Politics

உலக அளவில் ஒரு கப்பல் மூழ்கிறது.. "சாதனையை" செய்த மோடி... எழுத்தாளர் தெரிவித்த பிரம்மிபூட்டும் தகவல் !

modi
modi

பிரபல எழுத்தாளர் ஸ்டான்லி ராஜன் பாகிஸ்தானின் தற்போதைய நிலை குறித்தும், அதற்கு பின்னால் நடந்தவை என்ன என்பது குறித்து பல்வேறு தகவல்களை கோர்வையாக குறிப்பிட்டுள்ளார், இந்த தகவல்கள் பிரமிப்பாக உள்ளன அவை பின்வருமாறு :-


உலக அரங்கில் ஒரு கப்பல் முழுக்க நீர்புகுந்து மூழ்கும் தருவாயில் இருக்கின்றது இனி அது அப்படியே மூழ்குமா இல்லை இதர கப்பலின் உதவியால் அதன் ஆயுள் நீட்டிக்கபடுமா என்பதுதான் இப்போது எழும் கேள்வி?அந்த கப்பலின் பெயர் பாகிஸ்தான் இந்தியா எனும் வளமான நாட்டில் இருந்து அந்நாடு பிரிக்கபட்டதே இந்தியா எக்காலமும் பலம்பெற்றுவிட கூடாது என்பதன்றி வேறல்ல‌, ஆப்கானியரின் மொகலாயர் இந்தியாவினை ஆண்ட காலங்களில் அது உலகின் முதல் இட நாடாக இருந்ததை வியாபாரியாக வந்த வெள்ளையன் கவனித்தான் அவன் ஆளும்பொழுதும் இந்திய செல்வத்தின் வளம் அவனுக்கு புரிந்தது. இந்நாட்டை அப்படியே விட்டு செல்லாமல் இதற்கு தலையடி கொடுத்து இந்நாடு தன் காலடியில் விழுந்து கிடக்க வழிதேடித்தான் பாகிஸ்தானை உருவாக்கி கிழக்கே வங்கத்தை உடைத்து அதையும் கொடுத்து சிட்டகாங் என துறைமுகத்தையும் கொடுத்தான்.ஒருவகையில் கராச்சி சிட்டகாங் என இருபெரும் பெரும் எதிர்காலம் பாகிஸ்தானுக்கு இருந்ததுஆனால் ஒருவித முரட்டு எதிர்ப்பில் பிரிந்த நாடு என்பதால் இஸ்லாமியருக்கு தனிநாடு வேண்டும் என்ற நோக்கில் பிரிந்தார்களே தவிர நாட்டை முன்னேற்றும் திட்டமோ கடப்பாடோ அவர்களுக்கு இல்லை

அவர்களின் மிகபெரிய முதல் அதிர்ஷ்டம் நேரு, அவர் மட்டும் பாகிஸ்தானை எதிரியாக கருதியிருந்தால் தொடக்கத்திலே அந்நாடு எத்தியோப்பியா அல்லது ஆப்கன் நிலைக்கு சென்றிருக்கும்.ஆனால் அணிசேரா கொள்கை என குழப்பினார், சீனா சோவியத் யூனியன் எனும் நாடுகளை எதிர்க்க இந்தியா சரியான நாடு என அமெரிக்கா கணித்தபொழுது நேரு சீனா, சோவியத் யூனியன் பக்கம் இருந்து ஒரு குழப்பமான கொள்கை சொல்லி அமெரிக்காவினை கடுப்பேற்றினார்.

வேறுவழி இல்லா அமெரிக்கா பாகிஸ்தானை கையில் எடுத்து வளர்த்தது, பாகிஸ்தானின அடுத்த அதிர்ஷ்டம் அரபுநாடுகளின் எண்ணெய் வளம், இந்திய எதிர்ப்பில் அமெரிக்க உதவியுடன் பலமான ராணுவத்தை கொண்டிருந்த அந்த இஸ்லாமிய நாட்டினை அரபுநாடுகள் தாங்கின‌அடுத்து இந்தியாவினை எதிர்க்க சீனா கொடுத்த ஆசி இந்த வழிகளில்தான் பாகிஸ்தான் பொருளாதாரமே இருந்தது, ஆப்கன் போன்ற நாடுகளுக்கு பாகிஸ்தான் ஊடாக வழி செல்வதால் ஏக கொண்டாட்டம், பாகிஸ்தானின் முதல் அடி கிழக்கு பாகிஸ்தானை இழந்தது எனினும் இந்திய எதிர்ப்பு எனும் ஒரு காரணத்தை கொண்டு பல நாடகங்களை நடத்தி வசூலில் பின்னிகொண்டிருந்தது.

