24 special

அண்ணாமலையின் மாஸ்டர் பிளான்….. களமிறங்கும் அதிரடி படையினர்!

mkstalin, annamalai
mkstalin, annamalai

நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் இரண்டு மூன்று மாதங்களே உள்ள நிலையில் ஒவ்வொரு கட்சியும் தேர்தல் வேலைகளில் படு பிஸியாக இருந்த வருகிறது. மத்தியில் பாஜக ஆட்சி அமைக்க கூடாது என்பதற்காக எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து அமைத்த IND கூட்டணி தற்போது பிளவுபட்டு நிர்கதியில் விடப்பட்டுள்ளது! அதே சமயத்தில் எதிர்க்கட்சி கூட்டணிகள் இடம் பெற்றிருந்த கட்சிகள் அனைத்தும் நம் மாநிலத்திலாவது நம் பதவியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்கான வேலைகளில் தீவிரமாக இறங்கி உள்ளது. ஆனால் பாஜக இந்த காலகட்டத்தில் தன் செல்வாக்கை நாடு முழுவதும் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் மூத்த அரசியல் விமர்சகர்களால் மீண்டும் பிரதமர்  நரேந்திர மோடியின் ஆட்சி தான் மத்தியில் ஏற்படும் எனவும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கட்சியே ஆட்சியைப் பிடிக்கும் என்றும் கூறி வருகின்றனர். இதற்கு ஏற்றார் போல் தமிழகத்திலும் தமிழக பாஜக தனது செல்வாக்கை உயர்த்தியுள்ளது அதிலும் குறிப்பாக அண்ணாமலை அவர்களின் என் மண் என் மக்கள் நடைபயணம் தமிழகம் முழுவதும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.


நடைப்பயணத்தில் அண்ணாமலையை பார்க்கும் பொதுமக்கள் இளைஞர்கள் மற்றும் குழந்தைகள் என அனைவரும் மகிழ்ச்சியில் ஆழ்வதைவிட தங்கள் கோரிக்கைகளை முன்வைத்து கண்டிப்பாக நடைபெறும் என்ற நம்பிக்கையை அண்ணாமலையின் வார்த்தைகளால் பெற்றுள்ளார்.இந்த நிலையில் கடந்த வாரத்தில் அயோத்தி ராமர் கோவிலின் கும்பாபிஷேக விழா பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது. அவ்விழா முடிந்த அன்றைய தினமே பிரதமர் தன் கட்சி நிர்வாகிகள் மற்றும் மாவட்ட தலைவர்கள் அனைவருக்கும் முக்கிய செய்திகளை அனுப்பினார் தேர்தல் வேலைகளை தீவிர படுத்தவும் 400 தொகுதிகளை இலக்காக கொண்டு செயல்பட வேண்டும் என்று தெரிவித்திருந்தார். இந்த நிலையில் தமிழகத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இதற்கான நடவடிக்கைகளை ஆறு மாதத்திற்கு முன்பாகவே தொடங்கியுள்ளார். அதாவது, பாஜகவின் ஐடி குழு தமிழகத்தின் ஒவ்வொரு பகுதிகளில் உள்ள வீட்டிற்கும் சென்று மக்களின் கோரிக்கைகளை பெறுவதற்கு இருசக்கர வாகனங்களுடன் கட்சியின் முழு நேர தொண்டர்களை நியமித்துள்ளது. ஒரு சட்டசபைக்கு 15 குழுக்கள் என நியமிக்கப்பட்டு அந்த குழுக்களில் உள்ள அனைவருக்கும் இருசக்கர வாகனங்கள் வழங்கப்பட்டு மக்களுக்கு தேவையான அரசு திட்டங்களை எடுத்துரைக்கும் வேலையில் பாஜக இறங்கியுள்ளது.

இதன் முதல் பகுதியாக கோயம்புத்தூரில் உள்ள சட்டமன்ற தொகுதிகளில் பாஜகவின் ஐடி குழுக்கள் களமிறங்கி ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று மக்களின் கோரிக்கைகளை சேகரித்து வருகின்றனர். மேலும் ஒரு தெருவில் உள்ள குடும்பங்களின் எண்ணிக்கை, அதில் உள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை அவர்களின் பின்னணி என்ன, எந்த மதம் சேர்ந்தவர்கள், எந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள், மத்திய அரசின் திட்டங்களால் பயனடைந்த 15 லட்சம் பேர் பட்டியலில் வருகிறார்களா அல்லது அவர்களுக்கு ஏதேனும் உதவி தேவைப்படுகிறதா அப்படி தேவைப்பட்டால் மத்திய அரசின் திட்டங்களில் அவர்களுக்கு பயன் கிடைக்கும் வகையில் கையில் எடுத்துச் செல்லப்பட்ட லேப்டாப் மூலம் அவர்களுக்கு அந்த பலன் கிடைப்பதற்கான விண்ணப்பத்தையும் பதிவு செய்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக இளம் வாக்காளர்களை கவரும் வகையில் அவர்களுக்கு தேவையான கல்வி கடன் சுயதொழில் தொடங்குவதற்கான கடன் மற்றும் பலவற்றை எடுத்துரைத்து அந்த குடும்பத்திற்கு என்ன தேவையோ அதனை வழங்கி வரும் பணியில் பாஜகவின் ஐடி விங் இறங்கி உள்ளது.