24 special

பச்சிளம் பிள்ளையை கையில் வைத்து தாய் செய்த காரியம்...!! இணையத்தில் வைரலாகும் வீடியோ!!...வலுக்கும் கண்டனங்கள்!

Mothers
Mothers

தற்போது உள்ள சமுதாயத்தில் பெரும்பாலும் முக்கிய விவாத பொருளாக, ஆணுக்கும் பெண்ணுக்கும் சம உரிமையும் சம மரியாதை தான் வழங்கப்படுகிறதா? என்பது உள்ளது. சிலர் ஆணுக்கும் பெண்ணுக்கும் சம உரிமை தான் வழங்கப்படுகிறது என்று வாதிடுவார்கள் அதே நேரத்தில் மாற்று தரப்பில் உள்ளவர்கள் இல்லை பெண்களுக்கு ஆண்களுக்கு நிகரான உரிமைகளும் மரியாதையும் வழங்கப்படுவதில்லை என வாதங்கள் முன்வைக்கப்படுகிறது. இந்த வாதத்திற்கு ஏற்றார் போலே சில நேரங்களில் சில சூழ்நிலைகளும் செய்திகளும் நடந்து கொண்டிருக்கும் தகவல்கள் வெளியாகி கொண்டு தான் உள்ளது. ஆனால் முன் காலத்தை விட பெண்களுக்கு அதிக வாய்ப்புகளும் உரிமைகளும் வழங்கப்பட்டு வருகிறது அதன் வெளிப்பாடாகவே பெண்கள் பல சாதனைகளை புரிந்து வருகின்றனர்.


வளர்ந்து வருகின்ற சமுதாயத்தில் ஒரு வீட்டில் ஆண் பெண் இருவரும் உழைத்தால் மட்டுமே அந்த குடும்பத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல முடியும் என்பதை இக்காலத்தில் உள்ள இளைஞர்களும் தம்பதிகளும் புரிந்து கொண்டு தன் குடும்பத்திற்காக உழைக்கிறார்கள். அதற்கேற்றார் போல் வளர்கின்ற பெண் பிள்ளைகளும் தன் சொந்த காலில் நிற்க வேண்டும் அதற்கு பிறகு தான் திருமணம் என்பதை உறுதியுடன் ஏற்று செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். மேலும் பெண்களை முன்னிலைப்படுத்தி பெண்கள் சக்தி வளர்ந்தால் நாட்டின் வளர்ச்சியும் அதிகரிக்கும் என்பதை குறிக்கோளாக கொண்டு பல நடவடிக்கைகளும் அரசு தரப்பில் மேற்கொள்ளப்படுகிறது. அதுமட்டுமின்றி ஆண்களுக்கு நிகராக பல தொழில்களில் பெண்களும் சவால் விடும் வகையிலான சாதனைகளை புரிகிறார்கள்.

தொழில் ரீதியாக மட்டுமல்லாமல் ஆண்களைப் போலவே உடற்பயிற்சி கூடத்திற்கு செல்வது, கனரக வாகனங்களை ஓட்டுவது, இருசக்கர மோட்டார் வாகனங்களை ஓட்டுவது, ஆண்களைப் போன்ற ஹேர் ஸ்டைலை வைத்துக் கொள்வது, பாடி பில்டிங் செய்வது, என ஒரு தனி லிஸ்ட்டே போடலாம். இதில் ஆண்கள் செய்கின்ற சில தீய குணங்களும் பெண்களையும் ஒட்டிக்கொள்கிறது. அதாவது மது மற்றும் புகைப்படக்கத்தால் ஒரு குடும்பத்தில் ஒரு ஆண் அடிமையாக இருக்கிறான் என்றால் அது அவனது மொத்த குடும்பத்தையும் பாதிக்கும் என்பது நிதர்சன பேச்சு! மது மற்றும் புகைப் பழக்கத்தால் ஏற்படும் வியாதிகளாலும் ஒரு ஆணை மட்டுமே நம்பிக் கொண்டிருந்த பல குடும்பங்கள் சீரழிந்து கடும் துயரத்தை சந்தித்து படாத பாடுபட்டு வளர்ச்சியை நோக்கி செல்லும். 

அதுபோன்ற நிலைமை வரக்கூடாது என்பதை அச்சூழலைகளில் வாழ்ந்த, வளர்ந்த குழந்தைகள் தங்கள் வாழ்க்கையில் முக்கிய கொள்கைகளாக கடைபிடித்து வருவார்கள். ஆனால் ஆண்களைப் போலவே நாங்களும் இதை அனைத்தையும் செய்வோம் என விடாப்படியாய் பிடிக்கும் சில பெண்கள் ஆண்கள் புகைப் பிடித்துக் கொள்வதைப் போலவும், மது அருந்துவதைப் போலவும் இவர்களும், அத்தீய பழக்கத்திற்கு பழக்கப்படுத்திக் கொள்கிறார்கள். இதில் என்ன தவறு இருக்கிறது என்றும் ஒரு சில தரப்பினர் கேள்விகளை முன் வைக்கலாம். 

ஆனால் ஒரு பெண்ணானவள் அதிலும் குறிப்பாக தாயானவள் தனது குழந்தையை சுமக்கும் பொழுது புகைப்பிடித்தலும் மது அருந்துதலும் கூடாது என மருத்துவர் அறிவுரை கூறுகிறார்கள். ஆனால் அதையும் மீறி பெற்றெடுத்த தன் பச்சிளம் குழந்தையை கையில் வைத்துக் கொண்டே ஒரு பெண் புகை பிடித்துக் கொண்டிருப்பதை பார்க்கும் பொழுது உங்களுக்கு எவ்வளவு கோபம் வரும்!! அப்படிப்பட்ட வீடியோ ஒன்றுதான் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதுவும் அந்தப் பெண் ஒரு கையில் சிகரெட்டையும் மற்றொரு கையில் குழந்தையை பிடித்துக் கொண்டு ஒரு ரீல்ஸ்ஸுக்கு பாட்டு பாடிக்கொண்டே புகைபிடிக்கிறாள். அந்தப் புகையால் அக்குழந்தை மூச்சு திணறி, இருமல் விடும் காட்சிகளும் அதில் இடம்பெற்றுக் கொண்டுதான் இருக்கிறது. ஆனால் அதையும் பொருட்படுத்தாமல் கண்டு கொள்ளாமல் ரீல்ஸ் செய்வதையே அந்த பெண் கண்ணாக கொண்டிருக்கிறாள்!! இதற்குத்தான் உங்கள் உரிமை பயன்படுகிறதா என பல விமர்சனங்களும் கமெண்ட்களும் இந்த வீடியோவிற்கு எழுந்து வருகிறது.