Tamilnadu

2014- ல் முகத்தில் குத்து வாங்கிய பத்திரிகையாளருக்கு பஞ்ச் கொடுத்த அண்ணாமலை !

annamalai and sabir ahmed
annamalai and sabir ahmed

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேற்றைய தினம் (09/11/2021) சென்னை கொளத்தூர் பகுதிகளில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று நிவாரணம் வழங்கினார், அத்துடன் படகில் சென்று பார்வையிட்டார் இந்த சூழலில்  அண்ணாமலை நேரலையின் போது  புகைப்படம் எடுக்க போட்டோ கிராபர் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகியது.


அண்ணாமலை படகில் சென்ற வீடியோ காட்சியை ஆளும் கட்சியை சேர்ந்த திமுகவினர் விமர்சனம் செய்தனர் இந்த சூழலில் சொல்லி வைத்தார் போல் தமிழக ஊடகங்கள் மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்படும் காட்சிகளை பின்னுக்கு தள்ளி அண்ணாமலை முதல்வர் தொகுதியில் கொளத்தூர் தொகுதியில் விசிட் செய்த நிகழ்ச்சியை கிண்டல் அடிக்க தொடங்கினர்.

இதனை ஆங்கில ஊடகமான டைம்ஸ்நொவ் ஊடகமும் வெளியிட்டது, மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட செய்திகளை வெளியில் கொண்டுவந்து நிவாரணம் கிடைக்க உதவாமல், இப்படி நிவாரணம் கொடுக்க பார்வையிட்ட அரசியல் கட்சி தலைவர்களை விமர்சனம் செய்வதுதான் ஊடகங்களின் வேலையா என்ற கேள்வி எழுந்தது.

இந்த சூழலில் டைம்ஸ் நொவ் ஊடகத்தில் செய்தி வெளியிட்ட சபீர் அஹமத் என்ற பத்திரிகையாளர் குறித்து அண்ணாமலை ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார் அதில்.,  சபீர் அகமது  போன்ற பத்திரிக்கையாளர் வேஷம் போடும் திமுகவின் ஏஜெண்டுகள் எவ்வளவு அதிகமாக வெளிவருவார்களோ,

அந்தளவுக்கு இன்று சுற்றுச்சூழல் எப்படிச் சீர்குலைந்து கொண்டிருக்கிறது என்பது நமக்குத் தெரியும்!   வரும் நாட்களில் இன்னும் பலவற்றை வெளிக்கொண்டு வருவோம் என டைம்ஸ் நொவ் தொலைக்காட்சியை டேக் செய்து குறிப்பிட்டுள்ளார் அண்ணாமலை, அண்ணாமலை குறிப்பிட்ட பத்திரிகையாளர் சபீர் அகமது என்பவர் 2014-ல் திமுக தொண்டர்களால் முகத்தில் மீண்டும் மீண்டும் குத்தப்பட்டு அடிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பாஜக மீது உள்ள சொந்த வெறுப்பை ஆங்கில ஊடகங்களில் செய்தியாக கொண்டுவந்து சபீர் அகமது தனது சொந்த சித்தாந்தத்தை ஊடகங்களில் திணிக்க நினைக்கிறார் எனவும் அவரை மக்கள் அடையாளம் கண்டு கொள்ள வேண்டும் என்பதே உண்மையான ஊடகத்துறையில் பணிபுரியும் நபர்களின்  அறிவுறுதலாக உள்ளது.

2014-ம் ஆண்டில் திமுக உறுப்பினர்களால் முகத்தில் பன்ச் வாங்கிய பத்திரிகையாளரை குறிப்பிட்டு வரும் நாட்களில் இன்னும் பல விஷயங்களை வெளி கொண்டுவருவோம் என்று அண்ணாமலை பஞ்ச் மூலம் பதில் கொடுத்துள்ளது வரும் காலங்களில் என்ன மாற்றத்தை உண்டாக்குகிறது என பொறுத்து இருந்து பார்க்கலாம்.