
தமிழகத்தில் 17 வயதுடைய நான்கு சிறுவர்கள் ஓடும் ரயிலில் வட மாநிலத்தை சேர்ந்த இளைஞரை அரிவாள் காட்டி மிரட்டி ரீல்ஸ் போட்டனர். அதன் பின்னர் அந்த இளைஞருக்கு நடந்த சம்பவம் தேசிய அளவில் பரபரப்பை கிளப்பி உள்ளது. தமிழக சிறார்கள் தவறான வழிக்கு போவதற்கு லோகேஷ் கனகராஜ், வெற்றிமாறன், பா ரஞ்சித், நெல்சன் போன்றவர்களின் படங்களும் ஒரு காரணம் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அது மட்டுமில்லாமல் ஒட்டு வங்கியும் காரணம் என்கிறார்கள். திமுக அரசு எப்போதும் ஒட்டு வங்கியை வைத்து தான் அரசியல் செய்யும் கூட்டமாக ஓட்டு போடும் மக்களை வைத்து அவர்களுக்கு ஏற்றார் போல் அரசு இயந்திரம் செயல்படும். இந்த ஒட்டு வங்கி அரசியல் போக்கால் தமிழகம் சிக்கி சின்னாபின்னமாகி உள்ளது.திமுகவுக்கு சொம்பு தூக்கும் நடிகர்கள், திரை இயக்குனர்கள் ஊடகங்களால் தமிழகம் மேலும் மோசமடைந்து வருகிறது.
இந்த நிலையில் திருத்தணியில் 34 வயதான வடநாட்டு இளைஞர் சூரஜ் என்பவரை 17 வயதுடைய நான்கு புள்ளிங்கோ சிறுவர்கள் ஓடும் ரயிலில் அரிவாள் காட்டி மிரட்டி ரீல்ஸ் போட்டனர். பிறகு அவர் அங்கிருந்து இறங்கி நடந்தபோது..தனியிடத்திற்கு கடத்தி சென்று கொடூரமாக வெட்டி வீழ்த்தி.. அதையும் வீடியோ எடுத்துள்ளனர்.இது தேசிய அளவில் செய்தியாக மாறியுள்ளது. 18 வயது கூட நிரம்பாத அரை டவுசர்கள் மனதில் இவ்வளவு வன்மவெறி ஏற..சமீபகாலமாக வரும் படங்களும் முக்கிய காரணம். ரத்தம், துப்பாக்கி, கத்தி என படத்தின் போஸ்டர்களே ரத்தக்களறியாத்தான் இருக்கின்றன. படத்தில் போதை மருந்து கடத்தல், சாராய குத்துப்பாட்டு, ரத்தம் தெறிக்கும் வன்முறை, ஆபாச வார்த்தைகள் நிரம்பி வழிகின்றன. அதை பார்த்து பெண்களும் ஆபாச வார்த்தைகள், புருஷன் பொண்டாடி இணைந்து ரீல், இரட்டை அர்த்த வசனங்கள் நிறைந்த பேச்சுக்கள், என இன்ஸ்டா,முகநூலில் பதிவிட்டு பணம் சம்பாரித்து வருகிறார்கள். அவர்களை வைத்து அவார்ட் கொடுக்குகிறார்கள் திமுக ஆதரவு யூடுப் நிறுவனங்கள்,
வடக்கன் பாவங்கள், வடக்கன் சோதனைகள், வடக்கன் என பேசிய யூடுப் பிரபலங்கள் தான் இதற்கு முக்கிய காரணம். அடுத்த மாநில இளைஞர்களை பற்றி பேசிய இந்த யூடுப் தற்குறிகள் தமிழக சிறார்கள் செய்த செயலை வாயை மூடி வேடிக்கை பார்க்கிறது.பணம் சம்பாதித்தால் போதும் மற்றவர்கள் என்ன ஆனால் என்ன என்ற ரீதியில் தான் தற்போது தமிழம் நகர்ந்து கொண்டிருக்கிறது.
படத்தில் போதை மருந்து கடத்தல், சாராயம் வன்முறை, ஆபாச வார்த்தைகள் என வைத்து விட்டு டைசியில் drug free society, மயிரு free society என தத்துவம் பேசுவார்கள். பல இயக்குனர்கள், ஹீரோக்கள் இப்படியான எழவெடுத்த குப்பைகளை வேண்டுமென்றே எடுக்கிறார்கள். வில்லன் செய்யும் அனைத்தையும் இப்போது ஹீரோ செய்து வருகிறார்கள். இந்த ரத்த மற்றும் கஞ்சா சாக்கடை படங்கள் எடுத்து Gen Z எனப்படும் தவிட்டு தற்குறிகளை.. வன்முறையை கொண்டாடும் கோமாளிகள் மற்றும் கொடூர அரக்கர்களாக மாற்றி வருகிறது நீங்கள் கோடிகளில் சம்பாதிக்க இளைஞர்கள் மத்தியில் இப்படி கொடூர வன்முறை மற்றும் போதை கலாச்சார காட்சிகளை தொடர்ந்து வைத்து வருகிறது இந்த திரை போராளிகள்.
உங்கள் வீட்டில் ஒருவரை இப்படி நான்கு மைனர் சிறுவர்கள் வெட்டி சாய்த்தால் எப்படி இருக்கும்? அந்த வடமாநில இளைஞரின் குடும்பத்தார் மனநிலையை ஒருநிமிடம் யோசித்து பாருங்கள்.சில ஆயிரம் ரூபாய் சம்பளத்திற்கு பல ஆயிரம் கிலோ மீட்டர் பயணித்து.. அனாதையாக வெட்டுப்பட்டு கிடக்கிறார். இனி இவரது குடும்பத்தின் நிலையென்ன? என புளு சட்டை மாறன் கேள்வி எழுப்பியுள்ளார்.
