
ஜம்மு காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலில் 27 அப்பாவிகளின் உயிர்கள் பறிபோய் உள்ளது. இதற்கு பதிலடி தர இந்தியா முழுவீச்சில் தயாராகி வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி முக்கிய ஆலோசனைகளை மேற்கொண்டுள்ள நிலையில் பாகிஸ்தான் மீது இந்தியா எப்படி பதிலடி கொடுக்கும்? அந்த தாக்குதல்களில் இலக்கு என்ன? என்பது பற்றிய முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து ஒவ்வொரு துறையிலும் தனது பலத்தை அதிகரிப்பதில் இந்தியா தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது. வாகா எல்லை மூடல், பாகிஸ்தானியர்கள் வெளியேற்றம், சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்து என அடுத்தடுத்து இந்தியா பதிலடி கொடுத்தது.இதன் கீழ், இன்று கடற்படை ஐஎன்எஸ் சூரத்திலிருந்து உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அழிவு ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்தது. இந்திய கடற்பரப்பில் ஏவுகணை சோதனையை இந்தியா மேற்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஐ.என்.எஸ். சூரத் போர்க்கப்பலில் இருந்து இந்திய கடற்படை நடத்திய ஏவுகணை சோதனை வெற்றி பெற்றுள்ளது. போர்க்கப்பலில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணை, வெற்றிகரமாக இலக்கை தாக்கி அழிக்கும் ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக நடத்தியுள்ளது.இந்த ஏவுகணை தரையில் இருந்தும் கூட ஆகாயத்தை நோக்கி தாக்கும் திறன் கொண்டது. மேலும் , இந்த சோதனை, உள்நாட்டு போர்க்கப்பல் வடிவமைப்பு, மேம்பாடு மற்றும் செயல்பாடுகளில் இந்திய கடற்படையின் வளர்ந்து வரும் திறனை பிரதிபலிக்கிறது என்று கடற்படை தெரிவித்துள்ளது.
அதுமட்டுமில்லாமல் பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கையை மத்திய அரசு தீவிரமாக்கி உள்ளது. ஜம்மு காஷ்மீர் எல்லையில் முப்படைகளும் தயார் நிலையில் இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் ஜம்மு காஷ்மீரில் 26 அப்பாவி உயிர்களை கொன்ற பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகளுக்கு எதிராக இந்தியா பதிலடி கொடுக்க தயாராகி வருகிறது. பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்க இந்தியாவின் கையில் மொத்தம் 4 பிளான்கள் உள்ளன. இதில் ஒன்று அல்லது 2 ஆப்ஷனை இந்தியா கையில் எடுத்து பாகிஸ்தானை கதறவிடலாம்.என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதன்படி இந்தியாவின் கையில் இருக்கும் முதல் ஆப்ஷன் ஏர் ஸ்டிரைக். அதாவது வான்வெளி தாக்குதல். பாகிஸ்தான் மீது ஏற்கனவே இந்தியா இந்த வான்வெளி தாக்குதலை நடத்தி உள்ளது. கடந்த 2019ம் ஆண்டில் பாகிஸ்தான் உள்ளே புகுந்து நம் போர் விமானங்கள் தாக்கின. அதுபோல் இந்த முறையும் நம் விமானப்படை பாகிஸ்தானுக்கு எதிராக களமிறக்கப்படலாம். மிரஜ் 2000 (Miraj 2000) அல்லது சு-30 எம்கேஐ (Su-30 MKI)ரக போர் விமானங்கள் மூலம் பாகிஸ்தானை தாக்கலாம். இந்த விமானங்களால் அதிக எடையை சுமக்க முடியும் என்பதால் இந்த விமானங்களை தாக்குதலுக்கு இந்தியா பயன்படுத்தலாம்.
2016 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 18 ம் தேி காஷ்மீரின் பாராமுல்லா மாவட்டத்தில் உரி அருகே உள்ள ராணுவ பிரிகேட் தலைமையகத்தின் மீது ஜெய்ஷ் இ முகமது என்ற பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் தாக்குதல் நடத்தினர்.இதற்குபதிலடியாக நம் நாடு தெற்கு காஷ்மீரில் சிறப்பு படையினர் களமிறக்கப்பட்டனர். எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே சிறப்பு படையை சேர்ந்த வீரர்கள் நிறுத்தப்பட்டன.நம் உளவுத்துறை ஏற்கனவே அபு ஹம்சா, சைஃபுல்லா உள்ளிட்ட பயங்கரவாதிகளின் விபரங்களை சேகரித்து வைத்துள்ளது. இவர்கள் இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் சிறிது தூரத்தில் உள்ள கஹுதா, லீபாவையொட்டிய பகுதிகளில் செயல்பட்டு வருகின்றனர். இவர்களை எல்லை சிறப்பு படை வீரர்கள் போட்டு தள்ளலாம். இது நம் நாட்டின் கையில் இருக்கும் 2வது ஆப்ஷன்.
3வது ஆப்ஷன் என்னவென்றால் ஏவுகணை அல்லது ட்ரோன் தாக்குதல். பாகிஸ்தானுக்குள் நுழைந்து விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தினால் கூட நம் நாட்டின் பைலட்டுகளுக்கு ஆபத்து இருக்கும். ஆனால் ட்ரோன், ஏவுகணை தாக்குதல்கள் என்பது நம் நாட்டின் வீரர்களுக்கு எந்த வகையிலும் பாதிப்பை ஏற்படுத்தாது. அதுமட்டுமின்றி நம் நாட்டின் எல்லையில் இருந்தே ஏவுகணை, ட்ரோன்களை பாகிஸ்தானுக்குள் அனுப்பி இலக்குகளை துல்லியமாக தாக்கி அழிக்க முடியும். குறிப்பாக நம் நாட்டிடம் பிரமோஸ் குரூஸ் ஏவுகணை உள்பட பல ஏவுகணைகள் உள்ளன. இந்த ஏவுகணைகளை இடைமறிக்கும் தொழில்நுட்பம் பாகிஸ்தானிடம் இல்லை. இதனால் கதறி வருகிறது!