Tamilnadu

அண்ணாமலை அதிரடி! எங்களுக்கு அந்த கேடுகெட்ட எண்ணம் இல்லை....இந்த 5 விஷயத்தையாவது பண்ணுங்க முதல்வரே..

Annamalai and stallin
Annamalai and stallin

12 வகுப்பு படித்து வந்த அரியலூர் மாணவி லாவண்யாவின் இறப்புக்கு தீர்வு கிடைக்க வேண்டும் என பாஜக   பெரும்பாடு படுகிறது. அதற்கான அனைத்து கட்ட போராட்டத்தையும், கோரிக்கைகளையும் முன் எடுத்து  செல்கிறது. இருந்தாலும் அதே அரியலூர் மாவட்டத்தில் நீட் தேர்வு பயம் காரணமாக உயிரிழந்த அனிதாவிற்காக போர்க்கொடி தூக்கியவர்கள் இப்பொது லாவண்யாவிற்காக பேச மறுக்கின்றனர். அதை எல்லாம் தாண்டி லாவண்யா உயிரிழந்ததற்கு கூட இரங்கல் தெரிவிக்காத அளவுக்கு தமிழக அரசியல் மோசமானதாக உள்ளது.எந்த ஒரு மீடியாவும் இது குறித்து வெளிச்சம் போட்டு காட்ட மறுக்கிறது. காரணம் மத மாற்றம் என வரும் போது கிறிஸ்துவ விஷயம் என்பதால், எங்கு நடவடிக்கை எடுத்தால் தங்களுக்கு  சிறுபான்மையினரின் ஓட்டு கிடைக்காமல் போய்விடுமோ என்பதற்காக உயிரையும் துச்சமாக உதாசீனப்படுத்துகின்றனர். 


இப்படி ஒரு நிலையில், திமுக எதிர்க்கட்சியாக இருக்கும் போது அனிதா இறப்பு விவகாரத்தில் பேசிய எமோஷன், சவுண்டு, தொடர் முழக்கம், மீடியா செளிச்சம் எப்படி இருக்கிறது என்பதை சுட்டிக்காட்ட,  தற்போதைய முதல்வர் ஸ்டாலின் அவர்களின் அன்றைய பேட்டியை பாஜக தலைவர் அண்ணாமலை 5 முக்கிய விஷயத்தை குறிப்பிட்டு தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்து உள்ளார்.

அதில் இறந்தவர் சடலத்தை வைத்துக் கொண்டு அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாகப் பொய் பிரச்சாரங்களைக் கட்டவிழ்த்து மக்களைத் திசைதிருப்பும் எண்ணம் பாஜகவுக்கு இல்லை. எங்களது கோரிக்கைகள் இவையே

1. மாணவி லாவண்யாவின் குடும்பத்தில் குறைந்தபட்சம் ஒருவருக்காவது அரசு வேலை வழங்க வேண்டும் 

2. மாணவியின் குடும்பத்துக்கு அரசு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் 

3. மதம் மாறச் சொல்லி வற்புறுத்திய ராகேல் மேரி என்பவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். 

4. தமிழகத்தில் மீண்டும் கட்டாய மத மாற்றத் தடைச் சட்டம் கொண்டு வர வேண்டும்

5. சம்பந்தப்பட்ட பள்ளியின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், பாஜக என்றாலே இஸ்லாம்களுக்கு எதிரானார்கள் என்ற தவறான கருத்தை வைத்து அரசியல் செய்யப்படும் மோசமான மனிதர்களுக்கு மத்தியில், காவலர்களால் தாக்கப்பட்ட சட்டக்கல்லூரி மாணவரான வியாசர்பாடியைச் சேர்ந்த அப்துல் ரஹீமை பாஜகவினர் நேரில் சென்று பார்த்து ஆறுதல் தெரிவித்ததோடு, காவல் துறையினரின் இந்த நடவடிக்கைகு கண்டனம் தெரிவித்தனர்.


இது குறித்து அண்ணாமலை தனது முகநூல் பக்கத்தில், சென்னையில் சட்டக்கல்லூரி மாணவரான வியாசர்பாடியைச் சேர்ந்த அப்துல் ரஹீம் முக கவசம் அணியாமல் வந்தார் என்பதற்காக காவல் நிலையத்தில் வைத்துத் தாக்கப்பட்ட காட்சிகளைப் பார்த்தேன்!

தொடர்ச்சியாக இதுபோன்ற சம்பவங்களால் காவல்துறையில் நேர்மையாக பணிபுரிபவர்களுக்கும் தலைக்குனிவு ஏற்படுகிறது.  இந்த நிகழ்ச்சி ஒட்டுமொத்த காவல்துறையின் பிரதிபலிப்பு இல்லை என்றாலும் கூடதனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை ஒதுக்கி வைத்து காவல்துறை நண்பர்கள் பணிபுரிய வேண்டும் என்பதே பெரும்பாலான மக்களுடைய வேண்டுகோள்! - இவ்வாறு பதிவிட்டு உள்ளார் அண்ணாமலை.