24 special

வெறி பிடிச்சுப்போய் கிடக்குதுங்க ! வாயை விட்ட செல்வப்பெருந்தகை! திமுக கூட்டணி முறிவா? கடும் அதிர்ச்சியில் அறிவாலயம்

MKSTALIN,SELVAPERUNTHAGAI
MKSTALIN,SELVAPERUNTHAGAI

சரிவை நோக்கி சென்ற காங்கிரஸ், இந்த தேர்தலில் மீள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. கடந்த காலங்களில் வேறு சாய்ஸ் இல்லாததன் காரணமாக திமுக மீது சவாரி செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானதாகவும், ஆனால் இந்த முறை தவெக என்னும் புதிய வரவு வந்திருக்கிறது.ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில்பங்கு என திடீர் உரிமை குரல் எழுப்பு இருக்கும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் கே.எஸ்.அழகிரி ‘‘சக்கையாக பார்க்கப்படுவது தான் காங்கிரஸ், என்றாலும் சாறை சுவைப்பது என்னவோ திமுகதான்’’ என பேசி இருப்பது அரசியல் களத்தை உற்றுநோக்க வைத்தது


தேர்தலுக்கான காலம் நெருங்கிக் கொண்டு வரும் நிலையில் கூட்டணி பேரத்திற்காக குரல் எழுப்புகிறதா காங்கிரஸ்? அல்லது தவெக கூட்டணிக்காக கதவை திறக்க முடிவு செய்திருக்கிறதா? சாறை அவர்கள் குடிப்பதாகவும், சக்கையை நாங்கள் பார்ப்பதுமாக திமுகவை நம்பி தமிழக அரசியல் கட்சிகள் கூட்டணிக்கு செல்கிறதோ? இல்லையோ? இருக்கின்ற இடத்தில் சீட் பேரத்தை உயர்த்த தவெகவை ஊறுகாய் போல தொட்டுக் கொள்வது தான் இன்றைய அரசியலில் எதார்த்தம் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

 இந்த நிலையில் தான் தற்போது காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் தலைவர் கே.எஸ்.அழகிரி போகிற போக்கில் கருத்தை கூறிவிட்டு தேன் கூட்டில் கல்லெறிந்து இருக்கிறார். தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்போம் என உறுதியாகச் சொன்ன கே.எஸ்.அழகிரி, ‘‘கரும்புச்சாறை திமுக சுவைப்பதும், சக்கையை காங்கிரஸ் பார்ப்பதும் வழக்கமாக உள்ளது’’ என ஆதங்கத்தை கொட்டி தீர்த்துள்ளார். குறிப்பாக தேர்தல் நெருங்கும் நேரத்தில் திமுகவுக்கு நெருக்கடி தரும் வகையில் பேசி இருக்கிறார் அழகிரி. இதே கருத்தைத்தான் கடந்த ஜூன் மாதத்தில் காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் ராஜேஷ் தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதன் காரணமாக அணைகள், ஏரிகள், குளங்கள் என நீர்நிலைகள் நிறைந்து வருகின்றன. செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் நீரின் வரத்து அதிகரித்துள்ளது.நீர்மட்டம் உயருவதால் பாதுகாப்பு கருதி, செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து விநாடிக்கு 500 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.இதனையடுத்து செம்பரப்பாக்கம் ஏரியை பார்வையிட்ட செல்வப்பெருந்தகை கூறியதாவது:

ஒரு மக்கள் பிரதிநிதியாக சேர்மனுக்கு தெரியல மந்திரிக்கு தெரியல. அமைச்சருக்கு தெரியல.எம்எல்ஏவுக்கு தெரியல. எம்பிக்கு தெரியல. நீங்களே திறந்து விடுறீங்கனா எப்படி சார் அது. இந்த துறை வந்து அரசு துறை தானே? நீர்வளத்துறை அரசுத்துறைதானே? மக்கள் பிரதிநிதியிடம் ஒரு வார்த்தை சொல்லலாம். மரபு என்ன?காலம் காலமாக எப்பவுமே சொல்வீங்க நானும் 03 வருஷமா திறந்து விட்டுருக்கேன். போன வருஷம் சொல்லாம கொள்ளாம திறந்துவிட்டுட்டீங்க. தப்பு கிடையாது. திறங்க. நீங்களே ஆட்சியாளர்களாக, நீங்களே மக்கள் பிரதிநிதிகளாக மாறுங்கள். மக்களுக்கு நல்லது செய்யுங்கள். 

மேலும் பூஜை போடுறீங்க. தேங்காய் உடைக்கிறீங்க. மக்கள் பிரதிநிதிக்கு ஒரு சேர்மன் இருக்கிறார். ஒன்றிய செயலாளர் இருக்கிறார். எம்பி எம்எல்ஏ இருக்கிறார்கள். ஒரு வார்த்தை சொன்னால் என்ன கெட்டுப்போயிடும் உங்களுக்கு. அவ்வளவு 'பிரஸ்டீஜ்'. இவங்கல்லாம் திறக்கக்கூடாது தண்ணீய. இவங்கெல்லாம் தொடக்கூடாது. வெறி பிடிச்சுப்போய் கிடக்குதுங்க இந்தத்துறை எனக்கூறிவிட்டு கோபமாக சென்றார்.  யாரை வெறி பிடிச்சுப்போய் கிடக்குதுங்க என செல்வப்பெருந்தகை கூறினார் என்பது தற்போது பேசுபொருளாகி உள்ளது.