
தமிழனின் வாழ்வியல் முறை மாறியதால் ஒட்டுமொத்தமாக மாறிய தமிழ் இளைஞர் சமூகம். திருவள்ளூர் அருகே நிகழ்ந்த அந்த கொடூரம், ஒரு தனிமனிதனின் சம்பவம் அல்ல.தமிழகத்தை ஒட்டுமொத்தமாக தலைகுனிவை ஏற்படுத்திய சம்பவம் ஆகும். இதற்கு மிக பெரிய பொறுப்பு என்பது ஒட்டு வங்கி அரசியல் மற்றும் பெருபான்மை சமூகத்தில் ஒற்றுமை இல்லாத நிலைதான்.
தற்போது கஞ்சா போதையால் மனித உயிருடன் விளையாடுவது தமிழகத்தில் தினசரி நடக்கும் காட்சிகளில் ஒன்றாக மாறிவிட்டது. இது வெளிமாநில தொழிலாளர்மீது நடந்த வன்முறை மட்டும் அல்ல; அ, வீட்டிலேயே தந்தையையும் தாயையும் வெட்டும் அளவுக்கு சமூக நிலைமை விபரீதமாக மாறிவிட்டதின் நேரடி சாட்சிதான்.
இது எங்கிருந்து வந்தது என்று கேட்பதை விட, இந்த சமூகம் எப்போது வழிமாறத் தொடங்கியது என்பதை கேட்பதே உண்மையான கேள்வி. நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு வரை இப்படியான சூழல் தமிழகத்தில் இல்லை. காரணம், அப்போது கல்வி என்பது வெறும் வேலைக்கான கருவி அல்ல; அது வாழ்வியலோடு இணைந்திருந்தது. தொடக்கக் கல்வியிலேய போதனைகள் நிறைந்து காணப்பட்டத், தமிழர் பண்பாடு, ஒளவையார், தாயுமானவர் போன்றோர் வழியாக நற்பண்புகள் விதைக்கப்பட்டன. குழந்தைகள் ஒருவித பக்தியுடனும் கட்டுப்பாட்டுடனும் வளர்க்கப்பட்டனர். ஆசிரியர்களும் பெற்றோர்களும் “நல்ல மனிதனை உருவாக்க வேண்டும்” என்ற பொறுப்புணர்வோடு இருந்தனர்.
அன்றைய அரசாங்கங்களும் அரசியல்வாதிகளும் இதை உணர்ந்திருந்தனர். பத்திரிகைகளுக்கும் ஒரு அறம் இருந்தது. சினிமாவுக்கும் ஒரு எல்லை இருந்தது. எல்லாம் கட்டுக்குள் இருந்தது. ஆனால் தற்போது ஆசிரியர்கள் மாணவர்கள் பள்ளியிலியே மது அருந்தும் அளவிற்கு உள்ளது. முன்னோர்களான நம் பாரதியை இழிவு படுத்தி கொச்சையாக பேசி வருகிறார்கள். இது தான் திராவிட கல்வி முறை. நம் வாழ்வியலை குழி தோண்டி புதைக்கும் வகையில் பாடத்திட்டங்களை வகுத்து வருகிறது;
தமிழன் என்றாலே கலாச்சாராம் கோவில்கள் திருவிழாக்கள் தான் நியாபகம் வரும் . அந்த கலாச்சாரத்தை முற்றிலுமாக சிதைத்துவிட்டார்கள். தெருவுக்கு தெரு டாஸ்மாக். குடிப்பது அன்றாட கடமை அதுதான் பெருமை என அடையாளமாக்கப்பட்டது. சினிமா, கல்வி, ஊடகம்—எதிலும் அரசின் கட்டுப்பாடு இல்லை. மக்கள் தனிப்பட்ட முறையில் தங்களை காக்க முயன்றார்களே தவிர, சமூகத்தைப் பற்றி சிந்திக்க யாரும் முன்வரவில்லை. “இது அரசின் கடமை” என்று எல்லோரும் ஒதுங்கினர். அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக எல்லாம் நாசமாகியது.
ஒருபக்கம் குடி,ஒருபக்கம் தரமற்ற கல்வி,ஒருபக்கம் வன்முறையை ஹீரோயிசமாக காட்டும் சினிமா,மற்றொரு பக்கம் பக்தியற்ற சமூக அமைப்பு—
இந்த எல்லாம் சேர்ந்து ஒரு தலைமுறையை சீரழித்தது.அரசியல் கட்சிகள் தங்கள் வாக்குவங்கிக்காக வளர்த்த சமூக பாகுபாடு, “என்ன செய்தாலும் கட்சி காப்பாற்றும்” என்ற தவறான தைரியம், அதனுடன் போதைப்பொருள் பயன்பாடு—இவை எல்லாம் கடந்த சில ஆண்டுகளில் உச்சத்தைத் தொட்டன. சீரழிந்த காவல்துறை, கட்டுப்பாடில்லாத வளர்ப்பு, டிவி–போன்–சினிமா காட்டும் தவறான ஹீரோயிசம், அரசே திறக்கும் போதை மையங்கள் நிலைமை எல்லை மீறிவிட்டது.
அந்த வட இந்திய இளைஞன்மீது விழுந்தது வெறும் வெட்டு அல்ல.அது **சீரழிந்த தமிழகத்தின் கொடூர முகம்.**இது நாளை எங்கே கொண்டு போகும் என்ற பயமே இன்றைய உண்மை.அதே போல் கிறிஸ்தவ மற்றும் , இஸ்லாமியர்கள் வாரந்தோறும் அல்லது தினசரியாகவே தங்கள் மதக் கட்டுப்பாட்டில் வளர்க்கப்படுகிறார்கள். மதப் பயிற்சியும் வழிபாடும் துணை நிற்கிறது.ஆனால் இந்துக்களிடம் அந்த கட்டுப்பாடு இல்லை. கண்டிப்பாக கோவிலுக்கு வரவேண்டும் சாமியை கும்பிட வேண்டும் என்ற நிலை இல்லை இதை பயன்படுத்தி தான் தமிழன் கலாச்சாரத்தை அழிக்க தொடங்கியது ஒரு கும்பல். ,காலை எழுந்து ஆலயம், யோகா, ஒரு தெய்வ வழிபாடு, மாலை முழுக்க விளையாட்டு—இப்படி கட்டுப்பாட்டுடன் வளர்க்கப்பட்டால்எந்த குழந்தைகளும் திசைமாற மாட்டார்கள். தமிழன் கலாச்சாரத்தை காப்போம்.. தலைமுறையை காப்போம்!
