24 special

டெல்லியில் நடந்த முக்கிய நிகழ்வை ஊடகங்கள் வெளியில் சொல்லாதது ஏன்?

stallin and amithsha
stallin and amithsha

தமிழக முதல்வர் ஸ்டாலின் துபாய் பயணத்தை தொடர்ந்து டெல்லிக்கு பயணம் மேற்கொண்டார் பிரதமரை சந்தித்தவர் பிறகு மத்திய அமைச்சர்களை சந்தித்து துறை ரீதியிலான கோரிக்கைகளை முன்வைத்தார். அதன் பிறகு டெல்லியில் புதிதாக கட்டப்பட்ட திமுக அலுவலகத்தை திறந்து வைத்தார்.


இதில் பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர், மம்தா பானர்ஜி, கெஜ்ரிவால், சந்திரசேகர ராவ், தேஜஸ்வி யாதவ் போன்ற முக்கிய எதிர்க்கட்சி தலைவர்கள் கலந்து கொள்ளவில்லை அவர்கள் சார்பில் பிரதிநிதிகள் அனுப்பி வைக்கப்பட்டு இருந்ததா என்பதும் உறுதிப்படுத்தவில்லை.

இது ஒருபுறம் இருக்க டெல்லிக்கு பயணம் மேற்கொண்ட அமைச்சர்களில் பலர் நிர்வாக ரீதியாகவும், பாராளுமன்ற புதிய சட்டங்கள் கொண்டுவருவது, ஜனாதிபதி தேர்தல் போன்றவற்றில் பாஜகவை ஆதரிப்பது நமக்கு இப்போதைய முக்கிய தேவை என முதல்வர் ஸ்டாலினிடம் தெரிவித்து இருக்கின்றனர்.

டெல்லி அறிவாலயம் திறப்பு விழா முடிந்து, 2ம் தேதி இரவு மூன்று விமானங்களில், டெல்லியில் இருந்து அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகள், எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள் சென்னைக்கு மகிழ்ச்சியுடன் திரும்பினர். அப்போது, முதல்வர் ஸ்டாலினிடம், அமைச்சர்கள் அனைவரும், 'பா.ஜ.,விடம் தி.மு.க., நெருக்கமாக இருக்க வேண்டும்; உரசல் போக்கை கடைப்பிடிக்க வேண்டாம்' என்ற ஒருமித்த குரலில் தெரிவித்துஉள்ளனர்.

அவர்களின் கருத்தில் பல்வேறு அர்த்தங்கள் உள்ளதால், அதை ஏற்கும் நிலைக்கு ஸ்டாலின் வந்துள்ளதாக, தி.மு.க., வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் பாஜக நிறுத்தும் ஜனாதிபதி வேட்பாளருக்கு திமுக நிச்சயம் ஆதரவு அளிக்கும் என உறுதி மொழி கொடுக்கப்பட்டு இருக்கிறதாம் ஒரு வேலை மிக பெரும் அரசியல் சிக்கல் எழுந்தால் வாக்களிக்காமல் புறக்கணிப்பு செய்வோம் எனவும் திமுகவினரே வழிய சென்று உத்தரவாதம் கொடுத்துள்ளனராம்.

தமிழகத்தில் முதல்வர் நிகழ்ச்சியை குறித்து முழு நேர ஒளிபரப்பு செய்த எந்த ஊடகமும் ஜனாதிபதி தேர்தலில் திமுகவின் நிலை பாடு என்ன? என ஏன் கேட்கவில்லை பாஜகவிற்கு ஆதரவாக ஜனாதிபதி தேர்தலில் திமுக செயல்படும் என சொல்கிறார்கள் உண்மையா? என எந்த ஊடகமும் ஏன் திமுகவை நோக்கி கேள்வி எழுப்பவில்லை என்ற கேள்விகள் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.