் தான் ஆர்யா பத்திரிகையாளர்களிடம் வசமாக சிக்கி இருக்கிறார்.தன்னுடைய பட ப்ரொமோஷனுக்காக மீடியாவை சந்தித்த ஆர்யாவிடம் திருப்புவனம் அஜித் குமார் கொலை பற்றி கேட்கப்பட்டது. இதற்கு ஆர்யா கொஞ்சமும் சலனம் இல்லாமல் வேற கேள்வி கேளுங்க என்கிறார். மீண்டும் அந்த கேள்வியை கேட்ட போது கூட பிடி கொடுக்காமல் நெக்ஸ்ட் என்ன என கேட்கிறார்.
தமிழகமே கொந்தளித்துக் கொண்டிருக்கும் ஒரு ஈவு இரக்கமற்ற சம்பவத்திற்கு வருத்தம் அளிக்கிறது என்ற பதிலையாவது சொல்லி இருக்கலாம். பாவம் அவரும் என்ன செய்வார், இனி அவருடைய படத்தை வாங்கி விலை பேச வேண்டும் என்றால் அது உதயநிதியிடம் மட்டும் தானே சாத்தியம்.
அதனால் தான் என்னவோ மனித மாண்பையும் மறந்து விட்டு அப்படி ஒரு சம்பவமே நடக்காத மாதிரி காட்டிக் கொள்கிறார் போல. உண்மை வாழ்க்கையில் தன்னுடைய சுயநலத்திற்காக அநீதிக்கு எதிராக கூட குரல் எழுப்ப முடியவில்லை. திரையில் ஹீரோயினை கேலி செய்யும் வில்லனை மட்டும் பறந்து அடித்து மிரட்டுகிறார்கள் இந்த போலி ஹீரோக்கள். ஏற்கனவே சூர்யா வும் சிக்கி சின்னாபின்னாமாகி உள்ள நிலையில் தற்போது ஆர்யாவும் நடுத்தெருவுக்கு வர போகிறார்.