Politics

"மர்ம நபர்கள்" வெறிச்செயல் டாக்டர் கவலைக்கிடம்..!! இந்திய மருத்துவ கவுன்சில் எச்ச ரிக்கை...!!

"மர்ம நபர்கள்" வெறிச்செயல் டாக்டர் கவலைக்கிடம்..!! இந்திய மருத்துவ கவுன்சில் எச்ச ரிக்கை...!!

"மர்ம நபர்கள்" நடத்திய கொடூரத்தாக்குதலில் டாக்டர் ஒருவர் படுகாயமடைந்தார்.அஸ்ஸாம் ஹோஜாய் மாவட்டம் ஓடலியில் அரசு கோவிட் பராமரிப்பு மையம் செயல்பட்டு வருகிறது. அங்கு பணிபுரியும் மருத்துவர் ஒருவரை முப்பதுக்கும் மேற்பட்ட "மர்மநபர்கள்" தாக்கிய வீடியோ நேற்று சமூக வலைதளத்தில் வைரலாகியது.


கோவிட் கேர் சென்டரில் கொரானா பாதிக்கப்பட்ட ஒரு நோயாளிக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் இறந்தார்.

அதனால் கோபமுற்ற நோயாளியின் உறவினர்களான "மர்மநபர்கள்" அதே மருத்துவமனையை சார்ந்த டாக்டர்.சியூஜ் குமார் சேனாதிபதியை கையில் கிடைத்த பொருட்களை ஆயுதமாக்கியும், கால்களால் உதைத்தும் கொலை வெறித்தாக்குதல் நடத்தினர்.

மருத்துவமனை சிசிடிவியில் பதிவான காட்சிகளை டாக்டர் தேப்நாத் தனது ட்விட்டர் பக்கத்தில் அஸ்ஸாம் முதலமைச்சரை டேக் செய்து பதிவிட்டார்.அடுத்த சில மணிநேரங்களிலேயே மேல் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு 24 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதுகுறித்து அஸ்ஸாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வாஸ் சர்மா தனது அறிக்கையில்"முன்களப் பணியாளர்களான மருத்துவர் மீது நடத்தப்பட்ட இந்த கொலைவெறி தாக்குதல் மிகவும் கண்டனத்துக்குறியது.குற்றவாளிகள் விரைந்து கைது செய்யப்படுவார்கள்.அவர்கள் மீது  விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும். இந்த  விசாரணையை தனிப்பட்ட முறையில் உன்னிப்பாக கண்காணித்து வருகிறேன் "கூறினார்.

ஓடலி மாடல் மருத்துவமனையை பார்வையிட்ட மயூர்பஞ்ச் கலெக்டர் பாங்கிசோல்  மருத்துவமனையை பரிசோதித்தார்,அலட்சியம் என்ற குற்றச்சாட்டை நிராகரித்தார்.

"நோயாளியின் உடல்நிலை மோசமாக இருப்பதாக நோயாளியின் உறவினர்கள் புகார் கூறினர். நோயாளியைப் பார்த்தபோது, ​​அவர் ஏற்கனவே இறந்துவிட்டதை கண்டேன். நோயாளியின் உறவினர்களிடம் தெரிவித்த  பின்னர் உறவினர்கள் உடனடியாக மருத்துவமனையில் இருந்த தளவாடங்களை சூறையாடி என்னைத் தாக்கினர்" என்று டாக்டர் சியூஜ் குமார் சேனாபதி கூறினார்.

அஸ்ஸாம் சட்டமன்ற துணை சபாநாயகர் டாக்டர் நுமல் மோமின் ஆஜ்தக் / இந்தியா டுடே டிவியிடம், "டாக்டர் சியூஜ் குமார் சேனாபதி தனது எம்பிபிஎஸ் படிப்பை முடித்த பின்னர் கிராமப்புறத்தில் இவருக்கு இதுவே முதல் நாள்  பணியாகும்"என்று கூறினார்.

இந்த சம்பவத்தை கவனத்தில் கொண்டு,முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா, "ஒரு மருத்துவர் பதவிக்கு எதிரான மிருகத்தனம், மிகவும் கண்டிக்கத்தக்கது. பக்கச்சார்பற்ற விசாரணை மற்றும் அந்த குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நான் கோருகிறேன்" என்று ட்வீட் செய்துள்ளார்.இதுவரை இந்த தாக்குதல் தொடர்பாக மர்மநபர்கள் 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அஸ்ஸாம் மாநில IMA தனது ட்விட்டரில் "எங்கள் முன்னணி தொழிலாளர்கள் மீதான இத்தகைய காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்கள் எங்கள் நிர்வாகத்தால் பொறுத்துக் கொள்ளப்படாது. குற்றவாளிகளுக்கு தண்டனை உறுதி செய்யுங்கள்" என்று ட்வீட் செய்துள்ளது.

தற்போது தாக்குதல் நடத்திய மேலும் 8 நபர்களின் பெயரை முதல்வர் வெளியிட்டுள்ளார்.கடந்த வருடம் மர்மநபர்கள் மருத்துவமனையை மட்டுமல்லாமல் மருத்துவர்களையும் காவல்துறையையும் கொடூரமாக தாக்கினார்கள். அதே சம்பவம் தற்போது வரை தொடர்கிறது..மர்மநபர்களுக்கு மணிகட்ட யாராவது வருவார்களா என பொதுமக்கள் கொந்தளிக்கின்றனர்.

...உங்கள் பீமா