24 special

சிக்கியது ஆதாரம்! ராகுல் காந்தி "பிளான்" சுக்கு நூறாக நொறுக்கிய மத்திய அரசு.! ஸ்டாலின் முதல் மொத்தமாக சிக்கிய கூட்டம் !

MKSTALIN,RAHULGANDHI
MKSTALIN,RAHULGANDHI

ஒரு பொய்யை திரும்பத் திரும்ப சொன்னால், ஒரு நாள் அப்பொய்யை மக்கள் உண்மை என்று நம்பி விடுவர் என்ற அசாத்திய நம்பிக்கை கொண்டவராக இருக்கிறார், காங்கிரஸ்  எம்.பி.ராகுல் காந்தி.  முன்னாள் காங்கிரஸ்  - எம்.எல்.ஏ.,வும், மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் முன்னாள் கர்நாடக தலைவருமான இப்ராஹிம், '2019ல் நடந்த கர்நாடக சட்டசபை தேர்தலில், பாதாமி தொகுதியில் சித்தராமையா தோற்கும் நிலையில் இருந்தார். அப்போது, நானும் மற்றும் சிலரும் சேர்ந்து, 3,000 ஓட்டுகளை விலைக்கு வாங்கினோம். அந்த தேர்தலில், 1,500 ஓட்டுகள் வித்தியாசத்தில் தான் சித்தராமையா வெற்றி பெற்றார். நாங்கள் இல்லாவிட்டால், அவர் வெற்றி பெற்றிருக்கவே முடியாது' என்று ஆணித்தரமாக கூறியுள்ளார்.


இதுமட்டுமல்ல கர்நாடகாவில் காங்கிரஸ்  கட்சியைச் சேர்ந்த கூட்டுறவுத் துறை அமைச்சர் ராஜண்ணா, ஓட்டு திருட்டு குறித்து ராகுல் கூறியுள்ளதற்கு மறுப்பு தெரிவித்து, 'பெங்களூரு மஹாதேவபுரா சட்டசபை தொகுதியில் ஓட்டு திருட்டு நடந்தது உண்மை தான்; லோக்சபா தேர்தலில் வாக்காளர் பட்டியல் தயார் செய்யப்பட்டது எங்கள் காங்கிரஸ் ஆட்சியில் தான் என்று கூறியுள்ளார்.

இன்று ஓட்டு திருட்டு என்று அலறும் 'ராகுல்' காங்கிரசார், அப்போது, கண்ணை மூடிக்கொண்டு இருந்தனரா?காங்கிரசின் தில்லாலங்கடி வேலைகளை, 'பளிச்'சென்று எடுத்துச் சொன்ன காரணத்திற்காக, ராஜண்ணாவை, கர்நாடக அமைச்சரவையில் இருந்து டிஸ்மிஸ் செய்துள்ளனர். இந்நிலையில், உலகிற்கே, 'திருமங்கலம்' பார்முலாவை அறிமுகப்படுத்திய தி.மு.க., ராகுலின் பொய் பேச்சுக்கு ஜால்ரா தட்டுகிறது. ஓட்டு திருட்டு குறித்து தி.மு.க., பேசலாமா?

குறிப்பாக 2021 சட்டமன்ற தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் 9 ஆயிரத்து 133 போலி வாக்காளர்கள் வாக்களித்துள்ளதாக பாஜக எம்பி அனுராக் தாக்கூர் குற்றஞ்சாட்டியுள்ளார்.இதுதொடர்பாக டெல்லியில் உள்ள பாஜக தேசிய தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், முதலமைச்சர் ஸ்டாலின் போட்டியிட்டு வென்ற கொளத்தூர் தொகுதியில் 19 ஆயிரத்து 476 வாக்குகள் சந்தேகத்திற்கு இடமானவை எனத் தெரிவித்தார்.

கொளத்தூரில் 9 ஆயிரத்து 133 வாக்குகள் போலி வாக்குகள் என்றும், ஒரே முகவரியில் 30 வாக்காளர்கள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் குற்றஞ்சாட்டிய அனுராக் தாக்கூர், ஒரே வாக்குச்சாவடியில் ஒருவர் 3 முறை வாக்களித்திருப்பது தவறுதலாக நடந்ததா? அல்லது திட்டமிட்டு நடத்தப்பட்டதா? எனக் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் அவர், “போலி வாக்காளர்களை காப்பதற்காகவே மு.க.ஸ்டாலின் , ராகுல்காந்தி , சோனியாகாந்தி , அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோர் இந்திய தேர்தல் ஆணையத்தின் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தை எதிர்க்கிறார்கள்” என குற்றம் சாட்டினார். அதுமட்டுமியில்லாமல்  காங்கிரஸ் கட்சியின் சோனியா காந்தி இந்திய குடியுரிமை பெறுவதற்கு முன்பே நம் நாட்டில் வாக்குரிமை பெற்றுள்ளதாக பாஜகவின் முன்னாள் மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் கூறியுள்ளார். மேலும் இதுதொடர்பாக பாஜகவின் ஐடி விங்க் பொறுப்பாளர் அமித் மாளவியா தனது எக்ஸ் பக்கத்தில் ஆதாரம்  ஒன்றை வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக அமித் மாளவியா வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:

1980ம் ஆண்டு சோனியா காந்தியின் பெயர் இந்திய வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. இத்தாலி குடியுரிமை பெற்றிருந்த அவர் இந்திய குடியுரிமையை பெறுவதற்கு 3 ஆண்டுகளுக்கு முன்பே வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்த்துள்ளார். இந்தப் பதிவு சட்டத்தை தெளிவாக மீறுகிறது. இந்திய குடிமகனாக இருக்க வேண்டிய ஒருவர் வாக்காளராகப் பதிவு செய்யப்பட வேண்டும். ஆனால் இங்கு அப்படி நடக்கவில்லை. அதன்பிறகு 1982ம் ஆண்டு எழுந்த போராட்டத்தைத் தொடர்ந்து அவரது பெயர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது.

அடிப்படையான குடியுரிமை பெறாமல் சோனியா காந்தியின் பெயர் 2 முறை வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. முதலில் 1980ல் இத்தாலி குடிமகளாகவும், அதன்பிறகு 1983ல் சட்டப்பூர்வமாக இந்திய குடியுரிமை பெறுவதற்கு சில மாதங்களுக்கு முன்பும் இது நடந்துள்ளது. இது அப்பட்டமான தேர்தல் முறைகேடு இல்லையா?'' என குற்றம்சாட்டி உள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.