24 special

திமுக கோட்டை சரிய காங்கிரஸ் எடுத்த முடிவு!

MKSTALIN, RAHUL GHANDHI
MKSTALIN, RAHUL GHANDHI

கூட்டணி அறிவிப்பு வேட்பாளர்கள் அறிவிப்பு சின்னம் ஒதுக்கீடு வேப்பமுனு தாக்கல் வேட்பு மனு பரிசீலை மற்றும் பிரச்சாரம் என 2024 லோக்சபா தேர்தல் களம் தற்போது சூடு பறக்க உள்ளது! பிரச்சாரத்திற்கு இன்னும் 18 நாட்கள் கால அவகாசமே உள்ளதால் ஒவ்வொரு கட்சியும் தன் வேட்பாளர்கள் மற்றும் தன் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் அனைவரும் பிரச்சாரத்தில் ஈடுபடுவதற்கான திட்டங்களை வகுத்து ஒவ்வொரு நாளும் காலை மற்றும் மாலை வேலைகளில் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. ஆனால் இதில் சில கட்சிகள் மட்டும் எந்த சின்னம் என்பது தெரியாமல் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வந்ததும் குறிப்பிடத்தக்கது. மேலும் ஒரு கட்சி வேட்பு மனு தாக்களின் கடைசி நாள் வரைக்கும் ஒரு தொகுதிக்கான வேட்பாளர் பெயரை அறிவிக்காமல் இருந்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.  


அதாவது பெரிதும் நம்பிக்கையை சுமந்து கொண்டிருந்த இண்டி கூட்டணி தற்போது விரிசலை கண்டிருப்பதும் பிரதமராவதற்கு அந்த கூட்டணியில் இருந்து யார் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என்ற முடிவே கூட்டணியில் ஒருமனதான தீர்மானமாக முடிவெடுக்கப்படாத நிலையில் ஒரு பக்கம் தவித்து வருகிறது, ஆனால் மறுபக்கம் பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதமராக ஆட்சி கட்டிலில் அமர்வதற்கான சூழ்நிலைகளும் கள நிலவரங்களும் பாஜகவிற்கு பச்சைக்கொடி காட்டும் வகையில் நிலவி வருகிறது, இதனால் இண்டி கூட்டணி அனைத்து பாதக விளைவுகளை சந்தித்து கொண்டிருக்கிறது. அதனால் இந்த நாடாளுமன்றத்தில் தேர்தலில் பெருவாரியான இடங்களில் இண்டி கூட்டணியின் வேட்பாளர்கள் வெற்றி பெற்று அதிக எம்பிகளை பெற வேண்டும் என்பதை இண்டி கூட்டணியின் தலைமையும் கூட்டணியின் பிற கட்சிகளும் தங்கள் நோக்கமாக கொண்டு தீவிர திட்டங்களை தீட்டி அதனை செயல்படுத்தி வருகிறது. 

ஆனால் இந்த நோக்கத்திற்கே பெரும் பங்கம் விளைவிக்கும் வகையிலான ஒரு செயலை காங்கிரஸ் செய்துள்ளது. இதனால் திமுகவே பெரும் அதிருப்தியில் திளைத்துள்ளது. அதாவது, மயிலாடுதுறை தொகுதியில் அதிமுக சார்பில் அதிமுகவின் மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் மகன் பாபு போட்டியிடுகிறார். அதே சமயத்தில், பாரதிய ஜனதா கூட்டணியில் பாமகவை சேர்ந்த ம.க. ஸ்டாலினும் நாம் தமிழர் கட்சி சார்பில் மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் காளியம்மாளும் போட்டியிடுகிறார்கள் இந்த மூன்று பேரும் தங்களது பிரச்சாரங்களை மயிலாடுதுறையில் தீவிரமாக ஆரம்பித்த போது கூட  திமுக கூட்டணியில் காங்கிரஸ் தரப்பில் வேட்பாளர் பெயர் அறிவிக்கப்படாமல் இருந்தது. அதோடு இந்த தொகுதிக்கு ராகுல் காந்தியின் நெருங்கிய நண்பராக உள்ள பிரவீன் சக்கரவர்த்திக்கு தான் வழங்கப்படும் என்றும் தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் திருச்சியின் தற்போதைய எம்பிக்கு திருச்சி தொகுதி ஒதுக்கப்படாததால் அவருக்கு மயிலாடுதுறை ஒதுக்கப்படலாம் என்றும் மூன்று முறை மயிலாடுதுறை எம்பி ஆகவும் மத்திய அமைச்சராகவும் பதவியில் இருந்த மணிசங்கர் அய்யர் கடைசியாக தனக்கு ஒரு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் காங்கிரஸ் தலைமையிடம் முன்வைத்து வந்தார் அதனால் இந்த மூன்று பேரில் யாராவது ஒருவருக்கு தான் மயிலாடுதுறை ஒதுக்கப்படும் என்ற பேச்சுகள் அரசியல் வட்டாரம் முழுவதும் பேசப்பட்டது. 

ஆனால் இந்த மூவரில் யாரையும் தேர்ந்தெடுக்காமல் தொகுதிக்கு எந்த ஒரு சம்பந்தமும் இல்லாத கடலூரில் சீட்டு கேட்டுக் கொண்டிருந்த சுதா ராமகிருஷ்ணனுக்கு மயிலாடுதுறையில் சீட்டு வழங்கி மயிலாடுதுறையில் நாடாளுமன்ற வேட்பாளராக காங்கிரஸ் சுதா ராமகிருஷ்ணனை அறிவித்துள்ளது காங்கிரஸின் கூட்டணி கட்சிகள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இந்த அறிவிப்பு மற்ற கட்சியினர்களிடையேயும் அரசியல் விமர்சகர்களாலும் கேலி கிண்டலாக பார்க்கப்படுகிறது! ஏனென்றால், கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் தமிழக மகிலா காங்கிரஸ் கட்சியின் தலைவராக பொறுப்பு வகித்து வரும் இவர் ராகுல் காந்தியின் பாரத் ஜூடோ யாத்திரையில் ராகுல் காந்தியுடன் சென்றுள்ளார் இருப்பினும் இலங்கையில் பொருளாதாரப் பிரச்சனையும் அரசியல் பிரச்சினையும் தலைவிரித்து ஆடிய பொழுது ஈழ மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து காங்கிரஸ் கட்சிக்கு எதிராக குரல் எழுப்பி சோனியா காந்தியின் உருவப் புகைப்படத்தை எரிக்கும் போராட்டத்திலும் பங்கேற்றுள்ளார் என்று கூறப்படுகிறது! இப்படி காங்கிரஸ் எதிர்ப்பு மற்றும் ஆதரவு என்ற நிலைப்பாட்டில் இருந்து வந்து ஒருவருக்கு தொகுதிக்கு சம்பந்தமே இல்லாத ஒருவருக்கு மயிலாடுதுறையில் சீட் வழங்கி காங்கிரஸ் அறிவித்துள்ளது. அதுமட்டுமின்றி மயிலாடுதுறை திமுகவின் கோட்டையாக இருந்து வருகிற நிலையில் தற்போது மயிலாடுதுறையில் திமுகவிற்கு சாதகமான முடிவு கிடைக்குமா? என்பதே கேள்விக்குறியாக மாறி உள்ளது!