அதே நேரம் காங்கிரஸுக்கும் பாகிஸ்தானுக்கும் ஒரு ரகசிய உறவு இருந்தது என்பதும் தியரி, இந்தியா நினைத்திருந்தால் பாகிஸ்தானை என்றோ முடக்கியிருக்கலாம் ஆனால் ஒரு ரகசிய இழை அவர்களுக்குள் இருந்தது என்பதும் இந்த இழையினை பின்னி கையில் வைத்திருந்தது வல்லரசான சக்தி ஒன்று என்பதும் உலக அரசியலில் கசிந்த செய்திகள்.இப்படியெல்லாம் இந்தியாவுடன் திரைமறைவில் உதவி பெற்று திரைக்கு முன்னால் ஒரு நாட்காமாடி ஏதோ செய்து கொண்டிருந்தது பாகிஸ்தான் ஆனால் மனதில் எக்காலமும் இந்தியாமேல் தீரா வஞ்சம் உண்டு, மோடி அரசு வந்ததும் அது செய்த முதல் வேலை பாகிஸ்தானின் பொருளாதாரத்துக்கு ஸ்கெட்ச் போட்டது.

முதலில் அணிசேரா கொள்கையினை தூக்கி எறிந்து அமெரிக்க அணியில் சேர்ந்தது, 1950 முதலே இதற்கான வாய்பினை எதிர்பார்த்த அமெரிக்கா ஓடிவந்து சேர்ந்து கொண்டது, இந்தியாவினை மீறி அவர்களால் பாகிஸ்தான் பக்கம் செல்லமுடியவில்லை,அதுவும் சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் முறுகல் முற்றும் நேரம் சீன கூட்டாளியான பாகிஸ்தானை விட சீன எதிரியான இந்தியாவே அவர்களுக்கு விருப்பம் மோடியின் அடுத்த அடி அரேபியாவில் விழுந்தது, அது மிகபெரிய ஆச்சரியம், ஒரு இந்துதேசம் அதுவும் இஸ்லாமியருக்கு எதிரி என கருதபட்ட மோடியின் தேசம் அரபுலகில் அந்த ஆச்சரியத்தை செய்தது.

வளைகுடாவில் ஒரு அணியினை உருவாக்கி பாகிஸ்தானை தனிமைபடுத்தியது இந்தியா, மிக நிதானமாக இஸ்ரேலுடன் உறவுபாராட்டி அரேபியாவில் துருக்கி அணி துருக்கி இல்லா அணி என ஒன்றை உருவாக்கி பாகிஸ்தானை துருக்கி அணிக்கு தள்ளியது,பாகிஸ்தானின் மிகபெரிய ஆபத்து சீனா, அமெரிக்கா போல் சீனா விட்டுகொடுக்கும் நாடு அல்ல என தெரியாமல் சிக்கி கொண்டார்கள்.

சீனா தன் ஒன் பெல்ட் ஒன் ரோடு உள்ளிட்ட பல திட்டங்களில் பாகிஸ்தான் சீனாவுக்கு இடமளித்தது, வஞ்சக சீனா பாகிஸ்தான் நிலத்தில் தன் திட்டத்தை தன் பணத்தில் நிறைவேற்ற பாகிஸ்தானுக்கு கடன் கொடுத்து வட்டியும் கேட்டு கொடுமைபடுத்தியது, நிச்சயம் நிலம் எங்களுடையது பணம் உங்களுடையது பலன் இருவருக்கும் என கேட்க வேண்டிய பாகிஸ்தான் ஏமாந்தது.

நிலம் எனக்கு, பணம் எனக்கு, வட்டியும் எனக்கு என வரிந்து கட்டுகின்றது சீனா சீனாவின் இந்த மிகபெரும் நெருக்கடியில் பாகிஸ்தான் சிக்கி இருக்கின்றது, இனி அந்நாடு தன் துறைமுகம் அல்லது சில பரப்புகளை சீனாவிடம் விற்க வேண்டும் அல்லது தற்கொலை செய்ய வேண்டும்.

