Tamilnadu

தமிழகம் வந்த "ராகுலை" பங்கமாக கலாய்த்த அண்ணாமலை.. இந்த அசிங்கம் தேவையா?

annamalai rahulgnadhi
annamalai rahulgnadhi

முதல்வர் ஸ்டாலின் எழுதிய புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொள்ள கேரளாவை சேர்ந்த வயநாடு எம்.பி ராகுல் காந்தி சென்னை வந்திருந்தார், சென்னையில் நிகழ்ச்சியில் பேசிய ராகுல் காந்தி பாஜகவை விமர்சனம் செய்ததுடன் நான் தமிழர் என கூறியதற்கு காரணம் எனது ரத்தம் இங்கு உள்ளது என பேசியிருந்தார்.


இந்த சூழலில் ராகுல்காந்திக்கு தமிழக பாஜக தலைவர் கடும் பதிலடி கொடுத்துள்ளார் இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் எங்களுக்கு அறிவுரை வழக்குவதற்கு பதில் முதலில் தமிழக காங்கிரஸ் அலுவலகத்தில் நடக்கும் சண்டையை நிறுத்துங்கள் என கலாய்துள்ளார்.இது குறித்து அண்ணாமலை தெரிவித்தது பின்வருமாறு :- ""தமிழகத்தில் பாஜக வளராது என நீங்கள் (ராகூல்) சென்ற முறை பாராளுமன்றத்தில் பேசியதற்கு நன்றி. அதன் காரணமாக, தமிழகத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக பாஜக உருவெடுத்துள்ளது" -  

முதலமைச்சர் திரு ஸ்டாலின் அவர்களுக்கு பாராட்டுக்கள். எமர்ஜென்சியில் தான் கைது செய்யப்பட்டதை தமிழ்நாட்டினுடைய இருண்டகாலம் என்று குறிப்பிட்டுள்ளார். திருமதி இந்திரா காந்தி அவர்கள் இதை செய்தார்! அவருடைய பேரன் திரு ராகுல் காந்தி அவர்கள் பெருமையுடன் புத்தகத்தை இன்று வெளியிட்டுள்ளார்! திமுக - காங்கிரஸ் கூட்டணியை போல எத்தனை முரண்பாடுகள் இவர்களுடைய செய்கைகளில்!"

"ராகுல் காந்தி நீங்கள் இங்கே வந்து பிரிவினைவாதம் பேசுவதை விட்டு, சென்ற முறை போல கிராமத்து சமையல் செய்வது நல்லது. மாநிலங்கள் சம்மதித்து இந்திய யூனியன் (ஒன்றியம்) உருவானது என்கிறீர்கள். இந்தியா தான் தன் வசதிக்காக மாநிலங்களாக தன்னை பிரித்துக் கொண்டது. அடுத்து, தமிழ் நாட்டின் மீதான் உங்கள் திடீர் ஆர்வம் வரவேற்கத்தக்கது.பிரதமர் மோதியிடம் பாடம் கற்றுக் கொள்ளுங்கள்.

அதோடு, உங்கள் முன்னோர் தமிழகத்துக்கு என்ன செய்தார்கள் என்பதையும் கூறுகிறேன்" - என்று சொல்லி, கச்சத்தீவை தாரை வார்த்தது, மண்டல் அறிக்கையை நிறைவேற்றாமல் ராஜீவ் காந்தி செய்த வேலை, இலங்கை தமிழர்களுக்கு செய்த அநீதி, சீனாவிடம் நாட்டின் பகுதியை பறி கொடுத்தது என பலவற்றையும் அடுக்குகிறார் அண்ணாமலை 

"நீங்கள் ஏதாவது உருப்படியாக செய்ய வேண்டும் என்று நினைத்தீர்களானால், சத்திய மூர்த்தி பவனில் நடக்கும் அடிதடியை சரி செய்யுங்கள்" என்றும் அறிவுரை கொடுத்துள்ளார் அண்ணாமலை "தமிழகத்தில் பாஜக வளராது என நீங்கள் சென்ற முறை பாராளுமன்றத்தில் பேசியதற்கு நன்றி. அதன் காரணமாக, தமிழகத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக பாஜக உருவெடுத்துள்ளது" என்று கூறி முடிக்கிறார் அண்ணாமலை! மொத்தத்தில் அண்ணாமலை ராகுல்காந்தியை செம்ம மாத்து வாங்கிவிட்டார் என்றே சொல்லவேண்டும் இந்த அசிங்கம் தேவையா என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.