
தமிழ்நாட்டில் 2026 சட்டமன்றத்தேர்தல் பணிகள் வேகமெடுத்து வருகின்றன.நடிகர் விஜய் அரசியலுக்கு வந்த பிறகு தமிழகத்தின்தமிழக மீடியாக்கள் அவரை சுற்றியே இருந்துவந்தது. விஜயின் அடுத்தடுத்த மாநாடுகள், மக்கள் சந்திப்பு என்று தேர்தலை நோக்கி நகர்ந்து கொண்டு இருந்தார். இந்நிலையில் கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு பிறகு அனைத்திலும் தற்போது தொய்வு ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்திற்கும் பிறகும் மக்கள் மத்தியில் அவரது கட்சியின் செல்வாக்கு சரியவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது. இது திமுகவுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
திமுக தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.'உடன்பிறப்பே வா' நிகழ்ச்சியின் மூலம் அறிவாலயத்தில் சட்டசபை தொகுதி நிர்வாகிகளை நேருக்கு நேர் சந்தித்து ஆலோசனைகளை வழங்கி வருகிறார் முதல்வர் ஸ்டாலின். இந்த நிலையில் முதல்வரின் டேபிளுக்கு ஒரு ரிப்போர்ட் சென்றுள்ளது.
இதுகுறித்து அறிவாலய வட்டாரத்தினர் கூறும்போது, கட்சியின் மாவட்டச் செயலாளர்களும், எம்எல்ஏக்களும், தொகுதி பொறுப்பாளர்களும் மக்களிடம் எந்த நற்பெயரை வாங்கவில்லை. இதனால் திமுக மீதான ஈர்ப்பு பொதுமக்களுக்கு குறைந்துவிட்டதாக பல்வேறு கருத்துக்கணிப்புகள் மூலம் திமுக தலைமை கண்டறிந்துள்ளது.
அதேபோல கட்சித் தொண்டர்களையும் பொதுமக்களையும் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அரவணைத்து செல்லவில்லை என்ற குற்றச்சாட்டு தமிழகம் முழுதும் உள்ளது. திமுக ஆட்சியின் மீது ஆண்கள், பெண்கள், இளைஞர்கள் ஆகியோரின் ஆதரவு எப்படி உள்ளது? என்ற சர்வே எடுக்கப்பட்டுள்ளது அதில் 90%ஆட்சிக்கு எதிரான மனநிலையில் தான் உள்ளார்களாம். இதனால் அதிர்ச்சியடைந்த திமுக தலைமை மற்றற்றோரு யுக்தியை கையில் எடுத்துள்ளார்களாம்.
திமுகவுக்கு ஆதரவு அலை என பணம் கொடுத்து என செய்தி சேனல்களில் ஒளிபரப்ப திமுகவின் பி.ஆர் டீம் பேசி வருகிறதாம். குறிப்பாக அனைத்து சேனல் எடிட்டர்களிடையே பேச்சுவார்த்தையை தொடங்கி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது.
இதற்கிடையே தமிழக அரசியலில் ஒரு புதிய பரபரப்பு உருவாகியுள்ளது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன் ஆந்திர மாநிலத்தின் துணை முதல்வர், ஜனசேனா கட்சியின் தலைவர், நடிகர் என பன்முகம் கொண்ட பவன் கல்யாண், நடிகரும், தவெக தலைவருமான விஜய்யுடன் தொலைபேசியில் பேசினார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்த உரையாடலில் பல முக்கியமான அரசியல் ஆலோசனைகள் பரிமாறப்பட்டதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் பவன் கல்யாண் விஜய்யிடம், “திமுகவை தனித்து நின்று வீழ்த்த முடியாது. ஆனால் சரியான நேரத்தில், சரியான கூட்டணியில் நின்றால், தமிழகத்தில் திமுக. ஆட்சியை மாற்றி விடலாம். நீண்டகால அரசியலை நினைத்தால் நிதானமாக முடிவெடுங்கள். உங்களுக்கும் வயது இருக்கிறது. இப்போதே அடித்தளத்தை வலுப்படுத்துங்கள்,” என்று ஆலோசனை வழங்கியதாகக் கூறப்படுகிறது.
பாஜக தற்போது பவன் கல்யாணின் திரைத்துறை செல்வாக்கை பயன்படுத்தி, தவெகவை என்டிஏ கூட்டணிக்குள் கொண்டு வர முயற்சிக்கிறது. ஒருவேளை விஜய் அந்த கூட்டணியில் இணைந்தால், பவன் கல்யாண் தான் அதன் முக்கிய பாலமாக செயல்படுவார் எனவும் அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. இதனால், பவன் கல்யாணின் ஒவ்வொரு நகர்வும் தற்போது தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.
இந்த விஷயம் முதல்வர் டேபிளுக்கு சென்றுள்ளதை தொடர்ந்து அதிர்ச்சியில் உறைந்துள்ளது திமுக தரப்பு. இதனை தொடர்ந்து மீடியாக்கள் மூலம் திமுக தரப்புக்கு கொஞ்சம் ஓவர் பில்டப் கொடுத்து அதிமுக பாஜக விஜய் கூட்டணி வைத்தாலும் திமுக 50%வாக்குகள் பெரும் என்ற கணிப்பு வெளியானது. விஜய் தனியாக நின்றால் 23% வாக்குகள் பபெறும் எனவும் விஜயை உசுப்பேத்தி தேசிய ஜனநாயக கூட்டணியில் சேரவிடாமல் பிளான் போட்டுள்ளதாம் திமுக தரப்பு.