Politics

அண்ணாமலை விஷயத்தில் பானு கோம்ஸ் குறிப்பிட்டது நடைபெறுமா? வெற்றி பெறுவாரா

Banugomes -annamalai
Banugomes -annamalai

அண்ணாமலை IPS அதிகாரியாக இருந்து அந்த பதவியை ராஜினாமா செய்துவிட்டு அரசியலுக்கு வந்தவர் என்ற காரணத்தால் அவரது செயல்பாடுகள் அனைத்தும் அரசியல் ரீதியாக அதிக முக்கியத்துவம் பெறுகின்றன, இந்நிலையில் அரவக்குறிச்சியில் போட்டியிடும் அண்ணாமலை வெற்றி பெறுவாரா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் அண்ணாமலை ஐபிஎஸ் குறித்து பானு கோம்ஸ்  தெரிவித்த கருத்துக்கள் பின்வருமாறு :-


சைக்கிளில் சக மனிதர்களோடு சென்று  வேட்பு மனு தாக்கல் செய்திருக்கிறார் இளையவர்கள்,சாமானிய பொதுமக்கள் ஊழலைவிரும்பாதவர்கள்,என்று தமிழகத்தின் ஆகப் பெரும் மக்கள் திரளின் விருப்ப நாயகனாக இருக்கும் & இந்தியாவே உற்று நோக்கும் நட்சத்திர வேட்பாளர்  அண்ணாமலை ஐபிஎஸ்.

இன்னொரு புறம் இந்துவெறுப்பை கொள்கையாக கொண்டு சனாதனத்தை வேரறுக்கப் போகிறோம் என்று சபதமேற்றிருப்பவர்கள் அனைவரும் தேர்தல் நேரம் என்பதால்  இந்து கோவில்களுக்கு சென்று போஸ் கொடுக்கும்  அப்பட்டமான போலித்தனங்கள். அண்ணாமலை ஐபிஎஸ் -ன்  ''உண்மையான எளிமையும் , நேர்மையும்'' ...மிக எளிதாக மக்கள் மனதில் பதிந்து அவர்களின் அன்பையும்,நம்பிக்கையையும் பெறுவதில் ஆச்சரியமில்லை.

அப்பட்டமான போலித்தனங்களும், நாடகத்தனங்களும் அதிகமாக அதிகமாக உண்மைக்கும்,எளிமைக்கும் விளம்பரமின்றி, பிரச்சாரமின்றி கூட  மக்கள் ஆதரவு தன்னாலே பெருகும். எனவும் குறிப்பிட்டுள்ளார் இதன் மூலம் அண்ணாமலைக்கு ஆதரவு பெருகிவருகிறது என பானு கோம்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்தில் கவனிக்கப்படும் முக்கிய தொகுதிகளில் ஒன்றாக மாறியுள்ள அரவக்குறிச்சி தொகுதியில், இஸ்லாமியர்கள் வாக்குகள் குறிப்பாக இஸ்லாமிய பெண்களின் வாக்குகள் பாஜக வேட்பாளர் அண்ணாமலைக்கு கிடைக்கும் எனவும், முத்தலாக் தடை சட்டம் இதற்கு பின்னணியாக அமையும் எனவும் கூறப்படுகிறது.

எனவே பானு கோம்ஸ் குறிப்பிட்டது போன்று அண்ணாமலைக்கான வெற்றி வாய்ப்பு தற்போதைய நிலையில் மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது.