கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்று நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணி சேர்ந்து தேர்தலை சந்தித்தது, அந்த கூட்டணியில் அதிமுக பாஜகவிற்கு ஐந்து தொகுதிகளை வழங்கியது. ஆனால் அந்த முறை 38 எம்.பிக்களை நாடாளுமன்றத்திற்கு அனுப்பிய திமுக அரசு பல சரிவுகளையும் மக்கள் மத்தியில் அதிருப்திகளையும் சந்தித்து வருகிறது. இந்த நிலையில் 2024 ஆம் ஆண்டு தேர்தலுக்கு இன்னும் ஐந்து மாதங்கள் உள்ளதால் தேர்தல் களப்பணிகள் தீவிரமடைந்துள்ளது இருப்பினும் தற்போது தமிழக அரசியல் களம் ஒரு திருப்பத்தை கண்டுள்ளது, இதுவரை அதிமுக பாஜக கூட்டணி 2024 ஆம் ஆண்டு தேர்தலை எதிர்கொள்ளும் என்று கூறப்பட்டிருந்த நிலையில் தற்போது அது சாத்தியமாகாது என்பது போன்ற சூழ்நிலை தற்போது நிலவி வருகிறது.
கடந்த முறை ஐந்து தொகுதிகளை மட்டும் பெற்ற பாஜக தற்போது கூட்டணியில் சரிபாதியான ரெட்டை இலக்கு எண்ணை நிர்ணயித்து முடிவு செய்து எடப்பாடியிடம் கூறியதும் எடப்பாடி பழனிசாமி அதற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் ஒன்பது சீட்டுகள் வேண்டுமென்றால் தருகிறோம் என்று தெரிவித்தது அதற்கு டெல்லி தலைமையும் உடன்படாத காரணத்தினால் மொத்தமாக இந்த தேர்தல் ஆலோசனை சர்ச்சையில் முடிந்து தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனை காரணமாக வைத்து அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் பாஜக மீது வேறு விதமான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். அதாவது அதிமுகவின் முன்னாள் பொதுச் செயலாளரான ஜெயலலிதா அவர்களை விமர்சிக்கும் வகையில் அண்ணாமலை கூறியதாக அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் கண்டனங்கள் நிறைவேற்றப்பட்டதையும் தற்போது சனாதன ஒழிப்பிற்காக அண்ணாமலை தெரிவித்த கருத்து அண்ணா அவர்களுக்கு எதிராக ஒரு கருத்தை தெரிவித்துள்ளார் என்றும் குறிப்பிட்டு அண்ணாமலை மீது சரமாரியான கருத்துகளையும் விமர்சனங்களையும் அதிமுக தரப்பில் கூறப்பட்டது.
இதனால் கோபமடைந்த பாஜகவினர் சமூக வலைதளத்தில் தங்களது எதிர்ப்புகளை தெரிவிக்க இரண்டு கட்சிகளும் சோஷியல் மீடியா சேர்த்து சமூக வலைத்தளத்தில் பெரும் போரை எதிர்கொண்டது. இதற்குப் பிறகு செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அதிமுக பாஜகவின் கூட்டணி முறிந்து விட்டது என்று தெரிவித்தார். ஆனால் இதற்கு பாஜக தரப்பில் எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும் தெரிவிக்கப்படவில்லை. இந்த நிலையில் டெல்லி தலைமையிடமிருந்து அதிமுக மற்றும் பாஜகவை விவகாரத்தை கையில் எடுத்து தொலைபேசியில் பேசப்பட்டதாகவும் அப்போது அழைத்தபோது எடப்பாடி பழனிசாமி தமிழக பாஜக மாநில தலைவராக இருக்கும் அண்ணாமலையை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று கூற அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது டெல்லி! எனவும் தகவல்கள் கசிந்துள்ளன.
இந்த நிலையில், அண்ணாமலை தலைமையில் கூட்டணி அமையும். அண்ணாமலை தலைமையில் தமிழ் மாநில காங்கிரஸ், பாட்டாளி மக்கள் கட்சி, புதிய தமிழகம் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி போன்ற கட்சிகள் அனைத்தும் சேர்ந்து கூட்டணி அமையும். அண்ணாமலை தலைமையில் தமிழ்நாடு முழுவதும் தீவிர பிரச்சாரம் மேற்கொள்ளப்படும்! இது மட்டுமல்லாமல் 2026 ஆம் ஆண்டில் அண்ணாமலை தலைமையில் பாஜக தமிழகத்தில் ஆட்சி அமைப்பதற்கான வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அதுதான் அண்ணாமலையின் கணக்கு என்று சமீபத்தில் தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேட்டி அளித்த மூத்த அரசியல் சவுக்கு சங்கர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அதுவும் பாஜக தலைமை 2024 மட்டுமல்ல 2026 ம் ஆண்டு நடக்கப்போகும் சட்டமன்ற தேர்தலையும் சேர்த்துதான் காய்களை கனக்கச்சிதமாக நகர்த்தி வருகிறது என்றும் சில தகவல்கள் கசிந்துள்ளன. மேலும் இவை அனைத்தையுமே அண்ணாமலை முன்கூட்டியே கணித்து கூறியதாகவும், எப்படியும் அதிமுக பாஜக கூட்டணியை விட்டு பிரியாது அவர்களே வருவார்கள் என கூறியதாகவும் வேறு சில தகவல்கள் கசிந்துள்ளன