Tamilnadu

யாரு கொடுக்க வேண்டியதை யாரிடம் கேட்கிறீர்கள் "அமைச்சரை" பங்கம் செய்த அண்ணாமலை ..ஐபிஎஸ் IPS-தான்யா!

annamalai
annamalai

தமிழகத்திற்கு  பேரிடர் நிவாரண நிதியாக ஆண்டுக்கு ₹1,360 கோடியை மத்திய  அரசு தருவது வழக்கம்; இந்த ஆண்டுக்கான (2020-21) ஆண்டுக்கான பேரிடர் நிவாரண நிதியில் ₹300 கோடி நிலுவையில் உள்ளது  என  அமைச்சர் KKSSR ராமச்சந்திரன் பேட்டி அளித்து இருந்தார் அதாவது மத்திய அரசு வழங்கவேண்டிய தொகையை முறையாக வழங்கவில்லை என பொருள்படும் வகையில் குறிப்பிட்டு இருந்தார் அமைச்சர் .


இதற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தற்போது ஆதாரத்துடன் புகைப்படங்களை பகிர்ந்து பதிலடி கொடுத்துள்ளார் அதில் .மாண்புமிகு அமைச்சர் அவர்களே ,  தமிழ்நாடு பேரிடர் நிவாரண நிதியை பற்றி முதலில் நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும் , இது 75 சதவீதம் மத்திய அரசும், 25 சதவீதம் மாநில அரசும் கொடுக்கின்ற நிதி எனவும், 2020-21 ஆண்டுக்கான பேரிடர் நிவாரண நிதி-1,360 கோடி , இதில் மத்திய அரசு தனது பங்கான 1020 கோடியை

ஜூலை 31 ஆம் தேதி அளித்துவிட்டது  , நம்முடைய மாநில அரசு கொடுக்காத 300 கோடியை பற்றி நீங்கள் பேசிக் கொண்டிருக்கிறீர்கள்! உடனடியாக நம்முடைய முதலமைச்சரிடம்  முறையிட்டு இந்த தொகையை பெற்றுக் கொள்ளுங்கள்!

உங்களுடைய புரிதலுக்காக சில குறிப்புகள் இணைத்துள்ளேன் நன்றி வணக்கம் என அதற்கு தேவையான ஆவணங்களை இணைத்துள்ளார் அண்ணாமலை , மொத்தத்தில் நிதி எப்படி யாரிடம் இருந்து பங்கிடப்படுகிறது என்ற அடிப்படை கூட தெரியாமல் அமைச்சர் ஒருவர் இருக்கிறாரா என இப்போது சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் அதிகரிக்க தொடங்குகின்றனர் .

அண்ணாமலை அமைச்சர்கள் பேசும் பேட்டிகள்  குறிப்பிடப்படும் தகவல்கள் அனைத்தும்  உண்மையா ? என்ன பிழை உள்ளது என உடனுக்கு உடன் பதிலடி கொடுத்து வருகிறார் இதன் மூலம் அமைச்சர்கள் ஒன்றிற்கு இரண்டு முறை தங்களது துறை செயலர்கள் , அலுவலர்களிடம் தெரிவிக்கும் தகவல் உண்மைதானா  என மீண்டும் மீண்டும் கேட்டு வருகிறார்களாம் .

ஏதாவது ஒரு தகவல் மாற்றி தெரிவித்தால் கூட அண்ணாமலையிடம் இருந்து பதிலடி வரும் என்று முன்னெச்சரிக்கையாக  அமைச்சர்கள் ஈடுபட்டாலும் அவர்களுக்கே தெரியாமல் மத்திய அரசை குறை  சொல்லவேண்டும் என ஏதாவது  ஒன்றை சொல்லி சிக்கலில் சிக்கி விடுகிறார்கள் , இப்போது சிக்கலில் சிக்கி இருப்பவர்  KKSSR ராமச்சந்திரன் . அண்ணாமலைக்கு என்று தனி குழுவே அமைச்சர்களின் செயல்பாடுகளை ஆலோசனை செய்யவும் கண்காணிக்கவும் செயல்படுவதாக கூறபடுகிறது .