24 special

செந்தில் பாலாஜி வழக்கில் விஜய்க்கு வைக்கப்பட்ட செக் போடு ஆட்டத்தை தொடங்கிய அமலாக்கத்துறை மொத்தமாக மாறிய களம்

SENTHILBALAJI,VIJAY
SENTHILBALAJI,VIJAY

 தமிழக அரசியலில் புதிய அத்தியாயம் தொடங்கியிருக்கிறது. . அமலாக்கத் துறை, முன்னாள் திமுக அமைச்சர் செந்தில் பாலாஜியை வேலைக்கு பணம் பெற்ற பண மோசடி வழக்கில் விசாரிக்க அனுமதி கோரி தமிழக அரசுக்கு நேரடி கடிதம் எழுதியுள்ளது. முந்தைய திமுக ஆட்சியில் அனுமதி மறுக்கப்பட்ட அதே வழக்கு, ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு மீண்டும் எழுந்திருக்கிறது. இது த.வெ.க. அரசுக்கு முதல் உண்மையான சோதனை. ஆனால் முதல்வர் விஜய் தற்போது வரை முழு மௌனம் காத்து வருகிறார். 


தேர்தல் அறிக்கையின் 87-வது பக்கத்தில் “லஞ்சத்துக்கு எதிராக ஜீரோ சகிப்புத் தன்மை” என்று பெரிதாக அறிவித்தவர், இன்று தன் கூட்டணியாளரின் முன்னாள் அமைச்சர் மீதான ஊழல் வழக்கில் கண்களை மூடிக்கொண்டு அமைதியாக இருக்கிறார். ஸ்டாலினும் உதயநிதியும் பகிரங்கமாக “திமுக தயவில் தான் விஜய் ஆட்சி நடத்துகிறார்” என்று சொன்னபோது கூட அவர் ஒரு வார்த்தை பேசவில்லை. “மாற்றம்” என்ற கோஷத்தை முழங்கி, “பாட்டிலுக்கு பத்து ரூபாய்” என்று மக்களை உணர்ச்சிவசப்படுத்தி முதல்வர் நாற்காலியில் அமர்ந்த விஜய், இப்போது அதே ஊழல் அரசியலுக்கு மௌனம் காப்பது  தன் சொந்த பிம்பத்தைத் தானே சிதைத்துக் கொள்கிறார். லட்சக்கணக்கான இளைஞர்கள் அவரை நம்பி வாக்களித்தனர். அவர்களுக்கு என்ன சொல்ல போகிறார் விஜய் 

அரசியல் அடிமைத்தனத்தின் அப்பட்டமான வெளிப்பாடு என அரசியல் கட்சிகள்  கூறுகிறார்கள். . திமுகவின் ஆதரவு இல்லையென்றால் த.வெ.க. ஆட்சி நடக்காது  இதனால் தான் மௌனம் காக்கிறார். . முதல்வர் என்ற பதவியில் இருந்தும், தன் கூட்டணிக் கட்சியின் முன்னாள் அமைச்சரை விசாரிக்க அனுமதி கொடுக்கக்கூட தைரியமில்லாத ஒரு தலைவர் எப்படி “மாற்றத்தின் முகம்” ஆக முடியும்? இது த.வெ.க.வை திமுகவின் பி-டீம் என்ற பட்டத்திலிருந்து மீட்க முடியாத நிலைக்கு தள்ளியிருக்கிறது.

இந்த வழக்கு திமுக மட்டுமல்ல விஜயின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்குகிறது. அனுமதி அளித்தால் திமுக கூட்டணி உடையும். அனுமதி மறுத்தால் “ஊழலுக்கு துணை போகிறார்” என்ற முத்திரை குத்தப்படுவார். இரு பக்கமும் சிக்கிய நிலையில் அவர் தேர்ந்தெடுத்திருப்பது மௌனத்தை. ஆனால் அரசியலில் மௌனம் என்பது பலவீனத்தின் அடையாளம். “தீர்மானமற்ற தலைவர்” என்ற பிம்பம் அவரைச் சுற்றி ஏற்கெனவே உருவாகத் தொடங்கியிருக்கிறது. என அரசியல் விமர்சகர்கள் கூற ஆரம்பித்து விட்டார்கள் : இன்னும் ஒரிரு நாட்களில் முடிவு வரும் என்கிறது கோட்டை வட்டாரம் . . மக்களை உணர்ச்சிவசப்படுத்தி ஆட்சிக்கு வந்த ஒரு நடிகரின் முதல் உண்மையான அரசியல் சோதனையில்  அவர் வெற்றி பெறுவாரா இல்லை தோல்வியை சந்திப்பாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்!