24 special

யார் அந்த சென்னை ஐ.ஏ.எஸ் அதிகாரி அஜித் குமார் வழக்கில் ஏற்பட்டுள்ள திடீர் திருப்பம் வெளியான அதிர்ச்சி தகவல்கள்

SIVAGANGAIAJITHKUMAR,NIKITHA
SIVAGANGAIAJITHKUMAR,NIKITHA

தமிழகத்தை தற்போது புரட்டி போட்டுள்ள சம்பவம் சிவகங்கை  மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டு, காவலர்களால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.காவல் நிலையம் கொண்டு செல்வதற்கு முன்னரே  கோவிலின் கோசாலையில் மிளகாய் பொடி தூவி பிளாஸ்டிக் பைப்களில்  மிக கொடுமையாக  தாக்கப்பட்டு விசாரிக்கப்பட்டார். 


அஜித்குமாரை காவலர்கள் கடுமையாக தாக்கும் காட்சிகளை வீடியோவாக பதிவு செய்து, அதை மதுரை உயர் நீதிமன்றத்தில் ஆதாரமாக தாக்கல் செய்தார். இந்த வீடியோ, அஜித்குமாரின் மரணத்திற்கு காவலர்களின் தாக்குதலே காரணம் என்பதை உறுதிப்படுத்திய முக்கிய ஆதாரமாக அமைந்தது. இதனைத் தொடர்ந்து, வழக்கு கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டு, ஐந்து காவலர்கள் கைது செய்யப்பட்டனர்,. 

முதலில் வாய் திறக்காத தமிழக அரசு மக்களின் கேள்வி எதிர்கட்சிகளின் போர்க்கொடி சமூக வலைத்தளங்களில் தன்னெழுச்சியாக எழுந்த அஜித் குமாருக்கு ஆதரவு என இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில் அஜித்குமார் வழக்கை கொலை வழக்காக மாற்ற சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது. 

இதற்கிடையே காவலாளி அஜித்குமாருக்கும், நிகிதாவுக்கும் சம்பவம் நடந்த அன்று பிரச்சனை ஏற்பட்டது என்றும், தொடர்ந்து நகை திருட்டு என அஜித்குமார் மீது போலீசில் நிகிதா, தனக்கு தெரிந்த ஐஏஎஸ் அதிகாரி மூலம் அழுத்தம் கொடுத்தார் என்றும் ஐகோர்ட் வழக்கறிஞர் ஒருவர் பேட்டி அளித்துள்ளார் அந்த பேட்டி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. 

அஜித்குமார் கொலை வழக்கு  சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணைக்கு வந்த போது, அதிமுக வழக்கறிஞர் அணி மாநில இணைச் செயலாளரான வழக்கறிஞர் மாரீஸ்குமார் வாதிடுகையில், "இந்த வழக்கில் ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் காவல்துறைக்கு அழுத்தம் கொடுத்துள்ளார்" என்று குற்றம்சாட்டினார். இதையடுத்து நீதிமன்றமும், அஜித்குமாரை விசாரணைக்காக வெவ்வேறு இடங்களுக்கு அழைத்துச் செல்ல யார் காவல்துறையினருக்கு அதிகாரம் கொடுத்தது? சிவகங்கை மாவட்ட எஸ்பி ஆஷிஷ் ராவத் உடனடியாக காத்திருப்போர் பட்டியலுக்கு அனுப்பப்பட்டதற்கு என்ன காரணம் என்று கேள்வி எழுப்பி இருந்தது.

 அஜித்குமார் மற்றும் நிகிதாவிற்கு சிறிய வாக்குவாதம் ஏற்ப்பட்டுள்ளதால் நிகிதா  தனக்கு தெரிந்த சென்னையில் உள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவரை தொடர்பு கொண்டு நகை திருட்டு போனதாக தெரிவித்த தகவலால் போலீசாருக்கு மேலிடத்தில் இருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது. அதனால் மானாமதுரையில் இருந்து வந்த தனிப்படை போலீசார் அஜித்குமாரை நகையை கேட்டு அடித்துக்கொன்றார்கள் " வக்கீல் பேட்டியில் கூறி இருக்கிறார். 

அது அதுமட்டுமில்லாமல் அஜித்குமார் மீது சந்தேக புகார் கொடுத்த நிகிதா என்ற பெண் குறித்து பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன. 2011-ம் ஆண்டு ரூ16 லட்சம் மோசடி செய்ததாக நிகிதா, அவரது தாயார் மற்றும் உறவினர்கள் மீது மதுரை திருமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்ததும் அம்பலமானது.

இந்த நிலையில் நிகிதா குடும்பத்திடம் பணம் கொடுத்து ஏமாந்த ராஜங்கம் என்பவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், என்னுடைய பிஎட் மாணவிதான் நிகிதா. தற்போது பேராசிரியராக பணிபுரிகிறார். 2011-ல் ஆசிரியர் பணி வாங்கி தருவதாக கூறி ரூ16 லட்சம் மோசடி செய்தார் நிகிதா. நிகிதாவின் தாயார், அவரது உறவினர் ஜெயபெருமாள் உள்ளிட்டோர் இப்படி பலரிடமும் பல கோடி ரூபாய் மோசடி செய்துள்ளனர். கடந்த 10 நாட்களுக்கு முன்னர் கூட, நிகிதா குடும்பத்தினரிடம் மோசடி செய்த எங்களது பணத்தை திருப்பித் தர வேண்டும் என கேட்டோம். ஆனால் அப்போதும் எங்களை நிகிதா குடும்பம் மிரட்டியது. நிகிதாவால் பாதிக்கப்பட்ட எங்களுக்கும் நீதி வேண்டும் என்றார்.