Tamilnadu

அமெரிக்காவில் இருந்து மாரிதாஸிற்கு ஆதரவாக கொந்தளித்த இஸ்லாமியர் வாழ்வு முழுவதும் செய்ய போவதாக அறிவிப்பு!

Maridoss - Having support from US Islam's
Maridoss - Having support from US Islam's

தமிழகத்தை சேர்ந்த எழுத்தாளரும் சமூக ஊடக பிரபாலமுமான மாரிதாஸ் கைதுசெய்யப்பட்ட சூழலில் அவருக்கு ஆதரவாக அரசியல் கட்சிகள், பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள் சமூக ஊடகத்தினர் ஆகியோர் இடையே பெருகி வருகிறது.தமிழகத்தை சேர்ந்த எழுத்தாளர் மாரிதாஸ் கைது செய்யப்பட்ட நிலையில் அவர் பிணையில் வெளிவருவார் என்று எதிர்பார்த்த நிலையில் அவர் மீது தேசவிரோத வழக்கு பதிவு செய்து மாரிதாஸை குண்டர் சட்டத்தில் கைது செய்ய தமிழக அரசும், தமிழக காவல்துறையும் தீவிரம் காட்டிவருவதாக கூறப்படுகிறது.


குறிப்பாக தமிழகத்தில் ஆளும் கட்சிக்கு ஆதரவாக மத்திய அரசு இந்திய இராணுவம், பிரதமர் மத்திய அமைச்சர்கள் போன்றோரை இழிவாக பேச கூடிய பலரை தமிழக காவல்துறை கைது செய்வது இல்லை எனவும் மேலும் அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கி குற்றவாளிகளை காப்பாற்றி வருவதாக குற்றசாட்டுகள் அதிகரித்து வருகிறது.

இந்த சூழலில் மாரிதாஸ் கைது செய்யப்பட்டதை கண்டித்து அமெரிக்காவில் இருக்கும் தமிழர் மீச்சூர் சலீம் கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளார், திமுகவை விமர்சனம் செய்வது தேச துரோகம் என்றால் அந்த தவறை தொடர்ந்து செய்ய இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மாரிதாஸ் என்ன தவறு செய்தார் தேசத்திற்கு எதிரான செயல்களில் ஈடுபட்டாரா? யாரை பற்றியும் ஆதாரம் இல்லாமல் பேசினாரா? இல்லை மத மோதல்களை தூண்டும் வகையில் செயல்பட்டாரா? கூறுங்கள் என கொந்தளித்து இருக்கிறார், இது குறித்து அவர் வெளியிட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.. வைரலாகும் வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது.