24 special

எது நடக்க கூடாது என நினைத்தார்களோ அது நடந்தது! உடைந்தது திமுக கூட்டணி! ஆட்டத்தை கலைத்த ராகுலின் வலது கை

MKSTALIN,RAHULGANDHI
MKSTALIN,RAHULGANDHI

2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்க நெருங்க, திமுக தலைமையிலான ஐக்கிய ஜனநாயக கூட்டணிக்குள் உள்ள அடக்கி வைத்த அதிருப்திகள் மெதுவாக வெளியில் வர தொடங்கியுள்ளன. இதுவரை “ஒற்றுமை, ஒருமித்த முடிவு” என்ற கோஷத்தோடு பயணித்த திமுக – காங்கிரஸ் உறவில், தற்போது அதிகாரப் பங்கு, அரசியல் மரியாதை, எதிர்கால இடம் போன்ற கேள்விகள் மேலெழுந்துள்ளன.  காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தியின் சமீபத்திய சமூக வலைதளப் பதிவு ஒரு மிகப்பெரிய ‘சேம் சைட் கோல்’ ஆக மாறி, திமுக – காங்கிரஸ் கூட்டணியின் அஸ்திவாரத்தையே ஆட்டிப்பார்த்துள்ளது.


தமிழகத்தில் காங்கிரஸ் தி.மு.க கூட்டணி தொடர்ந்து வரும் சூழலில், காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய நிர்வாகி, அதுவும் ராகுல் காந்திக்கு நெருக்கமானவராக அறியப்படும் பிரவீன் சக்கரவர்த்தி விஜய்யை சந்தித்துப் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.இதற்கிடையில், திமுக எம்.பி கனிமொழி,``அ.தி.மு.க ஆட்சியை விட்டு வெளியேறியபோது தமிழகம் மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்தது. எந்த வளர்ச்சியும் இல்லாமல், கடன் சுமையால் சூழப்பட்டிருந்தது. தற்போது தமிழகத்தை முன்னேறிய, வளர்ந்த மாநிலமாக திமுக அரசு மாற்றியுள்ளது" எனக் குறிப்பிட்டிருந்தார்.

இதை மேற்கோள்காட்டி திமுகவை சீண்டும் வகையில் சமூக வலைதளத்தில் பிரவின் சக்கரவர்த்தி,அனைத்து மாநிலங்களை விடவும் அதிக கடன் நிலுவையில் உள்ள மாநிலம் தமிழ்நாடு. 2010-ம் ஆண்டில், உத்தர பிரதேசம் தமிழகத்தை விட இரண்டு மடங்கு அதிகமாக கடனுடன் இருந்தது. இப்போது, உ.பியை விட தமிழகத்துக்கு அதிக கடன் உள்ளது.வட்டிச் சுமையின் சதவீதத்தில், பஞ்சாப் மற்றும் ஹரியானாவுக்கு பிறகு தமிழகம் மூன்றாவது இடத்தில் உள்ளது. தமிழகத்தின் கடன், மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம், இரண்டுமே கொரோனாவிற்கு முந்தைய நிலைகளை விட இப்போது அதிகமாக உள்ளது. தமிழகத்தின் கடன் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது" எனக் குறிப்பிட்டிருந்தார்.

தமிழக அரசின் கடன் சுமை குறித்து அவர் முன்வைத்த விமர்சனம், ஒரு தனிப்பட்ட கருத்தாக தோன்றினாலும், அது கூட்டணியின் உள்ளே நீண்டகாலமாக இருந்து வந்த  அதிருப்தியை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது. ஒரு கூட்டணி கட்சியின் முக்கிய பொறுப்பில் இருப்பவரே, ஆளும் அரசின் பொருளாதார ஆளுமையை கேள்விக்குள்ளாக்கியது, திமுக தலைமையை கடும் கோபத்திற்கு உள்ளாக்கியுள்ளது.

இந்த மோதல் என்பது வெறும் புள்ளிவிவர போர் மட்டுமல்ல; இது திமுகவின் அடிமட்ட உடன் பிறப்புகளின்  உணர்வுகளோடும் பிணைந்துள்ளது. திராவிட மாடல் திராவிட மாடல் என கூறி வந்த பொய் பிரச்சாரத்தை சுக்குநூறாக உடைத்துள்ளது. காங்கிரஸ் கட்சியில் உள்ள சில  தொண்டர்கள் மற்றும் பல மாவட்ட நிர்வாகிகள் மத்தியில் திமுக மீதான ஆதரவு என்பது தற்போது பெயரளவிற்கு மட்டுமே உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக தங்களுக்கு வழங்கப்பட்ட தொகுதிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டதும், உள்ளாட்சி பங்கீட்டில் திமுக காட்டிய மேலாதிக்கமும் காங்கிரஸ் தொண்டர்களை கடும் சலிப்படைய செய்துள்ளது. “கூட்டணியில் நீடித்தாலும் நமக்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை” என்ற குமுறல் சத்தியமூர்த்தி பவனில் உரக்க ஒலிக்க தொடங்கியுள்ள நிலையில், ஒருவரை ஒருவர் கவிழ்க்கத் துணியும் சூழலே நிலவுகிறது.தற்போதுள்ள அரசியல் சூழலில், காங்கிரஸ் தொண்டர்களின் முதன்மையான தேர்வாக நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் உருவெடுத்துள்ளது.அது மட்டுமில்லமால் தென்னிந்தியாவில் விஜயை வைத்து ஒரு ஆட்டம்  ஆடலாம் என  காங்கிரஸ்  கணக்கு போட்டுள்ளது. 

 தேர்தல் களம் என்பது வெறும் கூட்டணி கணக்குகளால் மட்டும் தீர்மானிக்கப்படுவதில்லை. பிரவீன் சக்கரவர்த்தி கிளப்பிவிட்ட இந்த நெருப்பு, 2026 தேர்தலில் எந்த பக்கமாகத் திரும்பும் என்பது இன்னும் சில மாதங்களில் தெளிவாகும். காங்கிரஸ் தலைமை தொண்டர்களின் விருப்பத்தை ஏற்று மாற்றத்தை நோக்கி செல்லுமா அல்லது பாதுகாப்பான பழைய பாதையிலேயே பயணிக்குமா என்பதுதான் இப்போதைய கேள்வி.