Cinema

நடிகை ரம்பா வெளியிட்ட புகைப்படம் ஒத்த ஓட்டிற்கு பதிலடியாக ஒத்த வாழ்த்தை காட்டு திமுகவை கேள்வி எழுப்பும் நெட்டிசன்ஸ்!

rambha and stalin
rambha and stalin

90ஸ் கிட்ஸ்களின் பிரபல நடிகை ரம்பா விஜயதசமி வாழ்த்துக்கள் கூறி தனது முகநூலில் கனடாவில் உள்ள தனது தனது  பூஜை அறையில் இருந்து நெற்றியில் குங்குமம் வைத்து பகிர்ந்து இருக்கிறார் இதற்கு நெட்டிசன்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர் இந்த சூழலில் இதிலும் திமுகவை இழுத்து விட்டு கேள்வி எழுப்பி வருகின்றனர் நெட்டிசன்ஸ்.


நாச்சியார் தமிழச்சி ட்விட்டர் பக்கத்தில் வெளிநாட்டில் வசிக்கும் நடிகை ரம்பா கூட விஜயதசமி வாழ்த்து கூறியிருக்கிறார், ஆனால் விடியல் ஆட்சியின் முதல்வர் வாழ்த்து தெரிவித்தாரா என கேள்வி எழுப்பி இருக்கின்றனர், கடந்த இரண்டு நாட்களாக கோவில் திறப்பு விஷயத்தில் அண்ணாமலை தெரிவித்த கருத்து, சேகர் பாபு மறுப்பு என நெட்டிசன்கள் கலாய்த்து வரும் வேலையில் இப்போது இந்து பண்டிகைக்கு மட்டும் முதல்வராக பொறுப்பேற்ற பின்பும் ஸ்டாலின் வாழ்த்து சொல்லாதது ஏன் என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

கோவில் திறக்கவேண்டும் என போராடி வெற்றி பெற்ற பாஜக அடுத்து மதசார்பற்ற முறையில் நடக்க வேண்டிய தமிழக முதல்வர் ஸ்டாலின் இந்துக்கள் மீது உள்ள வெறுப்பின் காரணமாக இந்துக்கள் பண்டிகைக்கு மட்டும் வாழ்த்து சொல்ல மறுக்கிறார் என நீதிமன்றம் செல்ல இருப்பதாக பாஜக பிரமுகர் வீர திருநாவுக்கரசு கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

எது நடந்தாலும் மோடி எதிர்ப்பாளர்கள் அனைத்திற்கும் மோடி தான் காரணம் என முன்னர் கூறிவந்தது இப்போது திமுக ஆட்சியில் இருப்பதால் அதே பந்து அவர்களை நோக்கி திரும்பியுள்ளதாகவே பார்க்க படுகிறது, திமுக தலைவராக வாழ்த்து சொல்லவில்லை என்றால் ஓகே ஆனால் தமிழக முதல்வர் ஆனபின்பும் தனக்கு வாக்களித்த மக்களை மத ரீதியாக பிரித்து பார்த்து வாழ்த்து சொல்வது எந்த வகையில் நியாயம் என சாமானியர்கள் எழுப்பும் கேள்வியும் பொது வெளியில் பார்க்க முடிகிறது.

ஒத்த ஓட்டு பாஜக என கிண்டல் செய்த நபர்களை உங்கள் திமுக கட்சி மத சார்பற்ற கட்சி என்றால் இந்துக்கள் பண்டிகைக்கு வாழ்த்து சொன்ன ஒத்த வாழ்த்தை காட்டு என பைந்தவி என்பவர் ட்விட்டரில் கேள்வி எழுப்பி இருக்கிறார்.