Technology

நடிகை ராஷ்மிகா மந்தனா, கேத்தினாகைஃப், ஆலியா பட் இவர்களின் வரிசையில் சிக்கிய அபிராமி!

abirami
abirami

கடந்த சில மாதங்களாகவே முக்கிய நடிகைகளின் முகம் வேறு ஒரு நபரின் உடலோடு செயற்கை தொழில்நுட்பத்தின் மூலம் சித்தரிக்கப்பட்டு வருகிறது. அதுவும் இந்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் பெரும்பாலும் ஆபாசமாக பதிவிடப்படுவது பல பிரபல நடிகைகளை அதிர்ச்சியில் தள்ளி உள்ளது. முதலில் நடிகை ராஸ்மிகா மந்தனா குறித்த டீப் பேக் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலான போது பலர் இதற்கு எதிராக குரல் கொடுத்திருந்தனர் மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை சார்பிலும் இதற்கு உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும் அறிவிப்புகள் வெளியானது அதன் படியே மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை இதற்கான அடுத்தடுத்த நடவடிக்கைகளை எடுக்க ஆரம்பித்தது. ராஷ்மிகா மந்தனாவை தொடர்ந்து பிரபல கேத்தினா கைஃப் குறித்த டீப் பேக் புகைப்படமும் வெளியானது திரையுலகை பதட்டமாகியது. இதுகுறித்து கேத்தரினா தனது சமூக வலைதள பக்கத்திலும் பதிவிட்டு வருத்தம் தெரிவித்து இருந்தார், அப்பொழுது இதுபோன்ற வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை பதிவிடுபவருக்கு தண்டனைகள் மத்திய அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது.


மேலும் இது போன்ற வீடியோக்கள் சமூக வலைதளத்தில் பதிவிடப்படும் எனில் பதிவிடப்பட்ட சில மணி நேரங்களில் அந்த பதிவுகளை நீக்குவதற்கு தனி நபர்களை அந்த இணையதளங்கள் நியமிக்க வேண்டும் என்றும் இது குறித்து புகார் அளிப்பதற்கு மனுதாரர்களுக்கு ஏற்ற வசதிகள் மற்றும் எளிய நடைமுறைகளை வழங்க வேண்டும் என்றும் தெரிவித்தது. இப்படி செயற்கை தொழில்நுட்பத்தால் இந்த இரண்டு பிரபலங்கள் மட்டுமின்றி ஆலியா பட், காஜோல் என பாதிக்கப்பட்டவர்களின் வரிசை நீண்டு கொண்டே சென்றது திரை உலகை மட்டுமின்றி நாடு முழுவதும் எதிரொலித்தது பிரபலமான நடிகைகளுக்கு இதுபோன்ற நிலைமை என்றால் சாதாரண பெண்களுக்கு இது போன்ற நிகழ்வு ஏற்பட்டிருந்தால் என்ன செய்வது அவர்களின் வாழ்க்கை என்ன ஆவது! எப்படி அவர்கள் இதனை போலி என்று நிரூபிப்பார்கள் என்பது குறித்த அச்சங்களும் கேள்விகளும் சமூக வலைதளத்தில் முன்வைக்கப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் ஒரு டீப் ஃபேக் சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது அந்த வீடியோவில் பிக் பாஸ் மூலம் பிரபலமான அபிராமி வெங்கடாசலம் உள்ளது தமிழ் திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நோட்டா, நேர்கொண்ட பார்வை போன்ற படங்கள் மூலம் பிரபலமான அபிராமி வெங்கடாசலம் தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தால் நடத்தப்படும் பிக் பாஸ் என்ற நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு பிரபலமானவர். 

இவர் குறித்த டீப் பேக் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது. இதற்கு அபிராமி வெங்கடாச்சலம், வாழ்க்கையில் மோசமானவர்களுக்கு கூட இப்படி நடக்க கூடாது, தற்காலத்தில் மிகவும் மோசமான ஆழமான போலியானது மிகவும் பிரபலமடைந்து வருகிறது! நம்மை யார் வேண்டுமானாலும் மோசமாக காட்டலாம் இது மலிவான பயமுறுத்தும் உலகம்! நான் சொல்ல விரும்புவது இவைகளை உருவாக்குபவர் ஒரு குற்றவாளி ஆனால் அதை பகிர்ந்து கொண்டு மகிழ்ச்சி அடைபவர்கள் பெரிய குற்றவாளிகள்! இவர்களுக்கெல்லாம் பிரபஞ்சம் ஒரு வலிமையான பாடம் கற்பிக்கட்டும் கவலைப்பட வேண்டாம் சமூகம் இன்னும் வலிமையான பெண்ணாக இருக்க வேண்டும் இந்த உலகில் எதுவும் உருவாக்கப்படவில்லை என்னை உடைக்க தொழில்நுட்பம் அனைவருக்கும் திறக்கப்பட்டுள்ளது, அதைத்தவிர மற்ற எல்லா முட்டாள் தனங்களும் நடக்கிறது என தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு கண்டனத்தை தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் குறித்து கடுமையான தண்டனைகள் வேண்டும் எனவும் வேறு கருத்துக்கள் உலவுகிறது குறிப்பிடத்தக்கது.