24 special

ஜெய் பீம் திரைப்படத்தில் வந்த உண்மை சம்பவத்தில் உள்ள மக்களுக்கு இன்னும் நிவாரணமே கிடைக்கவில்லையா??? தமிழக அரசை நோக்கி உச்ச நீதிமன்றம் கேள்வி...?

JAIBHEEM MOVIE, COURT
JAIBHEEM MOVIE, COURT

 கடந்த ஆட்சி காலத்தில் திமுகவில் குரலுக்கு  எதிரொலியாக இருந்தவர் நடிகர் சூர்யா!! ஏனென்றால் அப்போது திமுக எதிர்க்கட்சியாக இருந்தது. என்னதான் எதிர்க்கட்சியாக இருந்த பொழுதும் நடிகர் சூர்யா மற்றும் பல நடிகர்கள் முன்வைத்த பொது கருத்துக்கள் அனைத்துமே திமுகவிற்கு ஆதரவாக இருந்து வந்தது. உதாரணமாக நீட் தேர்வினால் ஏற்படும் விளைவுகளும் அதனை எதிர்த்து வருவது குறித்த பல விஷயங்களில் ஈடுபட்டு வந்தனர். மேலும் அப்பொழுது சூர்யா நடித்து வரும் தமிழ் திரைப்படங்கள் அனைத்துமே சமூகத்தில் நடக்கும் பிரச்சனைகளை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படமாக இருந்து வந்தது. தானா சேர்ந்த கூட்டம், ஜெய் பீம் மற்றும் எதற்கும் துணிந்தவன் போன்ற திரைப்படங்கள் அனைத்துமே சமூகத்தில் நடக்கும் முறைகேடுகளை தட்டி கேட்பது போன்ற கதைகளை உள்ளடக்கிய அமைந்திருந்தது. அதிலும் குறிப்பாக ஜெய் பீம் திரைப்படமானது கடலூர் மாவட்டத்தில் பழங்குடியரான ராஜா கண்ணு என்பவர் மீது திருடியதாக குற்றம் சாட்டப்பட்டு காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று அடித்தே கொன்ற உண்மை சம்பவத்தை பற்றி  தா.செ.ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் இந்த திரைப்படம் வெளியானது. 


இந்த திரைப்படத்தில் உண்மையாகவே  பழங்குடியினருக்கு ஏற்பட்ட உண்மை சம்பவத்தை தமிழ் மக்கள் கண்முன்னே எடுத்து காமித்து மேலும் காவல்துறையில் உள்ளவர்கள் செய்ததை அப்படியே காட்டியுள்ளனர். மேலும் இந்த திரைப்படம் தமிழக மக்கள் மத்தியில் ஒரு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. அதன் பிறகு அதிமுகவின் ஆட்சி முடிந்து திமுகவின் ஆட்சி தொடங்கியது. ஆனால் அதிமுகவின் ஆட்சியை விட திமுகவின் ஆட்சியில் பல அதிர வைக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டே தான் உள்ளது. உதாரணமாக வேங்கை வேல் சம்பவம், பட்டியலின மக்களின் குடிநீர் தொட்டியில் ஒருவர் மலம் கலந்தது குறித்து விசாரணைகள் சென்று கொண்டே இருக்கிறது ஆனால் குற்றவாளி இன்றளவும் கண்டுபிடிக்கப்படவில்லை, இதனால் நடந்து முடிந்த தேர்தலில் அவர்கள் அனைவரும் தேர்தலை புறக்கணிக்கவும் முற்பட்டனர்.

அதன் தொடர்ச்சியாக மூன்று மாதங்களில் யார் குற்றவாளி என்று தமிழக அரசு கண்டுபிடிப்பதாக அறிவித்திருந்தது. அதனைத் தொடர்ந்து ஒரு பள்ளி மாணவன் அவனுடைய சக பட்டியல் இன மாணவன் ஒருவனை அறிவாளால் வெட்டிய சம்பவமும் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியது.இதனை அடுத்து தமிழகத்தில் தொடர்ந்து நடக்கும் போதைப்பொருள் கடத்தல் சம்பவம், குண்டு வெடிப்பு கஞ்சா பழக்கம் போன்றவை அதிகரித்தே வருவதை தொடர்ந்து பல செய்திகளை நம்மால் பார்க்க முடிகிறது. இப்படியே தொடர்ச்சியாக திமுகவின் ஆட்சிக் காலத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டில் நடந்த பிரச்சனைகளை விட அதிகமான பிரச்சனைகளை தமிழகம் எது கொண்டு வருவதை பார்க்க முடிகிறது. இதனால் தமிழக மக்கள் பெரும் மகிழ்ச்சியையும் அவர்களின் குழந்தைகளின் எதிர்காலத்தைப் பற்றிய அச்சமும் ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் ஜெய் பீம் படத்தை தழுவி எடுக்கப்பட்ட உண்மை சம்பவத்தில் உள்ளவர்களுக்கு இன்னும் தமிழக அரசு உரிய நிவாரண நிதியை வழங்கவில்லை என்று தற்போது செய்திகள் வெளியாகி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து ராஜகண்ணு மனைவியிடம் விசாரிக்கையில் பல பேர் தங்களுக்கு உதவி செய்தாலும் கூட தமிழக அரசிடம் இருந்து கிடைக்க வேண்டிய உதவி இன்னும் கிடைக்கவில்லை என்றும், இதுவரைக்கும் தமிழக அரசு 110000 மட்டுமே வழங்கியுள்ளது முழு நிவாரணம் அளிக்கவில்லை  என்றும், மேலும் குடும்பத்தில் உள்ள யாருக்காக அரசு வேலை கிடைக்க வேண்டும் என்றும் கோரிக்கை முன்னிறுத்தி உள்ளார்.இதை அடுத்து உச்சநீதிமன்றமும் ஏன் நிவாரணம் வழங்கவில்லை என்ற கேள்வியை முன் வைத்துள்ளது!! அன்று இந்த பிரச்சனையை கண்டு வேதனை உற்று ஜெய் பீம் என்ற படத்தில் நடித்த சூர்யா அதற்கு சரியான நீதி கிடைத்ததா என்றும் பார்க்கவில்லை!! மேலும் தற்போது திமுக ஆட்சியில் சமூகத்தில் நடந்துள்ள பிரச்சனைகளுக்கும் அவர் குரல் கொடுக்கவில்லை!! இவரெல்லாம் மக்களுக்காக செயல்படும் ஒரு ஹீரோவா?? என்று பல கமெண்டுகள் எழுந்து வருகிறது!!