தற்கொலை என்றால் வேறொன்றுமில்லை இந்திய அணியிடம் சரணடைவது, ஆம், இந்தியா சீன வாயில் சிக்கிய ஒவ்வொருவரையும் தன் பணத்தால் மீட்டெடுக்கின்றது, நேபாளத்தில் இந்தியா தன் பணத்தை செலவழித்து சீன கடன்களை அடைத்து நேபாளத்தை மீட்டது, இலங்கையிலும் அதையே செய்து இப்பொழுது சீனாவின் கடனை அடைக்க உதவி இலங்கையினை தன் பக்கம் எடுக்கின்றதுமியன்மாரிலும் அதையே செய்கின்றது இந்தியா.

உண்மையில் இந்தியாவால் இப்பொழுது பாகிஸ்தானுக்கு உதவி காக்க முடியும், ஆனால் எந்த நம்பிக்கையில் உதவுவது,அமெரிக்காவினை மீறி பாகிஸ்தானுக்கு உதவும் சக்தி கொண்ட ஒரே நாடு சீனா இப்பொழுது அவர்கள்தான் பாகிதானை விழுங்க தயாராய் நிற்கின்றார்கள், இனி பாகிஸ்தான் அமெரிக்கா பக்கம் சாயவேண்டும் அல்லது சீனாவிடம் சிக்க வேண்டும்.

அமெரிக்கா பக்கம் சாய்ந்தால் அங்கிருக்கும் இந்தியாவோடு அவர்கள் சரணடைய வேண்டும் கூடவே ஆப்கனையும் கைகழுவ வேண்டும் இதெல்லாம் இல்லாமல் பாகிஸ்தான் இல்லை, இந்திய எதிர்ப்பை கைவிடுதல் என்பது தற்கொலைக்கு சமம் ஆனால்  வேறு வழியில்லை, சீன கடன்களை கொடுக்க பணமில்லை, பாகிஸ்தானின் பொருளாதாரமும் அதால பாதாளத்தில் கிடக்கின்றது, இரு தேசங்களும் ஒன்றாகத்தான் பிரிந்தன, ஆனால் இந்தியா தன் பொருளாதாரத்தை வளர்த்து எங்கோ சென்றுவிட்டது, தீவிரவாதத்தை மட்டும் வளர்த்த பாகிஸ்தான் இன்று நாசமாய் கிடக்கின்றது.

இந்தியாவினை வளரவிடாமல் செய்ய அதன் அருகில் வெள்ளையனால் அமர்த்தபட்ட ஒரு அடியாள் பாகிஸ்தான், அந்த அடியாள் திருந்தினால் வெள்ளையன் கனவு பலிக்காது என நேரு அவர்கள் மேல் வாஞ்சையுடன் இருந்தார், இந்திரா தீவிரம் காட்டினாலும் சீக்கிய காலிஸ்தான் பின்னால் இருந்து எழுந்த சதி அம்பு அவரை வீழ்த்திற்று அதன் பின் காங்கிரஸில் என்னவெல்லாமோ நடந்து பாகிஸ்தான் தாக்கு பிடித்தது, மோடி அரசு 70 ஆண்டு முன்பு செய்யவேண்டிய காரியங்களை இப்பொழுது செய்தது, மோடிக்கும் இந்திராவுக்கு செய்தி சதி போலவே சீக்கியர் மூலம் குறிவைக்கபட்டது

ஆனால் மோடி லாவகமாக தப்பி இப்பொழுது பாகிஸ்தானை முழுக்க சரித்திருகின்றார், விரைவில் வரலாறு காணா நெருக்கடியில் பாகிஸ்தான் சிக்கும் அந்நாடு சில துண்டுகளாக உடையவும் வாய்ப்பு அதிகம். வெள்ளையன் உருவாக்கிய காங்கிரஸ் பாகிஸ்தானை உடையாமல் காத்ததையும், சுத்தமான இந்தியரின் ஆட்சியில் அந்த ஆபத்து நீங்கி உடைவதையும் காலம் காட்டி கொண்டிருக்கின்றதுஎன குறிப்பிட்டுள்ளார் ஸ்டான்லி ராஜன்.

தமிழகத்தில் நிலவும் அரசியல் பின்னணி குறித்தும் முக்கிய தகவல் குறித்தும் மாறுப்பட்ட கோணத்தில் சிறப்பு தகவல்களை  அரசியல் குறித்து முழுமையான தகவல்களை TNNEWS24 DIGITAL,  YOUTUBE பக்கத்தில் பதிவு செய்கிறோம் மறக்காமல் SUBSCRIBE செய்து இணைந்து இருக்கவும்.