அரிது அரிது மானிடராதல் அரிது. மானிடராயினும் கூன், குருடு, செவிடு, பேடு நீங்கிப் பிறத்தல் அரிது.....என்ற பாடலை ஔவையார் கொடுத்துவிட்டு மறைந்து விட்டார் ஆனால் இதனை உணராமல் இன்று பலர் நான் எதற்காக பிறந்தேன் எதற்காக வாழ்கிறேன் என்னை ஏன் இந்த கடவுள் படைத்தான் என கடவுள் மீது தன் மனித பிறவியையும் பழி சொல்லி வாழ்கின்றனர். அதாவது ஏதேனும் சிறிய கஷ்டம் ஏற்பட்டு விட்டால் உடனே இந்த கஷ்டத்திற்கு யார் காரணமோ அவர்களை தேடி அவர்களை கத்தி விடுவது, அதற்குப் பிறகு வருந்துவது. அதிலும் குறிப்பாக அந்த பிரச்சனையை ஏற்படுத்தியது தான் என்பது தெரிய வரும் பொழுது சிலர் தன்மேலே வெறுப்பு ஏற்பட்டு தன்னைத் தானே வெறுக்கும் நிலைக்கு சென்று விடுகின்றனர். இதைத் தவிர சில குழந்தைகள் பெற்றோர் எதிர்பார்ப்பது போன்று நடக்க முடியாமலும் தொடர்ந்து திட்டு மற்றும் பேச்சை மட்டுமே வாங்கிக் கொண்டு ஒரு கட்டத்தில் தனக்கு எதுவுமே முடியாது இதை என்னால் செய்ய முடியாது அவற்றிற்கெல்லாம் நான் ஒத்து போக மாட்டேன் என்று தன்னைத் தானே தாழ்த்திக் கொள்கின்றனர்.
அதுமட்டுமின்றி பொது தேர்வு மற்றும் போட்டி தேர்வுகளில் தான் நினைத்த மதிப்பை பெற முடியாமல் தேர்ச்சி பெற முடியாமல் சோர்வடைந்து மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொள்கின்றனர் ஆனால் ஒரு பொது தேர்வு போட்டி தேர்வு அவர்களது வாழ்க்கை என்று கிடையாது அதை தாண்டி அவர்களது வாழ்க்கை உள்ளது என்பதையும் மறந்து இது போன்ற விபரீத முடிவுகளை சிலர் எடுத்து தன் வாழ்க்கையை முடித்துக் கொள்கின்றனர். அதே சமயத்தில் தனக்கு துன்பம் ஏற்படும் பொழுது துன்பத்தை மட்டுமே நினைத்துக் கொண்டு அதிலிருந்து விடுபட வேண்டிய வழியையும் மறந்து கடவுள் மீது அந்த பழியை போட்டு எல்லாம் என் தலைவிதி என்று தலைவிதி மேலும் பழியை போட்டு செல்கின்றனர். ஆனால் அவர்களை மிகவும் ஆரோக்கியமாகவும் நல்ல சுகத்துடனும் கைகால் பலத்துடனும் பிறக்கச் செய்து இந்த உலகில் உள்ள அனைத்து அழகையும் ஒளியையும் பார்க்க கேட்க வைத்து தான் நினைக்கும் அனைத்தையும் பேச வைத்தே இறைவனின் படைப்பு தான் என்பதையும் இன்றைய இளைஞர்கள் மறந்து விட்டனர்.
சிலருக்கு இறை நம்பிக்கை இல்லை என்றாலும் ஆரோக்கியமாக ஒரு குழந்தை பிறப்பதற்கு பின்னால் நம்பிக்கை என்ற ஒரு சக்தியும் இருக்கும் தானே அந்த நம்பிக்கை மீதும் எந்தவித அக்கறையும் கொள்ளாமல், தான் பிறந்ததே வேஸ்ட் என்று கூறிக் கொள்கிறார்கள். ஆனால் இவர்களுக்கு நேர்மாறாக பார்வை, பேச்சு, கேட்கும் திறமை, கைகள், கால்கள் போன்றவை இல்லாமல் பிறந்த பல குழந்தைகள் தங்களது குறைகளை மறைத்து தனது வாழ்க்கையை ஒரு வெற்றிப் பாதையாகவும் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைக்கின்ற ஒரு வாழ்க்கையாகவும் வாழ்ந்து வருகின்றனர். அப்படி பலர் நம் உலகத்தில் உள்ளனர் இரு கை கால்களும் இல்லாமல் தொழிலை தொடங்கி அந்த தொழிலையும் உலக அளவில் முன்னேற்ற செல்கின்றனர்.
விளையாட்டுத் துறைகளும் சதம் அடிக்கிறார்கள் பல வெற்றிகளை பெறுகிறார்கள். அந்த வகையில் தற்போது இரு கை இல்லாத ஒரு பெண், தன்னுடைய துணிகள் அனைத்தையும் மடித்து வைத்து பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார் அது குறித்த வீடியோக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் கை கால்களுடன் இருக்கும் பெரும்பாலான பெண் பிள்ளைகளே தற்போது தங்களுடைய துணிகளை மடிக்காமல் சோம்பேறியாக இருக்கிற நிலையில் இருக்கையில் இல்லாத ஒரு பெண் தன்னுடைய வேலையை தானே பார்த்துக் கொள்ளும் இந்த காட்சிகளுக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.