Tamilnadu

"நீ சொல்லு" காட்டு கத்து கத்திய ' செந்தில்பாலாஜி.. இந்தமுறை திமுக எம்.பி அடுத்த புள்ளிகளை இணைத்தார் அண்ணாமலை!

annamalai and senthilbalaji
annamalai and senthilbalaji

அண்ணாமலை கொடுத்தது ஆதாரம் இல்லை, ஒழுங்காக நீ மன்னிப்பு கேள் இதோடு இந்த விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க போகிறேன், இனி இது குறித்து பேசுவதாக இல்லை வேறு ஆதாரம் வெளியிட்டால் நான் பேச இருக்கிறேன்,களத்திலும் சரி சமூக வலைத்தளத்திலும் சரி விளையாடி பார்க்க நான் தயார் என இன்று செய்தியாளர் சந்திப்பில் பேட்டி கொடுத்தார் அண்ணாமலை.


ஆனால் தற்போது விவகாரம் அடுத்த கட்டத்திற்கு சென்றுள்ளது, அண்ணாமலை குற்றம் சாட்டிய நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்தது தமிழக அரசு, அந்த வழக்கில் நிறுவனத்திற்கு ஆதரவாக வாதாடிய வழக்கறிஞர் திமுக சிட்டிங் மக்களவை எம்பி வில்சன், அதாவது ஆளும் திமுக அரசிற்கு எதிராக வாத்திடது திமுக எம்பி. கேஸ் போட்டதும் அதை எதிர்த்து வாதடுவதும் ஒரே கட்சியை சேர்ந்தவர்கள் என்பதால் விஷயம் அடுத்த கட்டத்திற்கு சென்றுள்ளது.

மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வேண்டும் என்றே நாங்கள் தனியார் நிறுவனத்திற்கு ஆர்டர் கொடுக்கவில்லை அது நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து வெற்றி பெற்றதால் கொடுத்தோம் என பேசினார் இது குறித்து செந்தில் பாலாஜி குறிப்பிட்டதாவது  BGR நிறுவனத்திற்கு, நின்ற பணிகளை துவங்கிட LoA வழங்கி, 1/3/2021 அன்று CTE (Content to Establish) கொடுக்கிறது. பேரம் படியாததால் ஏப்ரல் 2021ல், அந்த ஒப்பந்தத்தை முடித்து கொள்கிறது. BGR நிறுவனம், சென்னை உயர்நீதி மன்றம் சென்று வழக்காடி ஒப்பந்தப்படி பணியை ஆரம்பிக்க இருக்கிறது என குறிப்பிட்டார்.

ஆனால் நிறுவனத்திற்கு ஆதரவாக வாதடியாதே திமுக எம்பி வில்சன் என்பதை லாபகமாக மறைத்துவிட்டார் அமைச்சர், பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலயும் ஆட்டி விடுவார்கள் என ஒரு பல மொழி இருப்பது போல், அரசாங்கம் தடையும் விதித்துவிட்டு தங்கள் கட்சி எம்பி மூலம் தடையை நீக்கவும் செய்துள்ளார்கள் இதை தான்  மெகா ஊழல் நடைபெற திட்டம் என அண்ணாமலை குறிப்பிட்டார் என இப்போது தெரியவந்துள்ளது என அவரது ஆதரவாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த சூழல் இந்த தகவலை சற்றுமுன் அண்ணாமலை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து உள்ளார் அதில்  கோபாலபுரம் 🤝 BGR ஆற்றல் 🤝TNEB .V.  செந்தில் பாலாஜி,  திமுகவின் ராஜ்யசபா எம்.பி.யால் பிஜிஆர் எனர்ஜி நீதிமன்றத்தில் பிரதிநிதித்துவம் செய்யப்படுகிறது & அது 'சட்ட ஒளிர்வு' திரு  வில்சன்! எங்கள்  மின்துறை அமைச்சர் பேச்சு மிகவும் சுவாரஸ்யமாக உள்ளது! நாம் புள்ளிகளை இணைப்போம் & பதில் தெளிவாக இருக்கும் என குறிப்பிட்டுள்ளார். நீ வா போ என இன்று காட்டு கத்து கத்திய அமைச்சர் செந்தில் பாலாஜியை நோக்கி என்ன சார் உங்க எம். பி ஒருவரே உங்கள் உத்தரவிற்கு எதிராக நீதிமன்றத்தில் வாதாட வாய்ப்பு இருக்கா? இதெல்லாம் பச்சை பொய் இல்லையா என கேள்வி எழுப்புகின்றனர்,

அதோடு அண்ணாமலை தான் என் மீது வழக்கு பதிவு செய்யுங்கள் நான் நீதி மன்றத்தில் ஆதாரத்தை சமர்ப்பிக்கிறேன் என சொல்கிறார் ஏன் நீங்கள் அவர் மீது வழக்கு பதிவு செய்யக்கூடாது, இனிமேல் இந்த விவகாரத்தை பேச போவது இல்லை என சொல்வது ஏன் என செந்தில்பாலாஜிக்கு எதிராக கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.ஒவ்வொரு முடிச்சாக அவிழும் நிலையில் சிக்க போவது யார் என்ற பரபரப்பு அதிகரித்து உள்ளது.