24 special

யூ டியூபர் சவுக்கு சங்கர் அதிரடியாக கைது.. பின்னணியில் திமுக போடும் பிளான் என்ன..?

Savukku Shankar
Savukku Shankar

பிரபல யூடியூபர் சவுக்கு சங்கரை இன்று காலை அதிரடியாக கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவரை கோவைக்கு அழைத்து செல்லபட்ட நிலையில் பெரும் விபத்தில் சிக்கியது காவல்துறை வாகனம். 


சவுக்கு சங்கருக்கும் திமுகவுக்கு இடையே ஏற்பட்ட உரசல் என்பது பல தரப்பில் பல விதமாக பேசப்பட்டு வருகிறது. கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கு ஆதரவாக இருந்த சவுக்கு சங்கர் பாஜகவையும், அதிமுகவையும் கடுமையாக எதிர்த்து விமர்சனம் செய்து வந்தார். இந்நிலையில் நாடளுமன்ற தேர்தலை முன்னிட்டு சவுக்கு சங்கர் புதியதாக யூடியூபி சேனல் ஒன்று தொடங்கி, அதில் முழுக்க முழுக்க திமுக ஆட்சி குறித்து கடுமையாக விமர்சனம் செய்து திமுகவின் உள் விஷயத்தை தெரிவித்து வந்தார். 

இதன் தொடர்ச்சியாக வந்து சவுக்கு சங்கர் கைது செய்யப்படலாம் என்ற நிலை பேசப்பட்டு திமுகவின் முக்கிய நிர்வாகிகளே கேட்ட வண்ணம் இருந்தனர். திமுக தலைமை அமைதி காத்தது இந்த நிலையில் தேர்தல் முடிந்த கையோடு சவுக்கு ஊடகத்தின் முக்கிய நிர்வாகிகள் பலரை வந்து தொடர்ச்சியாக கைது செய்ய ஆரம்பித்தனர். அதன் ஒரு பகுதியாக பலர் அவர் ஊடகத்தில் இருந்து வெளியேறிய வண்ணம் இருந்தனர். இந்த சூழ்நிலையில், சவுக்கு சங்கர் தனது நிறுவனத்தில் பணிபுரியும் நபர்களை டார்கெட் செய்வதாகவும் ஊடகத்தில் பணி புரிபவர்களை மிரட்டி வருவதாகவும் சமூக வலைதளத்தில் பதிவு செய்திருந்தார்.

இந்நிலையில் தான், தேனியில் நேற்று சவுக்கு சங்கர் கொடைக்கானல் செல்வதற்காக தேனியில் இருந்த அவரை அதிரடியாக கைது செய்யப்பட்டார். அதிகாலையில் கைது செய்யப்பட்ட அவரை கோவை அழைத்து  செல்லும் வழியில் காவல்துறையில் வாகனம் விபத்துக்குள்ளானது. இது தொடர்ப்பன வீடியோ இணையத்தில் வெளியானது.  அப்பளம் போல் கார் நொறுக்கியது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வெளியானது. சவுக்கு சங்கர் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வண்ணம் இந்த நிகழ்வு ஏற்பட்டு இருப்பதாக அவரது  ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர். ஆனால், இதன் பின்னணியில் முக்கிய காரணம் இருக்கு சவுக்கு சங்கர் தொடர்ச்சியாக திமுகவுக்கு எதிராக இருப்பது முதலில் பெரியதாக கண்டுகொள்ளவில்லை அதன் பிறகு சவுக்கு சங்கரால் திமுகவுக்கு பாதிப்பு இருப்பதை கண்ட திமுக கட்சி நிர்வாகிகளே திமுக தொடர்பான ஆதாரம் கொடுப்பதாக தெரியவந்துள்ளது.

இதனால் உதயநிதி சவுக்கு சங்கருக்கு அழுத்தம் கொடுத்த காரணத்தால் முதலமைச்சர் முடிவெடுத்துள்ளார். சவுக்கு சங்கரை கைது செய்வது மட்டுமில்லாமல் அவர் மீது பல்வேறு வழக்குகள் போடப்பட்டு சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் போடா இருப்பதாகவும் இது குறித்த அறிவிப்பு ஓரிரு தினங்களில் வெளியாகலாம் என கூறப்படுகிறது. விடுமுறை நாட்களான சனி, ஞாயிறு கிழமை மட்டுமின்றி கோவை நீதிமன்றம் கோடை விடுமுறையை கருத்தில் கொண்டு குண்டர் சட்டம் போட்டாலும் அதனை தவிர்க்க சவுக்கு சங்கரிடம் எந்த பாயின்டும் இல்லாததால் இந்த தேதியை முடிவெடுத்துள்ளார்களாம். 

சவுக்கு சங்கர் ஊடகத்தில் பணிபுரிகிற மொத்த பணியாளர்களையும் கைது செய்ய இருப்பதாகவும், சவுக்கு சங்கருக்கு தகவல் கொடுத்து வரும் அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் வாய்ப்பு இருப்பதாக தகவல் பரவி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், சவுக்கு சங்கர் சிறையில் வைத்து கொல்லப்படலாம் எனவும் அவரது ஆதரவாளர்கள் சமூக வலைதளத்தில் பதிவு செய்வதால் எனா நடக்க போகிறது என்ற எதிர்பார்ப்பு அதிரவைத்துள்ளது. இவை அனைத்தையும் தாண்டி பழி வாங்கும் செயலாக இருக்கக்கூடாது என்று ஒரு தரப்பும் சவுக்கு சங்கர் போன்றோரை ஆதரித்தால் தமிழர்களுக்கு எதிராக முடியும் என்று ஒரு தரப்பும் கருத்துக்களை தெரிவிப்பதால் சவுக்கு சங்கர் விஷயத்தில் என்ன நடக்க போகிறது என்பது பரபரப்பில் தள்ளியுள்ளது.

இது ஒரு பக்கம் ஒன்று என்றால் சவுக்கு சங்கர் அழைத்து வரப்பட்ட வாகனத்தில் மோதிய கார் அப்பளம் போன்று நொறுங்கியது அந்த விபத்தில் காயமடைந்தவர்கள் உயிருடன் இருக்கிறார்களா..? என்பது குறித்த பத்திரிகையாளர் தகவல் சேகரித்த வண்ணம் இருப்பதால் சவுக்கு சங்கர் விஷயத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.